ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன.

குவார்க்குகள்
தனியான குவார்க்குகள் இயற்கையில் கிடைப்பதில்லை. கட்டுண்ட இணைந்த நிலையில் உள்ள குவார்க்குகள் வன்மி அல்லது ஆட்ரான் (Hadron) எனப் பொதுவான பெயரைக் கொண்டுள்ளது. வன்மிகள் (ஆட்ரான்கள்) அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகள் எப்படி மின்காந்த விசையால் கட்டுண்டு உள்ளதோ அது போலவே அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருக்கும் துகள்கள் வன்மிகள் (ஆட்ரான்கள்) ஆகும். அணுக்கரு வன்விசை புவியீர்ப்பு விசைபோல 1038 மடங்கு மிகுந்த வலுவுடைய விசையாகும்.
இரு குவார்க்குகள் (வன்மிகள்) இணைந்து உருவானவை இடைமிகள் (மேசான்கள், mesons) என்றும் மூன்று வன்மிகள் சேர்ந்தவை பாரியான்கள் (baryon) என்றும அழைக்கப்படுகின்றன. நேர்மின்னிகளும், நொதுமிகளும் பாரியான்கள் வகையைச் சேர்ந்தது ஆகும். இடைமிகளில் (மேசான்களில்) பல வகைகள் உள்ளன.
லெப்டான்கள்
லெப்டான்கள் (Lepton) அல்லது மென்மிகள் அணுக்கூறின் மற்றொரு அடிப்படைத் துகள்கள் வகையாகும். இவற்றுள் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஏற்றம் கொண்டவை (எ.கா: எதிர்மின்னிகள்); நடுநிலையானவை (எ.கா: நுண்நொதுமிகள்/ நியூட்ரினோக்கள்)
தொடர்புடைய தலைப்புகள்:
- அணுத்துகள்
- அணுக்கொள்கை