கலம் (உயிரணு) – அறிமுகம் : உயிரணுக் கொள்கை

Posted by

உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு (கலம்) ஆகும். உயிரினங்கள் தனியொரு உயிரணுவாலோ அல்லது பல உயிரணுக்களின் சேர்க்கையாலோ ஆக்கப்பட்டவை. தனியொரு உயிரணுவினால் உருவான உயிரினங்களாக அமீபா, பக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள் பல்லுயிரணுக்களுக்கு உதாரணமாகும்.

விலங்குகளின் உயிரணு தாவரங்களினதில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. விலங்குகளில் உயிரணுக்கள் பல சேர்ந்து இழையங்களாகவும் (tissue) பல இழையங்கள் சேர்ந்து உறுப்புக்கள் (organs) தோன்றியும் உறுப்புக்களின் தொகுப்பு தொகுதியாகவும் (system) இறுதியில் பல தொகுதிகள் சேர்ந்து ஒரு உயிரினமாகின்றது.உயிரணு –> இழையங்கள் –> உறுப்புக்கள் –> தொகுதி –> உயிரினம்

 

வரலாறு

ரொபர்ட் கூக் (Robert Hooke) என்பவரால் முதன் முதலில் உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆங்கிலேய [[நுண்ணோக்கி]] ஆராய்Œச்சியாளர் 1665šம் ஆண்டு தான்‹ உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியாšல் தக்கைகளின்‹ மெšல்லிய பகுதியினை ஆராŒய்ந்தார். அதன் போது கண்ணுற்ற தே‹ன்கூடு போšல் காணப்பட்ட சிறுசிறு அறைப் பகுதிகளுக்கு ‘செல் (cell)’ எனப்பெயரிட்டார். இலத்தீன் சொல்லான cellula என்பதில் இருந்தே cell எனும் சொல் உருவாகியது, இதற்கு அர்த்தம் ‘அறை’ என்பதாகும்.

உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை)

1838 – 39š காலப்பகுதியில் மத்தியாசு இயாகோப் சிலெய்டன் ‹(Matthias Jakob Schleiden) மற்றும் தியோடர் சுவான் ( Theodor Schwann) என்‹பவர்களாšல் உயிரணுக் கொள்கை வெளியிடப்பட்டது.

இக்š கொŸள்கையிšல் (சிலெய்டன் – சுவான் ) உள்ள மூன்று கூறுகள்: (1)

* அனைத்து உயிர்களும் ஆக்கப்படுவதற்கு உயிரணு ஒரு தெளிவான உருப்படியாகவும் கட்டடக்கண்டமாகவும் (building block) விளங்குகின்றது.
* உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு ஆகும்.
* ஒரு உயிரணு சுயமாக உருவாகின்றது. இது படிகம் உருவாதல் போன்ற ஒரு சுயமான உருவாக்கம் ஆகும்.

இக்கொள்கையில் மூன்றாவது தவறானது எனக் கருதப்படவே 1858 இல் உருடோல்வ் விர்ச்சோ (Rudolf Virchow) என்பவரால் “ஒரு உயிரணு ஏற்கனவே உள்ள உயிரணுவில் இருந்தே உருவாகிறது” (omni cellulae e cellula) என்று மாற்றப்பட்டது.

தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பயன்பாட்டில் உள்ள புதிய கொள்கை:

* அனைத்து உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை.

· உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு ஆகும்.

· ஒரு உயிரணு ஏற்கனவே உள்ள உயிரணுவில் இருந்தே உயிரணுப் பிரிவின் (கலப்பிரிவு) மூலம் உருவாகிறது. (சுயமான உருவாக்கம் அல்ல)

· உயிரணுவில் பரம்பரைக்குரிய தகவல்கள் (டி.என்.ஏ) காணப்படுவதுடன் கலப்பிரிவு மூலம் மற்றைய கலத்துக்குக் கடத்தப்படுகின்றன.

· ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரிகளில் உயிரணுவின் வேதியல் உள்ளடக்கங்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும்.

· வளர்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் உயிரணுவின் உள்ளேயே நடைபெறுகின்றன.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/lWHfu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன