டைட்டானிக் பாக்டீரியா

Posted by

துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹலோமொனஸ் டைட்டானிசே (Halomonas titanicae) என்ற உயிரியல் பெயர் கொண்ட புதுவித பாக்டீரியா இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்துகிறது. கூரான பனிக்கட்டிகள் தொங்குவது போன்று,நுண் துளைகளைக் கொண்ட,எளிதில் உருக்குலைந்துவிடும் அமைப்பானது இரும்பில் உருவாகுகின்றது; கூர்த்துருத்துகள்கள் (rusticles) என்றழைக்கப்படும் இந்த அமைப்பிலேயே 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப் பாக்டீரிய இனங்கள் அங்குள்ள இரும்பை உணவாகக் கொண்டு வசிக்கின்றன.

 

இதன் காரணமாக இறுதியில் டைட்டானிக் கப்பலின் மீதிகள் முற்றிலும் மறைந்துவிடும். முன்னைய காலங்களில் கடலுக்கு ஆழத்தில் மூழ்கிப்போன கப்பல்கள் உருத்தெரியாமல் மறைந்து போனதுக்குக் காரணம் என நம்பப்படுகின்றது.

2010ம் ஆண்டு கூர்துருத்துகள்களின் மாதிரிகள் மீர்-2 எனும் தானியங்கி நீர்மூழ்கிக் கருவியின் உதவியுடன் எடுக்கப்பட்டன. கனடாவில் உள்ள பல்கலைக்கழகமும் எசுப்பானியப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நுண்ணுயிரியை மாதிரிகளில் இருந்து பிரித்தெடுத்தனர், இது உப்பை விரும்பும்ஹலோமொனஸ் பிரிவைச் சேர்ந்த இனமென்பது அறியப்பட்டது.
இந்தப் பாக்டீரியா மூலம் கூர்த்துருத்துகள்கள் பற்றிய படிப்பினை பிற்காலத்தில் இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் நீருள் அமிழ்ந்துள்ள உலோகங்கள் நுண்ணங்கிகளால் மாற்றத்துக்கு உட்படுவது பற்றி ஆராய முடியும்.

இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்:

http://forum.palkalaikazhakam.com/viewtopic.php?f=159&t=110

http://www.bbc.co.uk/news/science-environment-11926932
http://ijs.sgmjournals.org/cgi/rapidpdf/ijs.0.020628-0v2.pdf

http://species.asu.edu/2011_species03

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/hrJLa

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

7 − four =