அணுத்துகள்

Posted by

பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது  இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது.

 அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி (spin) என்று மூன்று முக்கிய பண்புகள் உண்டு. (2) இவற்றின் உள்வகைகளை வகைப்படுத்த “மணம்” (flavor) எனும் சொல் பயன்பயன்படுத்தப்படுகின்றது.  இந்த “மணம்” நுகரும் மணம் இல்லை.பின்வருவன அடிப்படைத்துகள்கள் வகையில் அடங்குகின்றன: 

அடிப்படை ஃபேர்மியோன்கள் (Fermion)

–    இவை பொருளுக்குரிய துகள்கள் (Matter particles) ஆகும். குவார்க்குகள்,  லெப்டான்கள் இவற்றுள் அடங்கும்.

 • குவார்க்குகள்  (Quarks)

ஆறுவகையான மணங்கள்:

 1. மேல் (up),
 2. கீழ் (down)
 3. ஏதிலி (strange)
 4. கவர்ச்சி (charm),
 5. அடி (bottom),
 6. உச்சி (top)
 •  லெப்டான்கள் (மென்மிகள்) (Leptons)

ஆறுவகையான மணங்கள்:

 1. எதிர்மின்னி (இலத்திரன்) e (Le=1, Q = −1, YW= −1)
 2. எதிர்மின்னி நுண்நொதுமி (எதிர்மின்னி நியூட்ரினோ) νe (Le=1, Q=0, YW = −1)
 3. மியூவான் μ (Lμ=1, Q=−1, YW = −1)
 4. மியூவான் நுண்நொதுமி (மியுவான் நியூட்ரினோ) νμ (Lμ=1, Q=0, YW = −1)
 5. டௌவான் (டௌ துகள்) τ (Lτ=1, Q = −1, YW = −1)
 6. டௌவான் நுண்நொதுமி (டௌவான் நியூட்ரினோ) ντ (Lτ=1, Q=0, YW = −1)

 

அடிப்படை போசோன்கள் (Bosons)

போசோன்கள் கட்டுண்ட நிலையிலும் உள்ளன. அடிப்படைத்துகள் வகையிலும் உள்ளன, அவ்வாறு உள்ள அடிப்படை போசோன்கள் :

விசைகாவி போசோன்கள் (Gauge bosons) : மின்காந்தவியல் விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை எனும் அடிப்படை விசைகளைக் காவும் அடிப்படை அணுத்துகள் விசைகாவி போசோன்கள் ஆகும்.

 1. மின்காந்தவியல் விசையைக் காவும் ஒளியன்கள் (photons / போட்டோன்கள்)
 2. மென்விசையைக் காவும் W மற்றும் Z போசோன்கள்
 3. அணுவின் கருப் பெருவிசையைக் காவும் ஒட்டுமின்னிகள் (gluons)
 4. கிராவிட்டன்கள் (Gravitons) எனும் ஈர்ப்புவிசையைக் காவும் துகள்

 

ஹிக்ஸ் போசோன் (Higgs Boson) : புரோட்டானின் நிறைக்கு அணுத்துகள் ஒன்றுதான் அடிப்படைக் காரணம் எனக் கருதுகோள் தோன்றியது, புரோட்டானுக்கு நிறையை அளிக்கும் அடிப்படையான கட்டமைப்பைக் குறித்து விவரித்த அறிவியளாலர் பீட்டர் ஹிக்ஸின் பெயர் கொண்டு அத்துகளுக்கு ஹிக்ஸ் போஸன் என்று வழங்கப்பட்டது. இதனையே கடவுள் துகள் (God particles) என்றும் அழைக்கின்றனர், இது தவறுதலாக விளங்கிக்கொள்ளப்படுவதும் உண்டு.

 

இவை தவிர ஒவ்வொரு பொருளுக்குரிய துகளுக்கும் அதற்கு எதிரான துகள்கள் இருப்பதுண்டு, அவை எதிர்ப்பொருள்(anti-matter) எனப்படும். உதாரணமாக, எதிர்மின்னிக்கு எதிரான துகள் பொசித்திரன் (positron) ஆகும்.

கட்டுண்ட துகள்கள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டஅடிப்படைத்துகள்கள் இணைந்து கட்டுண்ட நிலையில் காணப்படும் நிலையாகும். கட்டுண்ட இணைந்த நிலையில் உள்ள துகள்கள் வன்மி அல்லது ஆட்ரான் (Hadron) எனப் பொதுவான பெயரைக் கொண்டுள்ளது. வன்மிகள் (ஆட்ரான்கள்) அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகள் எப்படி மின்காந்த விசையால் கட்டுண்டு உள்ளதோ அது போலவே அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருக்கும் துகள்கள் வன்மிகள் (ஆட்ரான்கள்) ஆகும். இவற்றுள் பாரியான்கள் (baryon)  , இடைமிகள்  (மேசான்கள், mesons) அடங்குகின்றன.

பாரியான்கள் (baryon) 

இவை கட்டுண்ட நிலையில் உள்ள ஃபேர்மியோன்கள் ஆகும். இயல்பு நிலையில் உள்ள பாரியான்கள் மூன்று வலுவளவைக் கொண்ட குவார்க்குகளையும்  மூன்று வலுவளவைக் கொண்ட எதிர்-குவார்க்குகளையும் கொண்டது.

 

 1. அணுக்கருனி (நியூக்ளியான், Nucleon) :

1.1.     புரோட்டான் (நேர்மின்னிகள்) Proton

1.2.     நியூட்ரான் (நொதுமிகள்) Neutron

 1. ஐப்பெரோன்கள் (Hyperon)

 

. இடைமிகள்  ( mesons)

கட்டுண்ட நிலையில் உள்ள போசோன்கள்: பையோன், கேயோன்

 

Works Cited

1. Wikipedia. Subatomic particle. Wikipedia. [Online] http://en.wikipedia.org/wiki/Subatomic_particle.

2. துகள், அடிப்படைத். அடிப்படைத் துகள். அடிப்படைத் துகள். [Online] http://tawp.in/r/22lo.

3. Projects by Students for Students. [Online] http://library.thinkquest.org/18188/english/universe/theory/element.htm.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/nFTYq

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eleven − five =