செய்திகள்
உயிர்காப்பு உடன்பிறப்பு (savior sibling அல்லது saviour sibling) என்பது சில பாரதூரமான நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை ஆகும். (1) ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் சம்பந்தமான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. அத்தகைய உயிரணுக்களோ அல்லது உறுப்புக்களோ மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறப்படல் அவசியமாகின்றது, இந்தத் தேவைக்கு உடன் பிறந்த நோயற்ற சகோதரர் ஒருவரே உதவ முடியும். (2) உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் புற உயிர்க்கருக்கட்டல் முறைமூலம் விருத்தி செய்யப்படுகின்றது. பயன்பாடு குருதியணுமூலக் குருத்தணுக்கள் மாற்றுப்பொருத்தல் (hematopoietic stem cell transplantation) தேவையான எந்தவொரு நோய்க்கும் உயிர்காப்பு உடன்பிறப்பு முறை தீர்வாக அமைகின்றது. இவ்வகையில் மரபியல் நோய்களான ஃபன்கொனியின் இரத்தச்சோகை, இடயமொந்து – பிளாக்ஃபான் இரத்தச்சோகை, பீட்டா தலசேமியா போன்றவை உதாரணங்கள் ஆகும். லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய்க்கும் இம்முறை மூலம் சிகிச்சை அளிக்கலாம். இதில் ஃபன்கொனியின் இரத்தச்சோகை மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி நோயாகும், இதுவே வேறு நோய்கள் ஏற்படவும் வழிகோலியாக இருக்கின்றது. செயன்முறை நோய் கொண்டுள்ள குழந்தையின் பெற்றோர்களின் விந்தணுக்களும் கருமுட்டைகளும் புறவுயிர்க் கருக்கட்டல் முறைமூலம் ஆய்வகத்தில் இணைக்கப்பட்டு சில கருவணுக்கள் (நுகம்) உருவாக்கப்படுகின்றன. கருக்கட்டப்பட்ட கருவணுக்களானது கருப்பதியமுன் மரபியல் அறுதியிடல் (PGD) மூலம் மரபியல் ஒவ்வுமைப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு (HLA – மனித வெள்ளையணு பிறபொருளெதிரி வகைப்படுத்தல்) நோயுற்ற குழந்தைக்கு ஒத்துப்போகும் ஒவ்வுமை உடைய கருவணு ஒன்று தெரிந்தெடுக்கப்படுகின்றது. இந்தக் கருவணுவானது தாயின் கருப்பையில் பதியம் செய்யப்படுகிறது. கருவணுக்கள் அந்தக் குறிப்பிட்ட மரபியல் நோயைக் கொண்டுள்ளதா எனும் சோதனையும் இதில் மேற்கொள்ளப்பட்டு ஆரோக்கியமான கருவணுவே பதியம் செய்யப்படுகின்றது. உயிர்காப்பு உடன்பிறப்பு பிறக்கும் பொழுது தொப்புள்கொடியில் இருந்து அல்லது சூல்வித்தகத்தில் இருந்து குருதி எடுக்கப்படுகிறது; எடுக்கப்பட்ட இக்குருதியின் குருத்தணுக்கள் நோயுற்ற குழந்தைக்குச் செலுத்துவதற்காகப் பராமரிக்கப்பட்டு பின்னர் நோயுற்ற குழந்தையுள், பொதுவாக, என்புமச்சைக்குள் செலுத்தப்படுகிறது. வரலாறு முதலாவது உயிர்காப்பு […]
முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் (arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல்நிறமான ஒளிபுகாத வளையமொன்று கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் காணப்படுவது ஆகும். இது பிறப்பின்போது காணப்பட்டுப் பின்னர் மறைந்துவிடும், எனினும் 60 – 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாகக் காணப்படலாம், குருதியில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளோரில் அல்லது நீரிழிவு நோயுள்ளவர்களில் ஆரம்பகாலங்களிலேயே (40 வயதளவில்) தோன்றலாம், எனினும் இது எவ்வித நோய்கள் இல்லாமலும் தோன்றலாம், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கும் குடும்பத்தில் உள்ளோருக்கும் பரம்பரை உயர் குருதிக் கொலஸ்ட்ரால் நோய் உண்டா எனப் பார்ப்பது சாலச் சிறந்தது. பொதுவாக இவ்வளையம் கருவிழிப்படலத்தின் ஏதாவது ஒருபகுதியைச் சுற்றி பிறைவடிவான வளையமாக அல்லது கருவிழிப்படலத்தை முற்றாகவும் சூழ்ந்து முழுவட்டமாகக் காணப்படும். கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் கொழுப்புப் படிவதே இதன் காரணமாகும். ஒருபக்கக் கண்ணில் மட்டும் தோன்றினால் இவ்வளையம் தோன்றாத கண்ணுக்குக் குருதியோட்டம் குறைவு எனக் கருதவேண்டும்.
அன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து ‘சி’யையும் மிகுந்தளவில் கொண்டுள்ளது. இதில் காணப்படும் புரோமேலயின் எனும் நொதியம் புரதத்தை சமிபாடு அடையச்செய்யும், எனவே மிக்க புரதச்சத்து உள்ள உணவு (இறைச்சி போன்றன) உண்பவர்கள் சாப்பாட்டின் இறுதியில் இதனை உண்டால் நன்கு சமிபாடு அடையச்செய்யும்.மருத்துவ ஆற்றல்கள் உடலில் குருதி (இரத்தம்) இழக்கப்பட்டோ அல்லது குறைவடைந்தோ காணப்படும் நிலையில் அன்னாசிப்பழம் ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக உதவிபுரிகிறது. அனிமியா எனப்படும் இரத்தசோகை, பெண்களில் மாதவிலக்கால் ஏற்படும் அதிக குருதிப்போக்கு போன்றன குருதிப் பற்றாக்குறைக்கான காரணிகள் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரண உறுப்புக்களை வலுப்படுத்துவதில் அன்னாசி உதவுகின்றது. ஏற்கனவே கூறியதுபோல புரதத்தின் சமிபாட்டை இலகுவாக்குவதன்மூலம் சீரண உறுப்புக்களுக்கு அதிக வேலையைக் கொடுப்பதில்லை. பித்தசம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசிமந்தம் போன்றவற்றை நீக்கப் பயன்படும். அன்னாசிச்சாறு மஞ்சள்காமாலை நோய் குணப்படுவதை துரிதப்படுத்தும். பொதுவாகப் பெண்களில் ஏற்படும் வெள்ளை நோயைப் (வெட்டை நோய் ) போக்க அன்னாசியின் நீண்டகாலப் பயன்பாடு உதவி புரிகின்றது. இவற்றை விட தலைவலி, கண்நோய்கள், காதுநோய்கள், பல்நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்தி குறைவு போன்றவற்றின் தீர்வுக்கும் அன்னாசி மிக்க உதவி புரிகின்றது. அன்னாசியின் வேர்களை அல்லது பழத்தை அரைத்து தோலில் பூசுவதன் மூலம் காயங்களால் ஏற்பட்ட வீக்கம் குணமடையும். அன்னாசி வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும் சக்தி உடையது என பிலிப்பின்ஸ் நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தொந்தி அல்லது தொப்பை குறைக்கும் […]
மஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது. மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.தமிழரின் தொன்மையான உணவுப் பழக்கமுறைகளில் மஞ்சள் பயன்படுத்துதலும் ஒன்று. அன்றைய தமிழரின் மருத்துவத்தில் இன்றியமையாத மஞ்சளின் ஒவ்வொரு குணங்களும் இன்றைய அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. மருத்துவ ஆற்றல்கள் – பயன்படுத்தும் முறை 1. நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல்: மஞ்சள் நீரை வீடுகளில் தெளித்தல் ஒரு சிறந்த நுண்ணுயிரித் தடுப்பாகும்.2. காயங்கள், புண்கள்: அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, காயங்களுக்கும்புண்களுக்கும் போட்டால், விரைவில் ஆறாத காயங்கள் ஆறும்.3. சேற்றுப் புண்: மஞ்சளையும், கடுக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து கலக்கவும். இரவுபடுக்கும் முன் கால் விரல்களைச் சுத்தம் செய்த பின் சேற்றுப் புண் வந்த இடத்தில் தடவினால் சில நாட்களில் சேற்றுப்புண் குணமாகும். அல்லது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் கலந்து பூசி வரலாம்.4. சமிபாட்டுக் குறைபாடு:கொஞ்சம் மஞ்சள் தூளை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அதனைக் குடித்தால் குணமாகும். சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. கறியில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம் இந்த விளைவைப் பெறலாம். 5. குடற்கிருமிகள் :மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த […]
கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) என்பது கண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans) என்னும் பூஞ்சையால் (ஒரு வகை மதுவம்) ஏற்படும் தருணத் தொற்று ஆகும். எய்ட்ஸ் உட்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரில் இந்நோய் ஏற்படுகின்றது, பூஞ்சை முக்கியகூறாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பியை[1] நீண்டகாலமாகப் பயன்படுத்துவோருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நோய்த் தோற்றம் கண்டிடா உணவுக்குழாய் அழற்சி உடையவருக்கு மார்பெலும்பின் பிற்பகுதியில் விழுங்கும்போது வலி (விழுங்கல்வலி) ஏற்படுகின்றது.[1] நீண்டகால கண்டிடா அழற்சியால் எடை குறைவடையும். இத்தகைய நோய் உடையோரில் நாக்கில் அல்லது வாயின் பக்கத்தில் உள்ள சீதமென்சவ்வில் வெண்படலம் உண்டாகும், இது ‘கண்டிடா வாய்வெண்படலம்’ (oral thrush) எனப்படும்; இதை வழித்தெடுத்தால் அகன்றுவிடும், ஆனால் அவ்விடத்தில் குருதிக்கசிவு ஏற்படும், இத்தகைய வெண்படலம் கண்டிடாவினால் ஏற்படும் ஏனைய நோய்களிலும் காணப்படலாம். அறுதியிடல் உணவுக்குழாய் இரையக அகநோக்கி மூலம் கண்டிடா அல்பிக்கன்சு பூஞ்சையால் ஏற்படும் வெண்மையான படிவுகளை அல்லது படலங்களை நோக்கலாம், இவை இலகுவில் அகற்றப்படக்கூடியனவாக இருக்கும், அகநோக்கி [[உயிரகச்செதுக்கு]] மூலம் படலத்தின் சிறு பகுதி அகற்றப்பட்டு, பின்னர், ஆய்வுகூடத்தில் கண்டிடா பூஞ்சை இனம் நுணுக்குக்காட்டி மூலம் அறியப்படும். சிகிச்சை கண்டிடாவுக்கு முதல்நிலைச் சிகிச்சையாக 750 மில்லிகிராம் ஃபுளுக்கொனசோல் (fluconazole) மாத்திரை ஒருவேளைக்கு மட்டும் கொடுக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் பரந்துபட்டுள்ளது, [2] எனினும் 14 நாட்கள் 150 மில்லிகிராம் பயன்படுத்தும் வழமையான முறையும் உண்டு. வேறு மாத்திரைகள்: நிச்டட்டின் (nystatin) இத்ராகோனாசோல் (itraconazole) போன்ற வேறு திரையாசோல் (triazoles) மருந்துகள் மேற்கோள்கள் ↑ 1.01.0 1.11.1 Lawrence M. Tierney, Jr., MD; Stephen J. McPhee, MD; Maxine A. Papadakis, MD. (2007). Current Medical Diagnosis & Treatment 2007 (46 ed.). The McGraw-Hill Companies. ISBNISBN 00714724790071472479. ↑ Hamza OJM, Matee MIN, Brüggemann RJM, et al. (2008). “Single-dose fluconazole versus standard 2-week […]
துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹலோமொனஸ் டைட்டானிசே (Halomonas titanicae) என்ற உயிரியல் பெயர் கொண்ட புதுவித பாக்டீரியா இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்துகிறது. கூரான பனிக்கட்டிகள் தொங்குவது போன்று,நுண் துளைகளைக் கொண்ட,எளிதில் உருக்குலைந்துவிடும் அமைப்பானது இரும்பில் உருவாகுகின்றது; கூர்த்துருத்துகள்கள் (rusticles) என்றழைக்கப்படும் இந்த அமைப்பிலேயே 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப் பாக்டீரிய இனங்கள் அங்குள்ள இரும்பை உணவாகக் கொண்டு வசிக்கின்றன. இதன் காரணமாக இறுதியில் டைட்டானிக் கப்பலின் மீதிகள் முற்றிலும் மறைந்துவிடும். முன்னைய காலங்களில் கடலுக்கு ஆழத்தில் மூழ்கிப்போன கப்பல்கள் உருத்தெரியாமல் மறைந்து போனதுக்குக் காரணம் என நம்பப்படுகின்றது. 2010ம் ஆண்டு கூர்துருத்துகள்களின் மாதிரிகள் மீர்-2 எனும் தானியங்கி நீர்மூழ்கிக் கருவியின் உதவியுடன் எடுக்கப்பட்டன. கனடாவில் உள்ள பல்கலைக்கழகமும் எசுப்பானியப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நுண்ணுயிரியை மாதிரிகளில் இருந்து பிரித்தெடுத்தனர், இது உப்பை விரும்பும்ஹலோமொனஸ் பிரிவைச் சேர்ந்த இனமென்பது அறியப்பட்டது. இந்தப் பாக்டீரியா மூலம் கூர்த்துருத்துகள்கள் பற்றிய படிப்பினை பிற்காலத்தில் இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் நீருள் அமிழ்ந்துள்ள உலோகங்கள் நுண்ணங்கிகளால் மாற்றத்துக்கு உட்படுவது பற்றி ஆராய முடியும். இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்: http://forum.palkalaikazhakam.com/viewtopic.php?f=159&t=110 http://www.bbc.co.uk/news/science-environment-11926932 http://ijs.sgmjournals.org/cgi/rapidpdf/ijs.0.020628-0v2.pdf http://species.asu.edu/2011_species03
பிரஸ்பையோப்பியா (presbyopia) அல்லது மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது. வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே மூப்புப்பார்வையும் (பிரஸ்பையோப்பியாவும்) முதுமை நிலைக்கான தொடக்கநிலையை நினைவு படுத்தும் ஓர் இயற்கையான குறைபாடாகும். குறைபாட்டின் முதல் அறிகுறி வழமையாக நாற்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட வயதுக் காலத்தில் காணப்படுகிறது. வயது கூடக்கூட அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது குவியமின்மை இழத்தலால் கடினமாகிக்கொண்டே போகும்.மூப்புப்பார்வை (பிரஸ்பையோப்பியா) எட்டப்பார்வை அல்லது தூரத்துப் பார்வை என்று அழைக்கப்படும் ஐப்பெர்மெட்ரோப்பியாவுடன் தவறுதலாக ஒப்பிடப்படலாம், இவை இரண்டும் வெவ்வேறு குறைபாடுகள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பிரஸ்பையோப்பியாவில் குறைபாடானது வில்லையில் காணப்படுகையில் ஐப்பெர்மெட்ரோப்பியாவில் விழிக்கோளத்தில் ஏற்படும் ஒளிமுறிவுப் பிழை ஆகும்[1][2] பிரஸ்பையோப்பியா என்ற சொல்லானது, “முதியவர்” என்னும் கருத்துத் தரும் கிரேக்கச் சொல்லான presbys (πρέσβυς) உடன் புதிய இலத்தின் விகுதியான -opia, என்னும் “பார்வைத் தன்மை” சேர்ந்து உருவாகியது. தமிழில் முதிய வயதுக்கான பார்வை என்று பொருள் படுத்தலாம்[3] அறிகுறிகள் முதல் அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர் மிகச் சிறிய எழுத்துக்களை மங்கலான ஒளியில் படிக்கச் சிரமப்படுவார், தொடர்ச்சியாகப் படிக்கமுடியாது விழிக்களைப்பு, தலைவலி ஏற்படும், நாட்கள் செல்லச் செல்ல எழுத்துக்கள் மங்கலாகிக் கொண்டே செல்லும், இதனைத் தடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர் படிக்கும் புத்தகத்தை முகத்திலிருந்து நீட்டிக்கொண்டே செல்வார். கடைசியில் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையின் நீளம் போதாதென்ற நிலைமையும் வந்து சேரலாம்[4]. மூப்புப் பார்வை பிரகாசமான வெளிச்சத்தில் பெரிதாக அவதானிக்கப் படுவதில்லை. மேலும் குறிப்பிடத்தக்கதாக வேறு ஏதேனும் கடின வேலை செய்தால், அல்லது நீண்ட நேரம் கண்ணிற்கு வேலை […]
முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா (Phylum Echinodermata) கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குகளின் ஒரு தொகுதியாகும். அலையிடை மண்டலம் தொடக்கம் ஆழ்கடல் மண்டலம் வரையிலானபெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. இத்தொகுதியில் ஏறத்தாழ 7000 இனங்கள் உயிர்வாழ்கின்றன. எண்ணிக்கையில் இரண்டாவதாக, முதுகுநாணிகளை அடுத்து இருவாயுளிகள் (டியூட்டெரோஸ்டோமியா; Deuterostomia) பெருந்தொகுதிக்குள் அடங்கும் உயிரினத் தொகுதி ஆகும். இவை நன்னீரிலோ நிலப்பகுதிகளிலோ வசிப்பது இல்லை. கிரேக்க ἐχινοδέρματα (ἐχινός– முட்கள் , δέρμα– தோல்; முள்ளை உடைய தோல்) எனும் சொல்லில் இருந்து சொல் பிறந்தது. வகைப்படுத்தல் இத்தொகுதியுள் அடங்கும் இரண்டு பரிச்சயமான துணைத்தொகுதிகள்: அசையக்கூடிய எலேயுதேரோசோவா (Eleutherozoa) அஸ்டிரோய்டியா(Asteroidea): (நட்சத்திரமீன்), ஒபியுரோய்டியா(Ophiuroidea): நொறுங்கு நட்சத்திரம் அல்லது ஒடி நட்சத்திர மீன் (brittle stars), எக்கைனோய்டியா(Echinoidea): கடல் முள்ளெலி(sea urchins), மணற்காசு (sand dollars), ஹொலோதுரோய்டியா (Holothuroidea): கடல்வெள்ளரி(sea cucumbers) அசையாத பெல்மட்டாசோவா (Pelmatazoa) – இவை கடலில் ஏதாவது பாறைகளை அல்லது பொருட்களை ஊடுருவிப் பற்றிக் கொள்ளும், இதற்கென இவற்றிற்குத் தண்டு போன்றதொரு அமைப்பு உண்டு. கிரினோய்ட்டுக்கள் (crinoids) அல்லது கடல் அல்லி, அழிந்துவிட்ட பராகிரினோய்ட்டுக்கள் இவற்றுள் இறகு விண்மீன்கள் (feather stars) எனப் பெயர் கொண்ட சில வகை கடல் அல்லி இனங்கள் அசையக்கூடியவை. படத்தொகுப்பு:
புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று செய்திகள் படிக்கின்றோம், அவை எங்கே அமைந்துள்ளன? அங்கு உயிரினம் உண்டா? எங்கள் பூமி போன்றே அவற்றின் அமைப்பு உள்ளதா என்பது பற்றிப் பார்க்கத் தொடங்கினால் மிகவும் சுவையான விடயமாக இருக்கும். நாம் வாழும் பூமி, பூமிக்கு சக்தி வழங்கும் கதிரவன், சகோதரக் குடும்பங்கள் இவை யாவும் சேர்த்து சூரியக் குடும்பம் என்கின்றோம். நமது சூரியன் ஒரு வகை நட்சத்திரம் எனக் கருதுகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ கிரகங்களும் விண் கற்களும் வலம் வருகின்றன. இதனைப் போல பல்வேறு நட்சத்திரங்கள் அண்டவெளியில் பரவிக் கிடக்கின்றது, அவற்றிற்கும் கிரகங்கள் உண்டு. நாம் இங்கு பார்க்கப்போவது ‘கிளீசு’ (Gliese) என அழைக்கப்படும் நட்சத்திரங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம். 1957 இல் ஜெர்மனிய நாட்டு வானியல் வல்லுனர் வில்கேல்ம் கிளீஸ் (21 சூன் 1915 – 12 சூன் 1993) என்பவர் நம் பூமிக்கு அண்மையில் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார், 1969இல் இந்தத் தொகுப்பு மேலும் விரிவடைந்தது. இவரது பெயரால் மேற்கொண்டு கண்டுபிடிக்கப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் பெயரிடப்பட்டு வருகின்றது. சமீபத்தில் உயிரினம் வசிக்கக்கூடிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பெயர் கிளீஸ்581 ஜி. உங்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டோ இல்லையோ, சோதிடக் கணிப்பில் இராசி, நட்சத்திரங்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? மேற்கத்தேய இராசி கணிப்பீடுகளுக்கும் தமிழ் கணிப்பீடுகளுக்கும் மாற்றங்கள் உண்டு. உதாரணமாக தமிழில் ‘மீனராசி’ , மேற்கத்தேய முறைப்படி ‘கன்னிராசி’. மொத்தமாக 27நட்சத்திரங்கள், அவற்றிற்கேற்ப வகைப்படுத்தப்பட்டு இருக்கும் 12 இராசிகள், எனத் தமிழில் இருக்கும் அதே சமயம் மேற்கத்தேய சோதிடத்திலும் 12 இராசிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த விபரங்கள் தேவை? சற்றுச் சிந்தித்தால் தென்படலாம். இது இவ்வாறிருக்க நாம் விண்மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிப் பார்ப்போம். சில விண்மீன்கள் அடங்கிய ஒரு தொகுதியை உடுக்குவிள் (constellation ) என்பர். மீனராசியை எடுத்தால் அது மீனம் எனும் […]
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. பெருந்தமனி அடைப்பிதழ் படிப்படியாகக் குறுக்கம் அடையும்போது இடது கீழ் இதயவறையிலிருந்து குருதி குறுகிய துவாரமூடாக செலுத்தப்படவேண்டியதாகின்றது, இதனால் பெருந்தமனிக்கும் இ.கீ.இதயவறைக்கும் இடையே மாறுபட்ட அழுத்த வேறுபாடு உருவாகின்றது, இந்த வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக, இ.கீ.இதயவறையுள் உயர்வடைந்த அழுத்தத்தைச் சமாளிக்குமுகமாக இ.கீ.இதயவறையின் சுவர் தடிப்படைகிறது (2)(தசைமிகைவளர்ச்சி), எனினும் இதயவறை விரிவடைவதில்லை. இ.கீ.இதயவறையின் சுவர் மட்டும் தடிப்படைய இதயவறையுள் மாற்றம் நேரிடாத நிலை ஒருமையத் தசைமிகைவளர்ச்சி (concentric hypertrophy) எனப்படும்(3). இந்த நிலையில் இ.கீ.இதயவறையின் சுருங்கும் செயற்பாடு பாதிப்படைவதில்லை, வருடக் கணக்கில் இதயவறை விரிவடையாமல் இதய வெளியேற்றவளவு மாறுபடாமல் அழுத்தவேறுபாடு காணப்படலாம். (4)(5) நோயின் காலம், தீவிரம் அதிகமாகிக் கடைசிக்கட்ட நிலையில் இ.கீ.இதயவறை விரிவடைகிறது மேலும் அதன் சுருங்கும் தன்மை பாதிப்படைகிறது. இதனால் இதய வெளியேற்றவளவு குறைகிறது; இதயத் தசைக்குரிய இரத்தவோட்டம் பாதிக்கப்படுகிறது, இதனால் குருதியோட்டக்குறை ஏற்பட்டு மார்பு நெறிப்பு (அன்சைனா பெக்ரோறிசு) ஏற்படுகிறது. வலது இதயவறைகளில் அழுத்த உயர்வு காரணமாகவும் குருதியின் தேக்கத்தினாலும் சுவாசத்தொகுதியில் உயர் அழுத்தம், குருதித் தேக்கம் ஏற்படுகிறது. நோயின் இறுதிக்கட்டத்தில் தேக்க இதயச்செயலிழப்பு (congestive heart failure) ஏற்படுகிறது.(4) நோய்க்காரணம் பொதுவாக, முதியோர்களில் அடைப்பிதழில் கல்சியம் படிவதால் இந்த நிலை ஏற்படுகிறது, நோய் ஏற்படுவதற்கு 50 வீதத்திற்கு மேலான காரணியாக இது விளங்குகின்றது.(6) இருகூர்ப் பெருந்தமனி அடைப்பிதழ் எனப்படும் பிறப்பு நிலைக் கோளாறான மூன்று இதழ்களுக்குப் (முக்கூர்) பதிலாக இரண்டு […]
இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர்) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.இதயத்தில் காணப்படும் நான்கு வகையான அடைப்பிதழ்களாவன: · இரண்டு இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ் (ஏட்ரியோவென்றிக்குளர் – AV); இவை இடது, வலது இதயத்தின் மேல், கீழ் அறைகளைக்கிடையே அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் அல்லது மைட்ரல் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. · இரண்டு அரைமதி அடைப்பிதழ்கள்; பெருநாடி அடைப்பிதழ், நுரையீரல் அடைப்பிதழ் ஆகியன இதயத்தில் இருந்து தமனிகள் வெளியேறும் அமைவிடத்தில் காணப்படுகின்றன. இதய அடைப்பிதழ்கள் சரியாக உரிய நேரத்தில் மூடப்படாமல் தொழிற்பட்டால் குருதி ஒரு வழியே முன்னோக்கிப் பாய்வது தடைப்பட்டு, வந்தவழியே பிழையான திசையில் பின்னோக்கிப் பாயும், இந்த நிலை பின்னோழுக்கு எனப்படும். இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ் சிறிய அடைப்பிதழ்களான இவை, கீழிதயவறை சுருங்கும் போது அங்கிருந்து மேல் இதயவறைக்கு குருதி பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கிறது. இவை கீழிதயவறையுடன் இதயவாயினாண்கள் மூலமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டுள்ளன, இவை ஒன்று சேர்ந்து துணை அடைப்பிதழ் உபகரணம் என அழைக்கப்படுகிறது. இவற்றின் தொழிற்பாடு அடைப்பிதழ்களை கெட்டியாகப் பிடித்து வைத்திருத்தல் ஆகும். இதனால் அடைப்பிதழ் மேலிதயவறை நோக்கிப் புரட்டப்படுதல் தடுக்கப்படுகிறது. அடைப்பிதழ்களின் திறந்து மூடலில் துணை அடைப்பிதழ் உபகரணம் எந்தவித பங்கும் வகிப்பதில்லை, மாறாக, அமுக்க வித்தியாசத்தின் காரணத்தாலேயே அவை திறந்து மூடுகின்றன. இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ்கள் மூடும் ஒலியானது முதல் இதய ஒலி(S1) ஆகும். இருகூர் அடைப்பிதழ் […]
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது. இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும். இதனால் மூச்சு வழி தொடர்புடைய அறிகுறிகள் (இருமல், குரல் கரகரப்பு, ஆஸ்துமா) ஏற்படலாம். நோயின் காரணம் இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி காணப்படுகிறது, இது கீழ்க்கள இறுக்கி (lower oesophageal sphincter) எனப்படும், இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்; உணவுக் குழாயில் இருந்து உணவு இரைப்பைக்குச் செல்லும்போது இறுக்கி தளர்வடைவதால் உணவு இரைப்பைக்குள் செல்லமுடிகின்றது. உணவு உட்கொண்ட பிற்பாடு மீண்டும் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்படுகின்றது, இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது. சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும். இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும். இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குகின்றது, இது கையாட்டஸ் கேர்னியா எனப்படும். சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் […]
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு வேதியியல் விதிகள் சொல்லப்பட்டன. 1789 இல் அன்ரனி லாவோசியர் (Antoine Lavoisier) திணிவுக் காப்பு விதியை (law of conservation of mass) வழிமொழிந்தார், இதன்படி வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும். ஜோசெப் லூயிஸ் புரௌஸ்ட் (Joseph Louis Proust ) என்பவரால் திட்டவிகிதசமவிதி அல்லது மாறாவிகிதசமவிதி (Law of definite proportions / law of constant composition) நிறுவப்பட்டது: ஒரு சேர்மம் எந்தமுறையில் ஆக்கப்பட்டிருப்பினும் அதில் உள்ள தனிமங்களின் (மூலகங்களின்) திணிவு விகிதங்கள் ஒரு மாறிலி ஆகும். ஜோன் டால்டன் என்பவர் இவ்விதியுடன் தொடர்பு கொண்டதாக பல்விகிதசமவிதியை (law of multiple proportions) உருவாக்கினார்: இரு மூலகங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்வைகளை (சேர்மம்) ஆக்கும்போது ஒரு மூலகத்தின் குறித்த திணிவுடன் சேரும் மறு மூலகத்தின் திணிவு விகிதங்கள் முழு எண்களில் இருக்கும்.
உணவுக்குழாய் அழற்சிஅல்லதுஉணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இதுகடியதாகவோஅல்லதுநெடுங்காலத்துநோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ்உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்துஉணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோஇருக்கலாம். காரணங்கள் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன: கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி கேர்ப்பிசு (herpes esophagitis) பெருங்குழியத் தீநுண்மம் (cytomegalovirus) அகநோக்கி மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியமுடியும். [1] ஏனைய காரணங்கள் பொதுவான காரணியாக விளங்குவது {ln:இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்} ஆகும், இதனால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியானது பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி (reflux esophagitis) எனப்படுகின்றது. அமில அல்லது கார வேதியியல் கலவைகள் காயத்தை ஏற்படுத்துவதாலும் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது. கவனக்குறைவாக வீட்டில் வைக்கப்படும் பொருட்களால் சிறுவர்களில் பொதுவாக இவ்வகையைச் சந்திக்கமுடிகின்றது, மேலும் அரிக்கும் திரவங்களைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்போரிலும் இதைக்காணலாம்.[2] கதிர்வீச்சுச் சிகிச்சையால் ஏற்படும் கதிர்வீச்சால் காயம் ஏற்பட்டு இந்நோயை உண்டாக்கலாம். மூக்கு இரையககுழாய் மூலம் உணவு, நீராகாரம் செலுத்தப்படுவோரிற்கும் உணவுக்குழாய்க் காயம் ஏற்படுகின்றது. அமில மிகைப்பு. மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடு தீவிரத்தை வகைப்படுத்தல் நான்கு வகுப்புக்களாக உணவுக்குழாய் அழற்சியின் தீவிரம் லொஸ் ஏஞ்சல்ஸ் வகைப்பாட்டைத் தழுவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.:[3][4] வகுப்பு A ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு < 5 mm நீளம் வகுப்பு B ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு > 5mm நீளம், ஆனால் சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையே தொடர்ச்சி இல்லை. வகுப்பு C சீதமென்சவ்வுப் பாதிப்பு > 2 சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையேதொடர்ச்சியானது, ஆனால் உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் குறைவானது. வகுப்பு D சீதமென்சவ்வுப் பாதிப்பு உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் அதிகமானது. மேற்கோள்கள் ↑ Meinhard Classen; Guido N. J. Tytgat; M.D. Ph.D.; […]
பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை. இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம்.இந்நோய்க்கான முக்கிய காரணியாக பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி விளங்குகின்றது.[1] நெஞ்செரிவுக்கு ([[இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்]] ) மருத்துவ சிகிச்சை பெறமுற்படுவோரில் 5–15% நோயாளிகள் பரட்டின் உணவுக்குழாய் உடையோராக உள்ளனர், எனினும் பெரும்பாலானோர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை. பரட்டின் உணவுக்குழாய் ஒரு புற்றுநோய்க்கு முன்னிலை நோயாகும். இந்நோயை அறுதியிட உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் அவதானிக்கப்படுகின்றது. இதன்போது நுணித்தாய்வுக்காக மேலணி இழையங்கள் எடுக்கப்படுகின்றன. நுண்ணோக்கி ஆய்வின் மூலம் இழைய உருமாற்றம் உறுதி செய்யப்படுகின்றது.[2][3] இந்த நிலையை 1950இல் நோர்மன் பரட் (1903–1979) என்பவர் விவரித்தார்.[4]
விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது அண்டவெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். எமது பூமிக்கு அண்மையில் உள்ள விண்மீன் சூரியனாகும், இதுவே பூமிக்கு சக்தி வழங்கியாகத் திகழ்கின்றது. விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள்ளன. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி. சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புராக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. விண்மீன்கள் அவற்றின் நிறத்தை வைத்து, எடையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு விண்மீன் தன ஆயுட்காலத்தில் பல்வேறுவகையான மாற்றங்களைப் பெறுகிறது, பிறப்பின் போது சிறியதாகவும் ஒரு வித நிறமுடையதாகவும், இறப்பின் போது பெரியதாகவும் வேறு ஒரு நிறம் பெற்றும் இறுதியில் அழிகிறது. எங்கள் சூரியனும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற விண்மீன்கள் , வெண் குறுமீன்கள் (White Dwarf), நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன. விண்மீன்களின் உருவாக்கம் (முழுமையான கட்டுரை:விண்மீன்களின் உருவாக்கம்) அண்டவெளியில் பரவிக்கிடக்கும் தூசு […]
விண்மீன்கள் அதனது நிறமாலையைக் (ஒரு விண்மீனின் புறப்பரப்பின் வெப்பத் தன்மையைப் பொறுத்து, அவை பல்வேறுபட்ட நிறங்களாகக் காட்சியளிப்பது. ) கொண்டு வகைப்பாடு செய்யப்படுகின்றது. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமுள்ளவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. மேக்நாத் சாகா (Megh Nad Saha) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இவர் அயனியக்க சமன்பாடு மூலம் விண்மீன்களில் சில தனிமங்கள் அயனி நிலையில் இருக்கின்றன என்ற கோட்பாட்டை விளக்கினார். இதன் மூலம் விண்மீன்களின் வெப்ப நிலையைக் கூடக் கண்டறியலாம்.ஏனெனில் தனிமங்களின் அயனியாக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் பெரும் பங்கு வகிக்கிறது.ஒரு விண்மீனின் [[நிறமாலை – விண்மீன்கள்|நிறமாலை வகுப்பு]] அதன் [[நிறமண்டலம்|நிறமண்டலத்தின்]] வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடுகின்றது. சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. இவ்வகைப்பாடு O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இங்கு “O “ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” இற்குச் செல்லுகையில் வெப்பம் குறைந்து கொண்டு செல்கின்றது. எ.கா: Oவை விட Bக்கு வெப்பம் குறைவு. ( இவ்வரிசைக்கிரமத்தை நினைவில் நிறுத்த: “Oh, be a fine girl/guy, kiss me” ) நிறமாலை வகுப்புகள் (Spectral classes) O “நீலம்”, B “நீல-வெள்ளை”, A “வெள்ளை”, F “மஞ்சள்-வெள்ளை”, G “மஞ்சள்”, K “செம்மஞ்சள்” அல்லது ஆரஞ்சு, M “சிவப்பு”, கார்வார்ட் நிறமாலை வகைப்பாடு கார்வார்ட் (Harvard) நிறமாலை வகைப்பாடு ஒரு ஒற்றைப்பரிமாண வகைப்பாட்டு நடைமுறையாகும். விண்மீன்களின் புறப்பரப்பின் வெப்பநிலை 2 தொடக்கம் 40 கிலோ கெல்வின் […]
ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற விண்மீனின் பெயர் கிளீசு581ஆகும். இவ்விண்மீன் செங் குறுமீன் (அல்லது சிவப்புக்குள்ளன்) வகையைச் சார்ந்தது. கிளீசு581 விண்மீனைச் சுற்றி வளம் வரும் கோள்கள்: * கிளீசு 581 b, * கிளீசு 581 c, * கிளீசு 581 d, * கிளீசு 581 e, * கிளீசு 581 g, * கிளீசு 581 f
”உயிரணு உயிரியல்”’ அல்லது ”’கலவுயிரியல்”’ (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு, (நுண் உறுப்பு) புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல உயிர்களின் பல்வகைமை தெளிவாக அறியப்படுகின்றது. உயிரணுக்களையோ அல்லது அவற்றின் உள்ளடக்கங்களையோ அவற்றின் தொழிற்பாடு தொடர்பாக ஆராய்வது உயிரியல் அறிவியலில் முதன்மையானது. உயிரணுக்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிய அறிவு வெவ்வேறு துறைகளுக்கு துணை நிற்கின்றது; மூலக்கூற்று உயிரியல், புற்றுநோய் ஆராய்ச்சி, உயிர் வளர்ச்சியியல் போன்ற துறைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உயிரணு உயிரியல் ஆராய்வு வேறு துறைகளான மரபியல், உயிர் வேதியியல், மூலக்கூற்று உயிரியல், நோய் எதிர்ப்பியல், உயிர் வளர்ச்சியியல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. நிகழ்வுகள் ஒரு உயிரணுவில் பற்பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, உயிரணுக்களின் வகையைப் பொறுத்தும் உயிரினத்தின் தேவையைப் பொறுத்தும் உயிரணுக்கு உயிரணு இவை வேறுபடுகின்றது, ஆனால் அனைத்து உயிரணுக்களுக்கும் பொதுவான நிகழ்வுகளும் உண்டு. # புரதத்தொகுப்பும் பின்னர் தொகுக்கப்பட்ட புரதத்தை நகர்த்துதலும் # மூலக்கூறுகளை உயிரணுக்குள்ளேயும் வெளியேயும் செலுத்துதல் # தன்னிச்சைத் தின்குழியம் – இந்நிகழ்வில் ஒரு உயிரணு தனது சொந்த நுண் உறுப்பையோ அல்லது ஆக்கிரமித்த நுண் உயிரிகளையோ “தின்னுதல்” (உட்கொள்ளல்) # ஓட்டல் – இரு அண்மித்த உயிரணுக்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் இழைய அமைப்பைப் பேணுதல் # இனப்பெருக்கம் – விந்தணுவும் சூலும் இணைவதால் கருக்கட்டல் நிகழ்வு உண்டாகின்றது # உயிரணு அசைவு – வேதி ஈர்ப்பு, சுருக்கம், பிசிர், கசையிழை
”’நுண் உறுப்புகள்”’ அல்லது ”’உயிரணுவின் உள்ளுறுப்புகள்”’ (”organelle”) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு [[உயிரணு]]வின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன. [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. [[நிலைக்கருவிலி]]களிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.1 நுண்ணுறுப்புகள் அனைத்தும் [[நுண்நோக்கி]] கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு அதன் [[உயிரணுக் கரு|கரு]] ஆகும். மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள் இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது. பெரிய நுண்ணுறுப்புகள் மெய்க்கருவுயிரிகளின் பெரிய நுண்ணுறுப்புகள் நுண்ணுறுப்பு பிரதான தொழில் அமைப்பு உயிரினம் குறிப்பு பச்சையவுருமணி ஒளித்தொகுப்பு, சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறல் இரட்டை மென்சவ்வு தாவரம், [[அதிநுண்ணுயிரி]]கள் சில மரபணுக்களைக் கொண்டது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு) அகக்கலவுருச் சிறுவலை புதிய புரதங்களின் குறிபெயர்ப்பிலும் மடிப்பிலும் (அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை), கொழுப்பு உருவாக்கத்திலும் ( அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை) ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை இரைபோசொம்களை கொண்டுள்ளது. கொல்கிச் சிக்கல் புரதத்தைப் பொதியிட்டு வகைப்படுத்தல் ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் இழைமணி அடினோசின் மூப்பொசுபேற்றுக்கள் உருவாக்கம் மூலம் உயிரணுவிற்குச் சக்தியை வழங்கல் இரட்டை மென்சவ்வு பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள் டி.என்.ஏ கொண்டுள்ளது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு) புன்வெற்றிடம் சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல் ஒற்றை […]
பகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5. பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5. பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம். தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம் நிர்வாக மையம் அணுக தங்களது தளத்தின் முகவரியின் அருகே “/administrator” என்று இட்டு செல்லுதல் வேண்டும். இங்கு எமது பிரதான தளத்தின் முகவரி: https://localhost/thamil/ ; நிர்வாக மையத்தின் முகவரி: http://localhost/thamil/administrator/ தற்போது, மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஏதாவது பிழை வந்தால் பின்வருமாறு செய்தல் வேண்டும். உங்களது எக்சாம்ப் உள்ள கோப்பகம் செல்லுங்கள் எடுத்துகாட்டாக “L:\www-websites\Xampp\htdocs” சென்று அங்கு thamil கோப்பகத்தை திறவுங்கள் configuration.php எனும் கோப்பை notepad அல்லது Notepad++ எனும் செயலி மூலம் திறந்து “public $error_reporting = ‘default’;” எனும் வாசகத்தை public $error_reporting = ‘0’; என்று மாற்றுங்கள்; சேமியுங்கள். உங்கள் பெயர், கடவுச்சொல் இட்டபின்னர் நிர்வாக மையத்தைக் காணுறலாம். நாம் எடுத்துக்காட்டாக உருவாக்கப்போகும் தளம் ஒரு தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பைப் பற்றியதாக அமையப் போகின்றது. ஏற்கனவே “என் தமிழ்” என்று பெயர் இட்டுள்ளோம். இப்போது சற்று விரிவாக இணையத்துக்குரிய பல அம்சங்களை அடக்குவோம். Global Configuration : Site Site Name * = என் தமிழ் Metadata Settings இணையதளத்தைப் பற்றிய விவரம் “Site Meta Description” இல் கொடுக்கவேண்டும். அதற்கு அடுத்ததாக உள்ள Site Meta Keywords இல் இணையதளத்தைத் தேடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான திறவுச்சொற்கள் இடல் தேவையானது. கூகிள் போன்ற தேடுபொறிகளில் தேடுவதற்கு இவை உதவி புரிகின்றன. இங்கு கொடுக்கப்படும் இவ்விரு தரவுகளும் நாம் உருவாக்கப் போகும் […]
ஜூம்லா வார்ப்புருக்கள் (joomla templates) பற்றி இங்கே விளக்கபாடுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு அதன் வெளிப்பார்வை மிக முக்கியம். நாம் விதம் விதமாய் சட்டை உடுத்துவது போலவே இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி உள்ள சட்டையைப் பலர் பயன்படுத்துவது குறைவு அல்லவா? அதே போல இங்கும் ஒரு இணையத்துக்கு என்று தனித்துவமான வார்ப்புரு ஒன்று தேவையானது. இணைய உலகில் இலவசமாகவும் காசுக்கும் ஏராளமான ஜூம்லாச் சட்டைகள் வாங்கலாம். அவை ஒவ்வொன்றும் உங்கள் தேவையைப் பொறுத்தது என்பதைக் கவனித்தல் வேண்டும். உங்கள் இணையதளத்தின் நோக்கம் இசையாக இருக்கலாம், வியாபாரமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் அல்லது தனிநபரைப் பற்றியதாக இருக்கலாம்.இவை ஒவ்வொன்றுக்கும் வகைப்படுத்தப்பட்ட ஜூம்லா வார்ப்புருக்கள் கிடைக்கின்றன. இவை எங்கே கிடைக்கும் என்பதை கூகிள் உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம். ஜூம்லா வார்ப்புரு இயல்பாகவே ஜூம்லா நிறுவலில் நிறுவப்பட்டிருக்கும். எனினும் அது நன்றாக இராது. நிறுவலின் போது மாதிரித்தரவை நிறுவி இருந்தால் தற்போது உங்களிடம் பல தேவையற்ற கட்டுரைகளும் மெனுக்களும் (பட்டியலும்) காணப்படும். மாதிரித்தரவு நிறுவல் அற்ற எதுவித உள்ளடக்கம் அற்ற ஜூம்லா இணையதளத்தின் புதிய தோற்றம் கிட்டதட்ட இவ்வாறு அமையும்: இப்பொழுது நிர்வாக மையத்தில் extension என்பதன் கீழ் உள்ள template manager ஐச் சொடுக்குங்கள். (இதை இருவிதமாக அணுகலாம்: மெனுவில் அல்லது கட்டுப்பாட்டு மையத்தில்/ control panel –இல் ) இது நேரடியாக ‘style’ எனும் வார்ப்புருக்களை மாற்றி அமைக்கும் பக்கத்தைத் திறக்கும். அங்கே தற்போது பயன்படுத்தப்படும் வார்ப்புருக்களுக்கு நட்சத்திரக் குறி இடப்பட்டிருக்கும். இங்கே இரு வார்ப்புருக்களுக்கு நட்சத்திரக் குறி இருக்கும் ஒன்று உங்களது பிரதான தளம், மற்றது நீங்கள் தற்போது செயற்படும் நிர்வாகத் தளம். அங்கே உள்ள வேறேதாவது வார்ப்புருத் தேவையாயின் அவை எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை ‘style’ இன் அருகாமையில் உள்ள ‘templates’ க்குப் போவதன் மூலம் பார்க்கலாம். புதிதாக வார்ப்புரு ஒன்றை நிறுவுவதற்கு முதலில் அதனைத் தரவிறக்கம் செய்ய […]
ஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது. எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. இற்றைப்படுத்த முன்னர் உங்கள் தரவுத்தளத்தையும் பிரதான தளத்தையும் சேமிப்புப்பிரதி எடுத்துக் கொள்ளுங்கள். இற்றைப்படுத்தல் மூன்று விதமாகச் செய்யலாம்: நிர்வாக மையத்தில் இருந்து தானாக இற்றைப்படுத்தல்: site —- control panel — இங்கு Checking Joomla update status எனும் தகவல் வந்து பின்னர் எந்த வெளியீட்டுக்கு இற்றைப்படுத்தவேண்டி உள்ளதோ அதனைக் காட்டும். அந்த வில்லைப்படத்தில் கிளிக் செய்து இற்றைப்படுத்தல் மையத்தை அணுகலாம். பின்னர் ‘Install the update’ஐச் சொடுக்கி இற்றைப்படுத்துங்கள். கோப்பைத் தரவிறக்கம் செய்து கோப்பகத்தில் பிரதி செய்து இற்றைப்படுத்தல்:https://downloads.joomla.org/ எனும் இணையதளம் சென்று ஜூம்லாவின் இற்றைய பதிப்பைத் தரவிறக்கம் செய்யுங்கள். அதனை உங்கள் ஜூம்லா இருக்கும் கோப்பகத்துள் பொதிநீக்கம் செய்து ஏற்கனவே உள்ள கோப்புகளுடன் மாற்றீடு செய்ய வேண்டும். winrar அல்லது 7zip பயன்படுத்தி அந்தப்பொதியை விரிவுசெய்யலாம். அதன்பின்னர் Extension Manager சென்று Databaseஐக் கிளிக் செய்யுங்கள். “Warning: Database is not up to date!” எனும் தகவல் தோன்றியிருக்கும். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வழு, இதனைக் களைவதற்கு “fix” என்பதைச் சொடுக்குங்கள். இப்போது Extension Managerஇல் காணப்படும் “Purge Cache” பின்னர் ‘Discover’ ஆகியவற்றை அழுத்துங்கள். அங்கு வெறுமையாக இருந்தால் நன்று, இல்லையேல் அங்கு காணப்படும் ஒவ்வொன்றினதும் ‘சரிப்பெட்டியில்’ குறியிட்டு வலது புற மேல் மூலையில் (ஆரஞ்சு நிறத்தில்) உள்ள ‘install’ எனும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். கோப்பைத் தரவிறக்கம் […]
உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு (கலம்) ஆகும். உயிரினங்கள் தனியொரு உயிரணுவாலோ அல்லது பல உயிரணுக்களின் சேர்க்கையாலோ ஆக்கப்பட்டவை. தனியொரு உயிரணுவினால் உருவான உயிரினங்களாக அமீபா, பக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள் பல்லுயிரணுக்களுக்கு உதாரணமாகும். விலங்குகளின் உயிரணு தாவரங்களினதில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. விலங்குகளில் உயிரணுக்கள் பல சேர்ந்து இழையங்களாகவும் (tissue) பல இழையங்கள் சேர்ந்து உறுப்புக்கள் (organs) தோன்றியும் உறுப்புக்களின் தொகுப்பு தொகுதியாகவும் (system) இறுதியில் பல தொகுதிகள் சேர்ந்து ஒரு உயிரினமாகின்றது.உயிரணு –> இழையங்கள் –> உறுப்புக்கள் –> தொகுதி –> உயிரினம் வரலாறு ரொபர்ட் கூக் (Robert Hooke) என்பவரால் முதன் முதலில் உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆங்கிலேய [[நுண்ணோக்கி]] ஆராய்ச்சியாளர் 1665ம் ஆண்டு தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைகளின் மெல்லிய பகுதியினை ஆராய்ந்தார். அதன் போது கண்ணுற்ற தேன்கூடு போல் காணப்பட்ட சிறுசிறு அறைப் பகுதிகளுக்கு ‘செல் (cell)’ எனப்பெயரிட்டார். இலத்தீன் சொல்லான cellula என்பதில் இருந்தே cell எனும் சொல் உருவாகியது, இதற்கு அர்த்தம் ‘அறை’ என்பதாகும். உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை) 1838 – 39 காலப்பகுதியில் மத்தியாசு இயாகோப் சிலெய்டன் (Matthias Jakob Schleiden) மற்றும் தியோடர் சுவான் ( Theodor Schwann) என்பவர்களால் உயிரணுக் கொள்கை வெளியிடப்பட்டது. இக் கொள்கையில் (சிலெய்டன் – சுவான் ) உள்ள மூன்று கூறுகள்: (1) * அனைத்து உயிர்களும் ஆக்கப்படுவதற்கு உயிரணு ஒரு தெளிவான உருப்படியாகவும் கட்டடக்கண்டமாகவும் (building block) விளங்குகின்றது. * உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு ஆகும். * ஒரு உயிரணு சுயமாக உருவாகின்றது. இது படிகம் உருவாதல் போன்ற ஒரு சுயமான உருவாக்கம் ஆகும். இக்கொள்கையில் மூன்றாவது தவறானது எனக் கருதப்படவே 1858 இல் உருடோல்வ் விர்ச்சோ (Rudolf Virchow) என்பவரால் “ஒரு உயிரணு ஏற்கனவே உள்ள […]
(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது) சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன. முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் இழையங்கள் மற்றும் என்புகள் முதலியவற்றில் ஏற்படும் கிருமித்தாக்க மற்றும் அழற்சி நோயாகும். இது பல் ஈறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இழையங்களையும் பாதிக்கின்றது.நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு படிகளாக முரசு நோய்கள் காணப்படுகின்றது 1) பல்லெயிற்று அழற்சி அல்லது பல் ஈறழற்சி (Gingivitis) 2) பற்சுற்றி அழற்சி (Periodontitis) பல் ஈறழற்சியானது குணப்படுத்தப் படாமல் மேலும் தீவிரம் அடைந்தால் பற்சுற்றி அழற்சி ஏற்படும். மேற்குறிப்பிடப் பட்டுள்ள படத்தில் பார்த்தீர்களானால் பல்லைச் சூழவுள்ளது ஈறு என்பதை அறிவீர்கள், அந்த ஈறைச் சூழவுள்ள என்புகள் இணைப்பிழைகள் ஆகியவற்றை பற்சுற்றி (periodontium) என்கின்றோம். சுருக்கமாக முரசு அல்லது ஈற்றில் ஏற்படுவது பல் ஈறழற்சி அதே நேரத்தில் அது கடுமையடைந்து அவற்றைச் சுற்றி ஏற்படுவது பற்சுற்றி அழற்சி. பல் ஈறழற்சி (Gingivitis) பல் ஈறுகளில் கிருமித்தாக்கத்தால் ஏற்படும் அழற்சி. முரசானது செந்நிறமாக, வீங்கிக் காணப்படும். பற்களைத் தீட்டும் போது இரத்தம் கசியும். பெரும்பாலும் இத்தகைய நோயுடையோரிற்கு வலி எடுப்பதில்லை, எனவே அதனைப் பற்றி அக்கறை கொள்ளாது உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை. இது உருவாகுவதற்குரிய முன்னணிக் காரணியாக பாக்டீரியாக்கள் திகழ்கிறது. பொதுவாகவே பற்களில் முரசுகளில் ஒரு நிறமற்ற படலமாக பாக்டீரியாக்கள் படிகின்றன. பற்சூத்தை (dental caries) மற்றும் பற்சுற்றி (periodontal) நோய்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் இத்தகைய படலம் பிளாக் (Dental plaque) என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படலமானது ஆரம்பத்தில் இலகுவாக விரல் நகம் […]
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 – 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.மனித எலும்புக்கூடு மண்டையறை எலும்புகள் (8) * 1 நுதலெலும்பு (frontal bone) * 2 சுவரெலும்பு (parietal bone) (2) * 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) * 4 பிடர் எலும்பு (occipital bone) * ஆப்புரு எலும்பு (sphenoid bone) * நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) * 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) * 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) * அண்ணவெலும்பு (palatine bone) (2) * 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) * 9 நாசி எலும்பு (nasal bone) (2) * கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) * மூக்குச் சுவர் எலும்பு (vomer) * கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): * சம்மட்டியுரு (malleus) * பட்டையுரு (incus) * ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): * தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): * 25. காறை எலும்பு (clavicle) * 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): […]
நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது: * நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis); * கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி. ==செதிலுருப்பகுதி (squama)== செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: . வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் முன்பொருத்துக்களின் (frontal suture) எச்சங்கள் காணப்படும், கைக்குழந்தைகளில் இந்தப் பொருத்தானதுநுதல் எலும்பை இரண்டாகப் பிரிக்கின்றது, குழந்தையின் வளர்ச்சியின் போது இது படிப்படியாக மறைந்துவிடும். இந்தப் பொருத்துக்கு இருபுறமும் கட்குழியின் மேல் ஓரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று சென்ரி மீட்டர் உயரத்தில் வட்டவடிவான மேட்டுப் பகுதி காணப்படும், இது முன்புற மேடு (frontal eminence) எனப்படும். இந்த உயர்ந்த பகுதியானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, இளவயதுடையோருக்கு மிக்க உயர்ந்து காணப்படும்; இந்த மேட்டிற்கு மேலே உள்ள பகுதி மிருதுவானது. முன்புற மேட்டின் கீழே காணப்படும் வரிப்பள்ளத்தைத் தொடர்ந்து மிகைப்பிசிர் வளைவு (superciliary arche) காணப்படும்; இவை மைய நோக்கி தெளிவாகக் காணப்படும், மேலும் மறு புறத்தில் உள்ள வளைவுடன் தொடுக்கப்படும் போது நெற்றிப்புடைப்பு (glabella) உருவாகிறது. இது ஆண்களில் பெரிதாகக் காணப்படும். மிகைப்பிசிர் வளைவின் கீழ் காணப்படும் வளைந்த மற்றுமொரு மேடு கட்குழி மேலோரம் (supraorbital margin) ஆகும். இது கட்குழியின் மேல் எல்லையை ஆக்குகிறது மேலும் செதிலுருவை கட்குழிப் பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இதன் மையவிலகிய பகுதி கூர்மையானதாகவும் முனைப்பாகவும், மையப்பகுதி வளைவானதாகவும் காணப்படுகிறது. மையப்பகுதிக்கும் நடுப்பகுதிக்கும் இடையே ஒரு பிளப்பு அல்லது துவாரம் காணப்படுகிறது, இதனூடே கட்குழி மேல் குருதிக்குழாய்களும், நரம்புகளும் செல்லுகின்றன. கட்குழி மேலோரம், மையவிலகிய பகுதியில் பொட்டு எலும்பு துருத்தமாக (zygomatic process) கன்ன எலும்புடன் இணைவதன் மூலம் முடிவடைகிறது. உள்மேற்பரப்புப்பகுதி […]
மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal fascia), கீழ் கடைநுதல்வரியில் பொட்டுத்தசையின் மேற்பாகமும் (temporal muscle) தொடுக்கப்படுகிறது. மேற் கடைநுதல்வரியின் மேலே புறப்பக்க மேடு (parietal eminence) என அழைக்கப்படும் ஒரு உயர்வு காணப்படும். மேற் கடைநுதல்வரியின் மேலே உள்ள அனைத்துப்பகுதிகளும்மேல் மண்டையோட்டுத் தசைநாண்படலத்தால் (epicranial aponeurosis) மூடப்பட்டிருக்கும். வரிகளின் கீழே உள்ள பகுதி பொட்டுக் குழிவின் (temporal fossa) ஒரு பகுதியை ஆக்குகிறது, இங்கே பொட்டுத்தசை இணைக்கப்படுகிறது. பின்புறப் பகுதியில் எலும்பின் மேல் வகிட்டு ஓரத்தின் அருகே புறப்பக்கத் துவாரம் (parietal foramen) காணப்படுகிறது, இது மேல் வகிட்டுக் காற்றுக்குடாவுடன் (superior sagittal sinus)இணையும் தமனியையும் சிலவேளைகளில் பிடரி நாடியின் சிறிய பிரிவையும் தன்னூடே புகவிடுகிறது. உள் மேற்பரப்பு உள்மேற்பரப்பு குழிவானது, இங்கு காணப்படும் சிறு மடிப்புக்களும் பள்ளங்களும் மூளையின்மடிப்புகளுக்குரியதாக விளங்குகிறது, மேலும் எண்ணிக்கையில் கூடியளவில்மிகச்சிறிய சுவடுகள் நடு மூளையமென்சவ்வுக் குருதிக்குழாய்களின் சிறிய கிளைகளுக்குரியதாகும், இவை ஆப்புருக் கோணத்தில் (sphenoidal angle) இருந்து மேல் நோக்கியும் பின் நோக்கியும் செல்கின்றன, மேலும் செதிலுரு ஓரத்தின் மைய மற்றும் பிற்புறப் பகுதிகளில் இருந்தும் செல்கின்றன. மேல் ஓரத்தில் காணப்படும் வரிப்பள்ளம் எதிர்ப்பக்க சுவரெலும்புடன் சேர்ந்து உச்சி வகிட்டுக்குழியை (sagittal sulcus) ஆக்குகிறது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளைய வளைமடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது. ஓரங்கள் மேல்வகிட்டு ஓரம் […]
இதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம். இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று தமிழை இயல்பு மொழியாக தேர்ந்தெடுக்கவேண்டும். இப்போது நாங்கள் நிறுவிய ஜூம்லாவில் தேவையில்லாத கட்டுரைகள் எல்லாம் உள்ளது அல்லவா? அவை ஒவ்வொன்றையும் உங்கள் கட்டுரைகளால் ஈடு செய்யலாம். அவை அமைந்திருக்கும் விதத்தைப் பார்த்து அறிந்த பின்னர் அவற்றை நீக்கலாம். ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள் பாடத்தை மீண்டுமொரு முறை நினைவில் வைத்துக்கொள்ளல் அவசியம். அங்கு கூறப்பட்ட அதே வார்ப்புருவை இங்கும் பயன்படுத்தப்போகின்றோம். //http://ajoomlatemplates.com/ எனும் இணையதளம் சென்று “Business Joomla 2.5 & 3.0 Template Free” என்பதன் கீழ் உள்ள “AppStore” வார்ப்புருவைத் தரவிறக்கம் செய்யுங்கள். ajt003_j25 எனும் பெயருடன் உங்கள் கணினியில் அது உள்ளதா என்பதைச் சரி பாருங்கள்.// இந்த வார்ப்புரு ஜூம்லாவின் 2.5 மற்றும் 3.* பதிப்புகளுக்கு தொழிற்படும். சில வார்ப்புருக்கள் ஜூம்லாவின் ஒரு பதிப்புக்கு மட்டுமே விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வேறு எதாவது வார்ப்புரு விரும்பினால் ஜூம்லா 3.1.5க்கு உகந்ததா என்பதை அவதானித்து தரவிறக்கம் செய்யவேண்டும். நீட்சிகள் –> நீட்சி மேலாளர் ((Extension Manager)) சென்று உங்கள் வார்ப்புருவைத் தரவேற்றம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் நீட்சிகள் –> வார்ப்புரு மேலாளர்: பாணிகள் சென்று அந்த வார்ப்புருவை உள்ளிருப்பாக மாற்றுங்கள் (நட்சத்திரக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும்). இப்போது உங்கள் இணைய தளம் வேறொரு வடிவத்தில் இருக்கும். ஜூம்லாவில் கூறகங்கள் (modules), சொருகிகள் (plugins), வார்ப்புருக்கள் (templates), மொழிகள் (language) என்பன […]
வேதியியல் மற்றும் இயற்பியலில், அணுக் கொள்கை என்பது ஒரு பொருளின் இயல்பைப் பற்றிய கோட்பாடு, இதில் ஒரு பொருளானது அணு எனும் சிறிய அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது; அதனை மேலும் பிரிக்கமுடியுமா இல்லையா என்பது பற்றிய பலரது கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. ரொபர்ட் போய்ல் (Robert Boyle) ரொபர்ட் போய்ல் (25 சனவரி 1627 – 31 திசம்பர் 1691) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இரசவாதியாக இருந்தார், போயிலின் விதி எனும் வேதியியல் விதி இவரால் ஆக்கப்பட்டது. இவரே தனிமங்கள் (மூலகங்கள், elements) பற்றி முதலில் தெளிவாகக் குறிப்பிட்டார். இலண்டனில் “The Sceptical Chymist” எனும் நூல் மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டார். நவீன வேதியியலின் நிறுவனர் என்று அழைக்கப்படுகின்றார். வில்லியம் புரவுட் (William Prout) வில்லியம் புரவுட் (15 சனவரி 1785 – 9 ஏப்ரல் 1850) அணு எனும் கருத்துக்கு வழியமைத்தவர். இவரது கருத்தின்படி “ஒவ்வொரு தனிமத்தினதும் அணுத்திணிவு ஐதரசனின் திணிவின் மடங்குகளாக அமைகிறது. ஒரு தனிமத்தின் அடிப்படைக்கூறு ஐதரசன் ஆகும் (இதனை புரோட்டைல் என்றார்).” ஜோன் டால்டன் (Jhon Dalton) ஜோன் டால்டன் (6 செப்டம்பர்1766 – 27 சூலை1844) என்பவரே முதன்முதலில் அணுக்கொள்கைகளை முன்வைத்தார். ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கைவேதியியல் சிந்தனைகளில் ஓரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. டால்டனின் அணுக்கொள்கை எல்லா பொருட்களும் மிக நுண்ணிய துகள்களாகிய அணுக்களால் ஆக்கப்பட்டவை. அணுக்களைப் ஆக்கவோ அல்லது மேலும் பிரிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் (மூலகத்தின்) அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் ஒரே தன்மையானவை. எ.கா: திணிவு, வேதியல் இயல்பு தனிமங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டுக் காணப்படுவதற்கு அவற்றின் அணுக்களிடையே உள்ள வேறுபாடே காரணம். வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சிறிய முழு எண் விகிதங்களில் பிணைவதனால் சேர்மங்கள் (சேர்வைகள்) உண்டாகின்றன. வேதியல் வினை (இரசாயனத் தாக்கம்) அணுக்கள் மீள் ஒழுங்கு செய்யப்படுவதால் ஏற்படுகின்றது. ஜோன் டால்டன் அணுக்களையும் சேர்மங்களையும் குறியீடுகள் மூலம் காட்டினார். இக்கொள்கைகளில் உள்ள […]
முத்தமிழ் என்று அழைக்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கின்றது. அகத்திய மாமுனிவரால் இயற்றப்பட்ட அகத்தியம் என்னும் நூலே முதலாவது தமிழ் இலக்கண நூல் என்று கருதப்படுகிறது, அதன் பின்னர் தொல்காப்பியமும் பின்னர் 13ம் நூற்றாண்டளவில் நன்னூலும் மூன்று பிரசித்திபெற்ற இலக்கண நூல்கள் ஆகும். அகத்தியம் மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே என்பது இறையனார் அகப்பொருள் உரையால் உணரப்பட்டாலும், அகத்தியம் நூல் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். சுமார் கி.மு 300 ஆண்டளவில் எழுதப்பட்டது. இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், பலரின் முயற்சியால் வெவ்வேறு காலகட்டங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார் நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ் மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப் பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம் வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது. தமிழ் இலக்கணம் பொதுவாக […]
இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம். திரளப் பெயர் (domain name) இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது. www.thamilkalvi.com மேற்குறிப்பிட்ட இணைய முகவரியில் மூன்று பகுதிகள் உள்ளன. “www” , “பெயர்”, “com” இங்கு “www” இல்லாமலேயே thamilkalvi.com இயங்கும், இதனை உயர் நிலைத் திரளம் (Top Level Domain) என்கின்றோம். இவற்றில் பின்னொட்டுக்கள் ‘.com’, ‘.org’, ‘.net’, ‘.co.in’, ‘.edu, ‘.info’, ‘.me’ என்று பலவகையில் அடங்கும். எ.கா: sakthivel.me துணைத் திரளம் (Sub Domain) என்பது பிரதான பெயருக்கு முன்னர் வரும் முன்னொட்டு ஆகும். அனைவரும் பயன்படுத்தும் பொதுவான முன்னொட்டு “www” ஆகும். “www” இல்லாமல், அல்லது “www” ஐ முன்னொட்டாகச் சேர்த்து ஒரு இணையதளத்தின் பிரதான பகுதி பெரும்பாலும் அணுகப்படலாம். துணைத்திரளம் ஒரு இணையதளத்தை பல்வேறு பகுதிகளாக வகைப்படுத்த உதவுகிறது. வெவ்வேறு இணைய உருவாக்கு மென்பொருளைப் பயன்படுத்தவும் இது உதவுகின்றது. நிழற்படங்களுக்கு என்று மட்டும் ஒரு தளத்தை உருவாக்க விரும்புபவர் ‘photo.thamilkalvi.com’ என உருவாக்கலாம். எ.கா: இணைய உருவாக்கு மென்பொருளில் ஒன்றான ஜூம்லா (ஜூம்லா (JOOMLA) – 1) எனும் உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தைப் பயன்படுத்தி பிரதான இணையதளமும் (thamilkalvi.com), அந்தத் தளத்துக்கு ஒரு கருத்துக்களம் தேவைப்படின் ‘phpBB‘ மென்பொருள் பயன்படுத்தி ‘forum.thamilkalvi.com’ எனும் துணைத்திரளத்தில் உருவாக்கலாம். சொந்தமாக ஒரு முகவரியை வாங்க 5 – 15 அமெரிக்க டொலர்கள் தேவைப்படலாம், இது பின்னொட்டிலும் தங்கியுள்ளது. ‘.com’ பொதுவாக வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றதெனினும் பெரும்பாலானோர் விரும்புவது ‘.com’ பின்னொட்டையே. சில இணையதளங்கள் முகவரியை இலவசமாக வழங்குகின்றனர், ஆனால் அவர்களிடம் இருந்து இணைய இடம் பெற்றுக்கொள்ள […]
சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்; நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை, கருவேப்பிலை. கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும்.கறிவேப்பிலைகள் உடைய மரத்தை “கறிவேப்பிலை மரம்” அல்லது “கறுவேம்பு மரம்” என்றழைக்கப்படும். இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் சிறிய வகை மரங்களாகும். நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆய்வு நிகழ்வுகள் ஈரல் புற்றுநோய் உயிரணுக்களின் (HepG2) பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வொன்று தெரியப்படுத்துகின்றது.(1) இதுமட்டுமல்லாது அக்குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படக்கூடிய உயிரணு-தன்மடிவையும் (apoptosis) தூண்டுகின்றது. இதனால் ஹெப்ஜீ2 வகை புற்றுநோய்க் கலங்கள் அழிகின்றன. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் இந்தச் செயலுக்கு கறிவேப்பிலையில் உள்ள கிரினிம்பைன் (girinimbine) எனும் காரப்போலி (ஆல்க்கலாய்டு) காரணமாகும். ஆய்வாளர்கள் இதனை கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுகூடத்தில் வளர்ச்சியுறும் புற்றுநோய் உயிரணுக்களில் இதனைப் பரிசீலித்தனர். மனிதரில் இன்னமும் பரிசீலனை நடைபெறவில்லை. ஆய்வுகூடத்தில் இசுத்ரேப்டோசோடோசின் (streptozotocin) எனும் வேதியற்பொருள் மூலம் இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் சேதப்படுத்தப்பட்ட எலிகள் இப்பரிசோதனைக்குப் பயன்பட்டன. இவற்றில் இதன் மூலம் செயற்கையாக நீரிழிவு உருவாகியது. வாய் மூலம் கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் முப்பது நாட்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. எலியில் குருதி குளுக்கோசு, வெல்லமேற்றப்பட்ட ஈமோகுளோபின், யூரியா, யூரிக் அமிலம், கிரியடினைன் […]
உயிரணுக்களை பல்வகையாக பாகுபடுத்தலாம். உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருகல உயிரினம், பல்கல உயிரினம் எனவும் உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து நிலைக்கருவிலி (புரோகரியோட்டுக்கள் – prokaryotes ), மெய்க்கருவுயிரி (இயூகரியோட்டுக்கள் – eukaryotes ) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரி உயிரணுக்கள் அவற்றின் அமைப்பைப் பொறுத்து மேலும் தாவரக் கலம், விலங்குக் கலம் எனவும் வகுக்கப்படுகின்றது. இவற்றை விடப் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பாட்டைப் பொறுத்தும் அமைப்பைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. எ.கா: குருதிக்கலம், குருத்தணு, நரம்புக் கலம். உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து மட்டுமல்லாது அவற்றின் தொழில், புறத்தோற்றங்கள் போன்றனவும் நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி என உயிரணுவை வகைப்படுத்த உதவுகின்றது. நிலைக்கருவிலி மெய்க்கருவுயிரி உயிரினங்கள் பக்டீரியா, ஆர்க்கீயா முதனுயிரி, பங்கசு, தாவரங்கள், விலங்குகள் பொதுவான அளவு ~ 1–5 µm ~ 10–100 µm கரு கருப்போலிப் பகுதி; மெய்யான கரு இல்லை இரட்டை மென்சவ்வாலான மெய்யான கரு DNA வட்டமானது (பொதுவாக) ஹிஸ்டோன் புரதம் கொண்ட நீண்ட மூலக்கூறுகள் (நிறமூர்த்தம்) RNA-/புரத தொகுப்பு குழிய முதலுருவில் RNA-தொகுப்பு கருவுள்; புரதத் தொகுப்பு குழியமுதலுருவில் இரைபோசொம் 50S+30S 60S+40S குழிய முதலுரு வடிவம் மிகவும் குறைந்த அகமென்சவ்வுகள், கலவன்கூடுகளால் உருவாக்கப்பட்டுள்ள மிகையான வடிவம் உயிரணு அசைவு ஃபிளாஜெலின் எனும் புரதத்தாலான கசையிழை கசையிழை (விந்தணுக்கள்), பிசிரிழை (பலோப்பியன் குழாயில் உள்ள உயிரணுக்கள்), நூலிழைக் கால்கள் இழைமணி இல்லை ஒன்று தொடக்கம் ஆயிரக்கணக்கான (சிலவற்றில் இல்லை) பச்சையமணி இல்லை தாவரங்களிலும் அல்காக்களிலும் ஒழுங்கமைப்பு பொதுவாக தனிக் கலங்கள் தனிக் கலங்கள், கூட்டங்கள், உயர்மையான பல்கல விலங்குகளில் சிறப்புக் கலங்கள் கலப்பிரிவு ஒற்றைப் பிளவு இழையுருப்பிரிவு, ஒடுங்கற்பிரிவு 1.நிலைக்கருவிலி (Prokaryotes): நிலையான கருவற்ற உயிர்கள் இவற்றுள் அடங்கும். (வளைய டி.என்.ஏ ஐ கொண்டிருக்கின்றன) அவற்றில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப் புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியா மற்றும் ஆர்க்கீயா இவற்றின் பிரிவுகள் அகும். 2. மெய்க்கருவுயிரி (Eukaryotes): நிலைக்கருவுள்ள உயிரினங்கள் கருமென்சவ்வினால் சூழப்பட்ட […]
ஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். இதைத்தவிர கருவை எக்ஸ்-கதிர் கோணல் முறையால் இனம் கண்டாலும் ஈற்றோட்டு இலத்திரன் முகிலை இனங்காண்பது சாத்தியம் குறைவானது. இவ்வகையான காரணங்களால் அணுவாரையானது அளக்கப்படும் முறையின் அடிப்படையில், பின்வரும் பதங்கள் மூலம் அழைக்கப்படும்:பங்கீட்டு ஆரை ஒரேவிதமான இரு அணுக்கள் பங்கீட்டு வலுப்பிணைப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் கருக்களுக்கிடையிலான தூரத்தின் அரைவாசி பங்கீட்டு ஆரையாகும். இது வழமையாக பிக்கோ மீட்டர்களில் (pm) அல்லது ஆங்க்சுட்ரோமில் (Å) அளக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டு: ஒரு L2 மூலக்கூறு L2 மூலக்கூறு பங்கீட்டு வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது; இதன் கருக்களுக்கிடையான தூரம் (d1) 256 pm எக்சு-கதிர் பளிங்கு வரைவியல் முறைமூலம் (X-ray crystallography ) அளக்கப்படுகின்றது. இதன் பங்கீட்டு ஆரை 128pm ஆகும். வந்தர்வாலின் ஆரை குறித்த மூலகம் (L2) ஒன்றின் இரு மூலக்கூறுகள் பிணைப்பில் இல்லாமல் மிக அருகருகே உள்ளபோது அந்த இரு மூலக்கூறுகளின் கருக்களுக்கு இடையிலான தூரத்தின் அரைவாசி வந்தர்வாலின் ஆரையாகும். உலோக ஆரை உலோகப் பிணைப்பால் பிணைந்துள்ள உலோகமொன்றின் இரு அணுக்களின் கருக்களுக் கிடையிலான தூரத்தின் அரைமடங்காகும்.
உயிர்வேதியியல் (Biochemistry) அல்லது உயிரிய வேதியியல் என்பது வாழும் உயிரினங்களுள் நிகழும் வேதியியற் செயல் முறைகள் பற்றிய கல்வி ஆகும்.உயிர் அறிவியலின் கிளையான உயிர் வேதியியல், உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் நடைபெறும் வேதிவினைகள் பற்றிய நுண் ஆய்வாகும். உயிர்வேதியியல், உயிரணுவின் கூறுகளான புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்றவற்றின் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்கிடையே நிகழும் வினைகள் போன்றவற்றை விளக்குகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், பெரியனவுமாக உள்ளன. இப் பெரிய மூலக்கூறுகள் உயிர்ப் பல்பகுதியங்கள் (biopolymer) எனப்படுகின்றன. இவை பல சிறிய துணை அலகுகளால், அதாவது பல ஒற்றை மூலக்கூறுகள் (monomer) ஒன்று சேர்ந்து, உருவானவை ஆகும்.உயிர்மூலக்கூறுகள் வெவ்வேறுபட்ட தொகுப்புத் துணை அலகுகளால் உருவாக்கப்பட்டவை. புரதத்தை எடுத்துக்கொண்டால், புரதம் ஒரு உயிர்ப் பல்பகுதியம், இதன் துணை அலகுகள் இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் ஆகும்.உயிர்வேதியியலில் இவ்வாறான உயிர்மூலக்கூறுகளின் கட்டமைப்புடன் நொதியங்கள் ஊக்குவிக்கும் வினைகள் போன்றனவும் கற்பிக்கப்படுகின்றது. மரபணுக்கள் பற்றிய கற்கை, புரதத்தொகுப்பு, உயிரணு மென்சவ்வில் நிகழும் பரிமாற்றம் போன்றனவும் உயிர்வேதியியலில் அறியப்படுகின்றது. வரலாறு 1828-இல் பிரெட்ரிக் வோலர் (Friedrich Wöhler) என்பவர் யூரியாவின் தொகுப்பு பற்றிய அறிக்கை வெளியிட்டு கரிமச் சேர்மங்கள் செயற்கையாக உருவாக்கக்கூடியவை எனத் தெரிவித்திருந்தார். உயிர் வேதியியலின் அறிமுகம் முதன்முதலில் நொதியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து உருவானது. 1833-இல், அன்செல்மே பயன் (Anselme Payen) என்பவரால் டியாசுடேசு (diastase) எனும் முதன்முதல் அறியப்பட்ட நொதியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நொதியம் இன்று அமைலேசு என அழைக்கப்படுகின்றது. 1878-இல் வில்கேல்ம் குஃனே (Wilhelm Kühne) எனும் செருமானியர் “என்சைம்” (நொதியம்) எனும் வார்த்தையைப் பிரயோகித்தார். இன்று பொதுவாக, வேதியல் வினையூக்கும் பெப்சின் போன்ற உயிரற்ற பதார்த்தங்களை “என்சைம்” என்றும் வெல்லத்தை மதுவாக மாற்றும் மதுவம் போன்ற உயிரினங்களின் வேதியல் வினைத் தொழிற்பாட்டை “ஃபெர்மென்டேசன்” (உயிர்நொதிப்பு) (fermentation) என்றும் அழைக்கின்றனர். 1897-இல் […]
உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த நெஞ்செரிவு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் காரணமாக ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியினால் ஏற்படுவதாகும், உணவுக்குழாய் நோய்களுள் இந்த நோய் பொதுவான இடத்தைப் பிடித்துள்ளது. உரிய சிகிச்சை இன்றிய இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், பின்னர் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாவதற்கு வழிகோலுகின்றது. சில உணவுக்குழாய் நோய்கள்: Acute esophageal necrosis Achalasia பரட்டின் உணவுக்குழாய் Chagas disease Caustic injury to the esophagus Esophageal atresia and Tracheoesophageal fistula Esophageal cancer Esophageal varices Esophageal web Esophagitis GERD Hiatus hernia Mallory-Weiss syndrome Neurogenic dysphagia Schatzki’s ring Zenker’s Diverticulum Boerhaave syndrome Diffuse esophageal spasm Esophageal dysphagia
அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார், ஆனால் குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும்.இந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.அசைவுப் பார்வையின்மை காணொளி (ஆங்கிலத்தில் விளக்கம்)
வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் பெயர்களான மியுசா சாப்பியென்டம், மியுசா பராடிசியகா ( Musa sapientum and Musa paradisiaca ) என்பன தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை.வாழையின் எல்லாப் பகுதிகளுமே ( இலை, பூ, காய், பழம், தண்டு) பல வழிகளில் பயன்படுகிறது. வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், தனிமங்கள், சேர்மங்கள் மருத்துவ உலகில் முக்கியமானவையாகும். மலிவானதும் மிகையாக சத்துக்கள் செறிந்ததுமான வாழைப்பழத்தை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுவது சிறந்தது.வாழை வகைகளும் அவற்றின் பழங்களின் பயன்களும் செவ்வாழை மலைவாழை: சமிபாட்டுகுறைபாடு (அஜீரணம்), மலச்சிக்கல், சோகையை நீக்கும் மொந்தன்: காமாலை பூவன் : மலச்சிக்கல், மூலநோய் பேயன்: வயிற்றுப் புண் கப்பல் வாழை (ரசுதாளி, ரஸ்தாலி) கற்பூரவல்லி பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும் ஏலரிசி வாழை: கதலி வாழை நாடன் நேந்திரம் வாழைத்தண்டு உடல் எடை குறைய: ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், குருதியில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. கொசுக்கடி: கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும். முகப்பரு: முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும். சிறுநீரக நோய்கள்: சிறுநீர் கழிக்கும் பொழுது […]
பகுப்புடல்கள் அல்லது இலைசோசோம்கள் (Lysosome) விலங்கு உயிரணுக்களில் (மெயக்கருவுயிரிக் கலங்களில்) உள்ள நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை என்று கருதப்படுகின்றது. எல்லா விலங்குக் கலங்களிலும் லைசோசோம் காணப்பட்டாலும் பாலூட்டிகளில் சிவப்பணுக்களில் இவை காணப்படுவதில்லை. தசைக் கலங்களிலும் இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. மேலணி மற்றும் சுரப்பிக் கலங்களில் இதன் எண்ணிக்கை அதிகம். இவை உயிரணுக்களின் கழிவுப் பொருட்கள், தேவையிலாத முதிர்ச்சியடைந்த நுண்ணுறுப்புகள், மேலதிகமான எண்ணிக்கையைக் கொண்ட நுண்ணுறுப்புகள், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் போன்றவற்றைச் செரிக்கும் (அழிக்கும்) இன்றியமையாத வேலையைச் செய்கின்றன. இதற்காக நீராற்பகுப்பி (hydrolase) செரிமான நொதியங்களைக் கொண்டுள்ளது.இலைசோசோம்கள் ஒற்றை மென்சவ்வு உறையால் சூழப்பட்டுள்ள புடகங்கள் (குமிழிகள் – vesicle) ஆகும். உறையின் உட்புறத்தே லைசோசோமினுள் பல வலிமையான நொதிகள் காணப்படும். இவை இந்த உறையை விட்டு வெளியே கசியுமாயின் அது கலத்தையே அழித்து விடும். ஆகவே பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் கலத்துள் விழுங்கப்படும் போது தின்குழியங்கள் எனப்படும் அமைப்பினுள் அவை இருக்கும். அந்த தின்குழியங்களுடன் இலைசோசோம் சென்று இணைந்து இவ்விரண்டின் உறைகளும் இணையும். குழியவுருவில் பி.எச் 7.2 ஆக இருக்கின்றது, ஆனால் லைசோசோமினுள் பி.எச் பெறுமானம் 4.5 – 5 ஆகும். இந்த அமிலத்தன்மை செரிமானத்திற்கு உதவுகிறது. இலைசோசோம் எனும் பெயர் கிரேக்கச்சொறகளான lysis, தனித்தனியாகப் பகுத்தல், மற்றும் soma, உடல் என்பனவற்றில் இருந்து தோன்றியது..இவை தாமாகவே அழிவுறுவதால் தற்கொலைப் பைகள் எனும் பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றன. பெல்ஜிய நாட்டைச்சேர்ந்த கிறிஸ்டியான் டீ டிவே (Christian de Duve) எனும் குழியவியல் நிபுணரால் 1945இல் கண்டறியப்பட்டது. இலைசோசோம் தேக்க நோய் (Lysosomal storage disease –LSD) எனும் மரபணு நோயில் இதன் செயல்பாட்டுத் திறன் குன்றிக் காணப்படும். நொதியங்கள் ஏதேனும் பற்றாக்குறையில் இருப்பதால் அல்லது இல்லாது போய் விடுவதால் இந்நோயில் தேவையற்ற பதார்த்தங்கள் உடலில் தேக்கமடைகின்றது. இலைசோசோம்கள் புடகங்களாக கொல்கியுடலில் இருந்தோ அல்லது நேரடியாக அகக்கலவுருச் சிறுவலையில் இருந்தோ உருவாகின்றன. லைசோசோம்கள் […]
ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளில் 1808ஆம் ஆண்டு ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கை, வேதியியல் சிந்தனைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்கொள்கையின்படி, எல்லா பொருட்களும் மிக நுண்ணிய துகள்களாகிய அணுக்களால் ஆக்கப்பட்டவைகளாகும். இக்கொள்கையின்படி அணுக்கள் அமைப்புகள் அற்ற,கடின, ஊடுருவாத துகள் பண்புடைய, பிரிக்க முடியாத பொருட்களாகும். ஜோன் டால்டனின் கருத்துகள் 19ஆம் நூற்றாண்டில், அப்பொழுது பெறப்பட்ட சோதனைகளின் முடிவுகளின் விளைவுகளாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் அணு, மிகச் சிறிய துகள்களாகிய எலக்ட்ரான்கள் (எதிர்மின்னிகள்) , புரோட்டான்கள் (நேர்மின்னிகள்) மற்றும் நியூட்ரான்களால் (நொதுமிகள்) ஆக்கப்பட்டவை என நிரூபிக்கப்பட்டது. அணுவின் மைய பாகமான உட்கருவில் உள்ள நேர்மின்னூட்டத்துகளே புரோட்டானாகும். உட்கருவைச் சுற்றி, எதிர்மின்னூட்டம் உடையதுகள் எலக்ட்ரான் ஆகும். அணுவின் உட்கருவினுள் நடுநிலைத் தன்மையுள்ள நியூட்ரானும் உள்ளது. அணு நடுநிலைத்தன்மை வாய்ந்ததால், உட்கருவில் காணும் நேர்மின்னூட்டத்தின் எண்ணிக்கைக்குச் சமான எண்ணிக்கை அளவு எலக்ட்ரான்கள் உள்ளன.இற்றைய கண்டுபிடிப்புகளின்படி அணுக்கூறுகள் மிகச் சிறிய நுண் பொருட்களால் ஆனவை; இவை : குவார்க்குகள் (Quarks), லெப்டான்கள் (leptons), போசொன்கள் (bosons) குவார்க்குகள் தனியான குவார்க்குகள் இயற்கையில் கிடைப்பதில்லை. கட்டுண்ட இணைந்த நிலையில் உள்ள குவார்க்குகள் வன்மி அல்லது ஆட்ரான் (Hadron) எனப் பொதுவான பெயரைக் கொண்டுள்ளது. வன்மிகள் (ஆட்ரான்கள்) அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகள் எப்படி மின்காந்த விசையால் கட்டுண்டு உள்ளதோ அது போலவே அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருக்கும் துகள்கள் வன்மிகள் (ஆட்ரான்கள்) ஆகும். அணுக்கரு வன்விசை புவியீர்ப்பு விசைபோல 1038 மடங்கு மிகுந்த வலுவுடைய விசையாகும். இரு குவார்க்குகள் (வன்மிகள்) […]
பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது. அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி (spin) என்று மூன்று முக்கிய பண்புகள் உண்டு. (2) இவற்றின் உள்வகைகளை வகைப்படுத்த “மணம்” (flavor) எனும் சொல் பயன்பயன்படுத்தப்படுகின்றது. இந்த “மணம்” நுகரும் மணம் இல்லை.பின்வருவன அடிப்படைத்துகள்கள் வகையில் அடங்குகின்றன: அடிப்படை ஃபேர்மியோன்கள் (Fermion) – இவை பொருளுக்குரிய துகள்கள் (Matter particles) ஆகும். குவார்க்குகள், லெப்டான்கள் இவற்றுள் அடங்கும். குவார்க்குகள் (Quarks) ஆறுவகையான மணங்கள்: மேல் (up), கீழ் (down) ஏதிலி (strange) கவர்ச்சி (charm), அடி (bottom), உச்சி (top) லெப்டான்கள் (மென்மிகள்) (Leptons) ஆறுவகையான மணங்கள்: எதிர்மின்னி (இலத்திரன்) e (Le=1, Q = −1, YW= −1) எதிர்மின்னி நுண்நொதுமி (எதிர்மின்னி நியூட்ரினோ) νe (Le=1, Q=0, YW = −1) மியூவான் μ (Lμ=1, Q=−1, YW = −1) மியூவான் நுண்நொதுமி (மியுவான் நியூட்ரினோ) νμ (Lμ=1, Q=0, YW = −1) டௌவான் (டௌ துகள்) τ (Lτ=1, Q = −1, YW = −1) டௌவான் நுண்நொதுமி (டௌவான் நியூட்ரினோ) ντ (Lτ=1, Q=0, YW = −1) அடிப்படை போசோன்கள் (Bosons) போசோன்கள் கட்டுண்ட நிலையிலும் உள்ளன. அடிப்படைத்துகள் வகையிலும் உள்ளன, அவ்வாறு உள்ள அடிப்படை போசோன்கள் : விசைகாவி போசோன்கள் (Gauge bosons) : மின்காந்தவியல் விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை எனும் அடிப்படை […]
செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில் அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான வகையாக செங் குறுமீன் விளங்குகின்றது. சூரியனுக்கு அண்மையில் உள்ள விண்மீனான புரோக்சிமா சென்டோரி ஒரு செங்குறுமீன் ஆகும். குறைவான ஒளிர்வளவின் காரணமாக இவை இலகுவில் தென்படாது. புவியில் இருந்து எந்தவொரு செங் குறுமீனையும் வெற்றுக்கண்ணால் நோக்க முடியாது.[1]விண்மீன் மாதிரிகளில் இருந்து சூரியனின் நிறையிலும் 35% குறைவான சிவப்பு குள்ளர்கள் முழுமையான வெப்பச்சலனத்தைக் கொண்டுள்ளன என்று அறியமுடிகின்றது. [2] எனவே ஐதரசனின் வெப்ப கருப்பிணைவில் இருந்து உருவாகும் ஹீலியம் மாற்றமின்றி விண்மீனுக்குள் மீள்கலப்புக்குட்பட்டுக் கொண்டே இருக்கும், இதனால் விண்மீனின் கரு மையப் பகுதியில் உருவாக்கம் நடைபெறுவது தவிர்க்கப்படுகின்றது. இக்காரணத்தால் செங்குள்ளிகள் மிகவும் மெதுவான வேகத்திலேயே உருவாகுகின்றன; இவற்றின் எரிபொருள் வற்றும்வரை சில நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு நிரந்தரமான ஒளிர்வையும் நிறமாலை வகுப்பையும் கொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் பேரண்டத்தின் குறைவான வயது காரணமாக செங் குறுமீன்களின் பிந்திய படிநிலை தற்போதைய காலத்தில் காணமுடியாதுள்ளது என நம்பப்படுகின்றது. மேற்கோள்கள் ↑ “The Brightest Red Dwarf”, by Ken Croswell (Accessed 6/7/08) ↑ Reiners, A.; Basri, G. (March 2009). “On the magnetic topology of partially and fully convective stars”. Astronomy and Astrophysics 496 (3): 787–790. doi:10.1051/0004-6361:200811450. Bibcode: 2009A&A…496..787R.
விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது அவை அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் இடவரைபடமோ அல்ல. இவ்விளக்க வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் அவற்றின் ஒளிரும் தன்மையை, நிறத்தை, வெப்பத்தைப் பொறுத்து தமக்குரிய இடத்தைக் கொண்டுள்ளன. எண்ணற்ற விண்மீன்கள் இருந்தாலும் மனிதர்களால் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான விண்மீன்கள் இங்கே காட்டப்படுகின்றது. ஒரு புள்ளியின் அமைவிடம் எமக்கு இரண்டு காரணிகளை உணர்த்துகின்றன: விண்மீனின் ஒளிர்வளவு (அல்லது தனியப் பருமன்), வெப்பநிலை இவ்விளக்க வரைபடத்தின் செங்குத்து அச்சு விண்மீனின் ஒளிர்வளவு (luminosity) அல்லது தனியப் பருமனைக் குறிக்கின்றது. வானியலில் ஒளிர்வளவு எனும்போது, ஒரு செக்கனில் விண்மீன் வெளிவிடும் ஆற்றலின் அளவைக் குறிப்பதாகும். புவியில் இருந்து நோக்கும்போது எல்லா விண்மீன்களும் ஒரே மாதிரியாக ஒளிர்வதில்லை, சில ஒளிர்வு கூடியனவாக, சில ஒளிர்வு குன்றியனவாக உள்ளன. {tooltip} தனியப் பருமன் {end-link} தனியப் பருமன்(Absolute magnitude ): ஒரு விண்மீனின் ஒளிர்வை அளக்கப் பயன்படும் அளவீடு; தோற்றப் பருமன் (Apparent magnitude) : புவியிலிருந்து ஒருவர் விண்மீனை நோக்கும் போது தெரியும் அதன் ஒளிர்வு. {end-tooltip} எனும் அளவீடு விண்மீனின் தனித்துவமான ஒளிர்வை அளக்கப்பயன்படுவதாகும். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அளவுகள் ஒரு குறிப்பிட்ட ஒளிர்வை (எமது கதிரவன் ஒளிர்வளவு = 1) வைத்தே விகிதங்களாகப் பெறப்படுகின்றன. இவ்விளக்க வரைபடத்தின் கிடை அச்சு விண்மீனின் மேற்பரப்பு வெப்பத்தின் அளவு (கெல்வின்களில்) ஆகும். வரைபடத்தில் வெப்பநிலை கூடிய விண்மீன்கள் இடதுபக்கத்திலும் குளிர்வான விண்மீன்கள் வலது புறத்திலும் […]
அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுட்காலமும் பெரிய விண்மீன்கள் கூடிய ஆயுட்காலமும் கொண்டுள்ளன. விண்மீனிடை முகில்கள் சுருள் விண்மீன் திரள் (spiral galaxy) போன்ற பால் வழியில் (Milky Way) விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே ஐதரசன் (71%), ஹீலியம் (27%) மற்றும் வேறு வாயுக்களைக் கொண்டுள்ளன, மிகவும் அடர்த்தியாக உள்ள இத்தகைய நிலை நெபுலம் அல்லது வான்புகையுரு (nebula) என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன, நாங்களும் இங்கிருந்தே உருவாகி உள்ளோம்!!! பெரியதாக உள்ள இத்தகைய அமைப்புகள் பெருமூலக்கூற்று முகில்கள் எனப்படுகின்றன. இவற்றின் அடர்த்தி ஒரு கன சென்ட்ரிமீட்டருக்கு 100 துகள்கள் ஆகும், விட்டம் 100 ஒளியாண்டுகள் (9.5×1014 கிலோமீட்டர்), திணிவு 6 மில்லியன் சூரியத் திணிவு. இவை மிகவும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகக் காணப்படுபவை. இவற்றின் சராசரி உள் வெப்பநிலை 10 K (கெல்வின்) (-263 செல்சியஸ்). இவை அடர்த்தியாகக் காணப்படுவதால் ஒளிபுகவிடாத் தன்மையுடையனவாக உள்ளன, இதனால் இவற்றை இருள் வான்புகையுரு (Dark nebula) என அழைப்பர். இதனால் சாதாரண ஒளி தொலைநோக்கியால் இவற்றைக் காணமுடியாது; அகச்சிவப்பு தொலைநோக்கிகளால் இவற்றை நோக்க முடியும். எமது சூரியனுக்கு அருகாமையில் உள்ள, மிகப்பெரிய […]
ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது. இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி அமைந்துள்ளது.
அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது. எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. இதில் தெரியவேண்டியது அக்குபஞ்சர்புள்ளிகள் (குத்தூசிப் புள்ளிகள்), நடுவரை (மெரிடியன் அல்லது ஓடுபாதை), நோய்களுக்குரிய புள்ளிகள்.உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வொரு உறுப்புக்கான குத்தூசிப் புள்ளிகள் உண்டு. குத்தூசிப் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில் ஊசி குத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படுகின்றன. உடலுக்குள் “கி” () எனும் ஒருவகை சக்தி உள்ளது. “Qi” (கி என்று ஒலிக்கின்றது; ச்சி அல்ல) எனும் ஒலிப்பு சீன மொழியில் உயிரின் ஆதாரத்தை, சக்தியைக் குறிப்பிடுகின்றது, சமசுகிருதத்தில் “பிராணா” என்று இதை மொழிபெயர்க்கலாம். “கி” என்பது உயிரின் சக்தி, உயிர் வலிமை, சக்தி ஓட்டம் என்று பலவிதமாக மொழிபெயர்க்கலாம். ஒரு உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படுகையில் “கி” எனும் உயிர் ஆதாரம் அவ்வுறுப்பைச் சென்று நோயைக் குணமடைய வைக்கின்றது.உயிரின் ஆதாரம், நடுவரை, குத்தூசிப் புள்ளிகள் முதலியனவற்றிற்கு அறிவியல் நோக்கில் எதுவித விளக்கமும் இதுவரையில் அளிக்கப்படவில்லை. எனினும் தற்காலத்து அறிவியல் சார்ந்த மருத்துவத்தில் சில சந்தர்ப்பங்களில் அக்குபஞ்சரும் இணைந்து கையாளப்படுகின்றது. பல்வகை உயிரின் ஆதாரங்கள் உண்டு என பாரம்பரிய சீன மருத்துவக் கலை குறிப்பிடுகின்றது. பொதுவான நோக்கில், உயிரின் ஆதாரம் (“கி” ) ஐந்து செயற்பாடுகளால் வரையறுக்கப்படுகின்றது. உடலின் அனைத்து உடலியங்கு தொழிற்பாட்டையும் செயற்படுத்தச் செய்தல். இதில் நடுவரையின் (மெரிடியன்) தொழிலைத் தொடக்கி வைத்தலும் அடங்கும். சூடாக்குதல் (உடல், கை, கால்) வெளிப்புற நோய்க் காரணிகளில் இருந்து […]
இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடநூல்கள், செய்திகள் என வகைகள் உருவாக்கப்படும். CMS-சை நிர்வகிக்க நிர்வாகிகள், வாசகங்களை இணைக்கத் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பயனர்களை உருவாக்கக் கூடிய வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் தரவுத்தளத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதன் படி, CMS மென்பொருளில் தரவுகளையும் படிமங்களையும் இட்டுத் தரவேற்றிச் சேமிக்கும் போது, படிமங்கள் கணிணி வன்தட்டில் நேரடியாகவும், வாசகங்கள், பயனர் பற்றிய குறிப்புகள் கணிணி வன்தட்டில் உள்ள தரவுத்தளத்திலும் சேமிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சீக்வல் (Msql), MySql என்று அழைக்கப்படும் கட்டமைப்பு வினவு மொழித் தரவுத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. நிர்வாகி தனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டு தனது விருப்பமான உலாவியின் உதவியுடன் நிர்வாக கட்டுப்பாட்டகத்தை மேலாண்மை செய்வார். இதன் போது வார்ப்புருக்கள் மாற்றுவதன் மூலம் உள்ளடக்கம் மாறாமல் இணையத்தின் வெளித்தோற்றம் மாற்றப்படும். நிரல்கூறுகள் (modules),நீட்சிகள் (plugins) என்பன மேலதிகமாக இணைக்கப்படும் புதிய பகுதிகள் ஆகும். உதாரணமாக, எழுந்தமானமாகத் தோன்றும் படிமங்களை அமைக்க அதற்கென்று உள்ள நிரல்கூற்றை இணைத்தால் போதும், பின்னர் அந்த நிரல் கூறுகளைத் தேவைக்குத் தகுந்தவாறு இடது புறமோ வலது புறமோ மாற்றி அமைக்கலாம். CMS-சை உருவாக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த படிவ மொழி எழுத்தாளர்கள் தேவை, ஆனால் இதனைப் பயன்படுத்த சிறிய அறிவே போதுமானது. CMS உடைய சில நன்மைகளைப் பார்ப்போம்; இணைய உள்ளடக்க மேலாண்மைக் கட்டகங்கள். படிவ மொழிகளைப் பொறுத்தும் உருவாக்கப்பட்ட விதத்தினைப் பொறுத்தும் பல்வேறுபட்ட இணைய CMSகள் உண்டு. JAVA, PHP, PYTHON, ASP.NET, […]
எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். மைக்கிரோசொப்ட் வின்டோசுக்கான நிறுவல் முறை தரவிறக்கம் செய்து கொள்க:http://www.apachefriends.org/en/xampp-windows.html செல்லவும். நிறுவி முடிந்த பின்னர் Start –> Programs –> Xampp என்பதைச்சொடுக்கி அல்லது நேரடியாக நிறுவிய பக்கத்துக்குச் சென்று xampp-control என்பதைச் சொடுக்கி XAMPP Control Panel-ஐ இயக்கலாம். Apache, MYSQL என்பவற்றை துவங்க வேண்டும். இப்போது உங்கள் இணைய உலாவியில் “localhost” அல்லது “127.0.0.1” என்று எழுதி இடுவதன் மூலம் கட்டுப்பாட்டுப் பக்கத்தை அணுகலாம். இணையக் கோப்புகள் எல்லாம் “htdocs” (C:\www\xampp\htdocs) கோப்பகத்துக்குள்ளே காணப்படும். htdocs உள்ளே வேறொரு கோப்பகம் உருவாக்கி (எ.கா: mywebsite ) அதனுள்ளே ஒரு index.php கோப்பை உருவாக்குங்கள் index.php உருவாக்கல்: notepad திறக்கவும், அங்கு ஏதாவது எழுதவும், பின்னர் save as typeஇல் எல்லாம் எனத் தெரிவு செய்து கோப்புப் பெயருக்கு index.php என எழுதவும். நீங்கள் தமிழில் எழுதினால் கீழே உள்ள ANSI என்பதை unicodeக்கு மாற்றத் தவறவேண்டாம். இப்போது C:\www\xampp\htdocs\mywebsite உள்ளே index.php இருக்க வேண்டும். உலாவியில் localhost/mywebsite என்று இடுங்கள் நீங்கள் எழுதியதைக் காணலாம்.
கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் பயன்படுத்தும் கணினியில் (உதாரணமாக: விண்டோஸ்10) சேவையக மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம், ஆனால் இவற்றின் பயன்பாடு இணைய வடிவமைப்பு உருவாக்கத்தில் சோதனை செய்து கொள்ள அமைகின்றது. இம்மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு சாதரண கணினியை சேவையகமாக மாற்ற முடியாது, அப்படிப் பயன்படுத்தினாலும் அக்கணினி சுமையைத் தாங்காது என்பது அறியவேண்டியது ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற, விண்டோசுக்கான சேவையக மென்பொருள் XAMPP ஆகும். இது இலவசமாகக் கிடைக்கின்றது. இதில் இரண்டு முக்கிய சேவையகம் உள்ளது: php நிரலுக்குரிய Apache சேவையகம் மற்றும் MySql தரவுத்தளத்துக்குரிய சேவையகம்.
முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார். [1] முகமாற்றுப் பொருத்தால் பலன் பெறுவோர்வெட்டுக்காயம், துப்பாக்கிக் குண்டுக்காயம், எரிகாயம் போன்ற காயங்களால் அல்லது பிறப்பிலேயே முகம் உருக்குலைந்தவர்கள் இம்மாற்றுப் பொருத்து அறுவைச் சிகிச்சையால் பலனடையலாம். இதுவரை 4 பேரே முழுமையான முகமாற்றுப் பொருத்துக்குட்பட்டவர் ஆவர். வரலாறு முகமாற்றுப் பொருத்து நடைபெறாத முன்னைய காலங்களில் காயமுற்றவரின் பிட்டப்பகுதியில் அல்லது தொடைப்பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு முகத்தில் பதிகை செய்யப்படுவதே சிகிச்சையாக இருந்தது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் முகம் முகமூடி போன்று தோற்றம் அளிக்கக் காணப்பட்டது; அவர்களது முக அசைவு குன்றிப்போனது; மொத்தத்தில் மனித முகம் ஒன்றை மீளப்பெற முடியா நிலை இருந்தது. உலகின் முதல் முகமீளப் பொருத்து 1994இல் வட இந்தியாவில் ஒன்பது வயது நிரம்பிய சந்தீப் கவுர் எனும் சிறுமியின் தலைமுடி சூடடிக்கும் இயந்திரத்தில் அகப்பட்டுப்போகவே முகம் முற்று முழுதாக தலைத்தோலுடன் வெட்டி அகற்றப்பட்டது. சந்தீப்புடைய குடும்பத்தினர் நினைவிழந்த நிலையில் இருந்த சந்தீப் கவுரையும், அச்சிறுமியின் முகத்தையும் தலைத்தோலையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த பெரிய வைத்தியசாலைக்குச் சென்றனர். இந்தியாவின் சிறந்த அறுவைச்சிகிச்சை நிபுணர்களுள் ஒருவரான ஆபிரகாம் தோமசு என்பவரால் உலகின் முதல் முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது. [2] 1996இல் இதேபோன்று அவுத்தேரேலியா மாநிலம் விக்டோரியாவில் ஒரு பெண்ணுக்கு முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது. [3] பகுதி முகமாற்றுப் பொருத்து உலகின் முதல் பகுதி முகமாற்றுப்பொருத்து 27 நவம்பர் 2005[4][5]இல் நடைபெற்றது. இசபெல்லா டினுவா (Isabelle […]
புளோரின் (F) எனும் தனிமத்தின் அயன் வடிவமே புளோரைடு (F-) ஆகும், இது இயற்கையில் பல்வேறுபட்ட மூலங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள், தேநீர், கனிப்பொருள் நீர் (mineral water), கல்லீரல், மீன், முட்டை, கடல் உணவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே கிடைக்கின்றது. புளோரின் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து அல்ல, எனினும் இது பற்சொத்தையைக் கட்டுப்படுத்துவது மற்றுமன்றி, கல்சியம், உயிர்ச்சத்து ‘டி’யுடன் சேர்ந்து என்புக்கோறை நோய் (osteoporosis) வராமல் தடுக்கவும் உதவுகின்றது. பல் மருத்துவர்களால் பற்களைச் சுத்தம் செய்த பிற்பாடு பயன்படுத்தப்படுகின்றது. இதய நோய்கள் மற்றும் உறுப்புகளில் கல்சியம் படிதல், தசை எலும்பு நோய்கள் முதலியவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. குடிக்கும் நீரில் இது சோடியம் புளோரைடு (NaF) வடிவில் சேர்க்கப்படுகின்றது, எனினும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே புளோரின் உடலுக்குத் தேவை, அளவுக்கு மிஞ்சினால் புளோரின் நச்சுமையாகும்.குறைபாடு: உணவில் அல்லது நீரில் புளோரைடு அல்லது புளோரின் அளவு குறைவதால் ஏற்படுவதாகும். இக் குறைபாட்டால் பற்சொத்தையும் (பற்சூத்தை) என்புக்கோறை நோயும் உருவாகக்கூடிய தீவிளைவு உண்டு. நீர் < 1 ppm அளவில் புளோரினைக் கொண்டிருப்பது நன்மை தரும் விளைவைத் தரும்.பற்சொத்தையைக் கட்டுப்படுத்த புளோரைடு அடங்கிய பற்பசைகள் பரந்தளவில் உள்ளன. நச்சுமை: மிகையான புளோரின் அளவு பற்களிலும், என்புகளிலும் புளோரைடு பதிவுகளை ஏற்படுத்தக்கூடியது. நீரில் > 10 ppm அளவில் இருத்தல் இத்தகைய விளைவுகளை உண்டாக்கும். சிறார்களில் பாற்பல் விழுந்து நிலையான பல் வளரும் சந்தர்ப்பத்தில் மிகையான புளோரின் அளவு பற்களைச் சேதப்படுத்தும். ஒரு கிலோகிராம் எடைக்கு 3-5 மில்லி கிராம் (3–5 mg/kg) புளோரைடு எடுப்பது நச்சுமை அறிகுறிகளை வெளிப்படுத்தும். மிகவும் தீயவிளைவைத் தரும் அளவுகள் வயது வந்தோரில் 32–64 mg/kg , சிறார்களில் 16 mg/kg ஆகும். இதன் ஆரம்ப அறிகுறிகளாக வெண்கட்டி நிறத்திலான ஒழுங்கற்ற பொட்டுக்கள் பல் மிளிரியின் மேற்பரப்பில் பரவியிருக்கும். பின்னர் இவை மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தை அடையும், இது ஒருவகை பலவண்ணத் தோற்றத்தைக் […]
எள் (Sesamum Indicum) அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை. இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது. செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. வேற்று மொழிப்பெயர்கள்ஆங்கிலத்தில் ‘sesame’ ,உருது, சமஸ்கிருதம், ஹிந்தியில் ‘திலா” (தைலம் எனும் சொல் இதிலிருந்து பிறந்தது) மலையாளம், கன்னடம் : எள்ளு தெலுங்கு : நுவுளு உருசியம்: குன்(zh)சுத் விதை விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப்படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கருப்பு எள்ளும் அதன் எண்ணெய்யும் பெரும்பாலும் உணவு, மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் என்று திரிபடைந்தது, ஆனால் பொதுவாக எள்ளில் இருந்து பெறப்படுவதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளு விதைகள் வெதுப்பி (பாண்), ஹம்பர்கர் போன்றனவற்றில் சேர்க்கப்படுவதுண்டு. எள்ளுருண்டை எனும் சுவையான உணவுவகையும் எள்விதைகளில் இருந்து உருவாக்கப்படுகின்றது. ஆரோக்கியத்தில் எள்ளு லிக்ணன் (lignin) எனப்படும் வேதியற்பொருள் பொதுவாகத் தாவரங்களில் காணப்படுகின்றது. எள் விதையில் உள்ள செசாமின் (Sesamin), செசாமோலின் எனும் ஒருவகை லிக்ணன்கள் கொலஸ்டரோல் அகத்துறிஞ்சப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் கொலஸ்டரோலின் உற்பத்தியையையும் குறைக்கின்றது. பைட்டோஸ்டெரோல் எனப்படும் பதார்த்தமும் கொலஸ்டரோலின் அளவைக்குரைக்க உதவுகிறது. இதைத்தவிர இவை ஒட்சியேற்றஎதிர்ப்பொருட்களாகவும் (உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்- antioxidant), கல்லீரலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கு உதவுவனவாகவும், மூப்படையும் செயலைத் தள்ளிப்போடும் தன்மை உடையனவாகவும் உள்ளன. செசாமின் எனப்படும் பதார்த்தம் புற்றுநோய்க்கு எதிரானதாகவும் உள்ளது. ஏனைய எண்ணெய் வகைகளுடன் ஒப்பிடுகையில் நல்லெண்ணெய் […]
ஜூம்லா ஒரு பிரசித்திபெற்ற இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். PHP நிரல் மொழியில் ஆக்கப்பெற்றிருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோருக்கு PHP நிரல் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. Open Source Matters (OSM) எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். இதன் நிரல் மொழியாக பி.எச்.பியும் (PHP) தரவுத்தள மொழியாக மைசீக்குவெலும் (MySQL) தொழிற்படுகின்றது, எனினும் இவற்றைப் பற்றிய அறிவு ஜூம்லா பயன்படுத்துவருக்குப் பெரிதாகத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எந்தவொரு வகையான இணையதளத்தையும் ஜூம்லா ஒருங்கியம் மூலம் இலகுவில் உருவாக்கலாம், சுருங்கக்கூறின், இதனைப் பற்றிக் கற்றுக்கொள்ளல் மிக எளிது. ஜூம்லாவை நிறுவியபின்னர் இலவசமான அல்லது வர்த்தக நீட்சிகள் கொண்டு இன்னமும் இணையதளத்தை மெருகூட்டலாம். ஜூம்லா உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தைப் பயன்படுத்தி ஒரு இணைய தளம் உருவாக்குவது பற்றி இப்பதிவில் அறிய இருக்கின்றோம். இதற்கு முன்னர் இணைய முகவரி, இணைய இடம் போன்றவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது பற்றி சுருக்கமாக இங்கே:இணையதளம் உருவாக்கல் அறிந்துகொள்ளலாம். இணைய இடம் இல்லாமலேயே உங்கள் சொந்தக் கணினியிலேயே இவற்றை முதலில் செய்து பார்க்கலாம், இதற்கு உங்கள் கணினியில் சேவையகம் (server) ஒன்றை நிறுவவேண்டும், இதற்கான விளக்கம் உங்கள் கணினியில் சேவையகம் -இல் உள்ளது. முதலில் இந்த இலவச உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தை ஜூம்லா இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். தரவிறக்கம் செய்க: http://www.joomla.org/download.html தற்போதைய ஜூம்லா வெளியீடு 3.* இங்கு காட்டப்பட்டுள்ளது ஜூம்லா 1.7.* க்குரிய விளக்கம், எனினும் நிறுவுதல் இரண்டுக்கும் ஒன்றே. மேலும் இவ்விரு வெளியீடுகளுக்கும் இடையில் பெரிதளவு வேறுபாடு இல்லை.
இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். [1]. இதய அடைப்பிதழ் நோய்களின் போது அடைப்பிதழ்களில் குறுக்கத்தால் அல்லது குறைதிறனால் ஏற்படும் குருதியோட்ட மாறுபாடு அல்லது அசாதரணமான குருதி செல்லும் வழிகள் தோன்றும் போது உண்டாகும் குருதியோட்ட மாறுபாடு போன்றவற்றால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு குறைபாட்டு முணுமுணுப்பு ஆகும்.இதயத்தின் சுருங்கி விரிதலைப் பொறுத்து இதய முணுமுணுப்பு வகைப்படுத்தப்படுகிறது. இதயம் சுருங்கும் போது ஏற்படும் முணுமுணுப்பு ஒலியானது இதயச்சுருக்க முணுமுணுப்பு (systolic heart murmur) என்றும் இதயம் விரிவடையும் போது ஏற்படும் முணுமுணுப்பு ஒலியானது இதய விரிவு முணுமுணுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் இடைவிடாது ஏற்படுமாயின் தொடர் முணுமுணுப்பு எனப்படும். [2] வகைகள் ஏழு வேறுபட்ட இயல்புகளைப் பொறுத்து இதயமுணுமுணுப்பு பாகுபடுத்தப்படலாம்: நேரம், வடிவம், அமைவிடம், பரவுதல், தீவிரம், சுருதி, தன்மை.[3] * நேரம் முணுமுணுப்பானது இதயச்சுருக்கதின் போது அல்லது விரிவின் போது ஏற்படுவதைக் குறிக்கிறது. * வடிவம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒலியின் தீவிரத்தைக் குறிக்கிறது ; இவை சீர் அதிகரிப்பாக (crescendo) அல்லது சீர் குறைதலாக (decrescendo) அல்லது அதிகரித்துப் பின்னர் குறைதலாக காணப்படலாம்( crescendo-decrescendo). * அமைவிடம் எங்கே முணுமுணுப்பு சிறப்பாக இதய ஒலிமானி உதவியுடன் கேட்கலாம் என்பதைக் குறிக்கிறது. மார்பில் இந்த அமைவிடங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இதயத்தின் பகுதியைக் குறிக்கிறது. எ.கா: இடது இரண்டாம் விலா என்பு இடைவெளியில் நுரையீரல் அடைப்பிதழ்க்குரிய ஒலி கேட்கலாம். * பரவுதல் என்றால் குறிப்பிட்ட […]
தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் அவசியமாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையான வேதியியல் வல்லுனர்கள் தனிமங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆராய்ந்தனர். மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்பு போன்ற தனிமங்களை தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க முடிந்தது.செருமானிய நாட்டைச் சேர்ந்த என்னிக் பிராண்ட் (Hennig Brand) எனும் இரசவாதி 1669ம் ஆண்டளவில் பொசுபரசைக் கண்டுபிடித்தார், இதுவே புதியதொரு தனிமத்தை மனிதன் அறிந்ததற்கான முதற்பதிவாக உள்ளது. ஏனைய இரசவாதிகள் போன்று, மதிப்புக் குறைந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும், இறவாத்தன்மையைக் கொடுக்கும், இளமையாக உருமாற்றும் ‘தத்துவஞானியின் கல்’ (Philosopher’s stone) அல்லது இரசவாதக்கல் என்று அழைக்கப்படும் பதார்த்தம் ஒன்றைத் தேடி இவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இத்தகைய ஆய்வில் சிறுநீரைப் பயன்படுத்தி இருந்தார். சிறுநீரை பல படிமுறைகளுக்குட்படுத்தி வடித்த போது இறுதியில் வெண்மையான பிரகாசிக்கும் பதார்த்தம் ஒன்றைப் பெற்றார், இதற்கு பொசுபரசு எனப் பெயரிட்டார். இலாவோசியர் 1789-ஆம் ஆண்டில் வேதியியல் தனிமங்கள் பற்றிய ஒரு பாடநூலை இலாவோசியர் வெளியிட்டார். இதுவே முதலாவது புதியகாலத்து வேதியியற் பாடநூலாகக் கருதப்படுகின்றது. தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியேகண்டு சொன்ன பெரும்பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால வேதியியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இவர் தனிமங்களை உலோகங்கள், அல்லுலோகங்கள் என்று மட்டுமே வகைப்படுத்தி இருந்தார். டோபரின்னரின் மும்மைகள் 1828-இல் இத்தாலிய வேதியியலாளர் ஜொகான் வோல்வ்காங்க் டோபரின்னர் என்பவர் இயல்பொப்பின் அடிப்படையில் தனிமங்களை மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தினார். இத்தொகுதிகள் தனிம மும்மைகள் (மூலக மும்மை) எனப்படும். இவ்விதிப்படி மூன்று தனிமங்கள் […]
எட்டுத்தொகை என்பது சங்க காலத்தின் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட எட்டு நூல்களின் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு தொகை நூல்களும் பல புலவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூற் தொகுப்பில் பல பாடல்களைப் புனைந்தவரின் பெயர் காலத்தால் அழிந்து போயுள்ளது. எட்டுத் தொகைநூல்களைப் பற்றிய வெண்பா நூல்களின் பெயர்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. இவற்றைப் பாடியோர் ஒரே காலத்தில் இருக்கவில்லை. இவர்களது தொழில் கூடப் பல்வேறுபட்டவை. அகப்பொருள், புறப்பொருள் மற்றும் இவை இரண்டும் கலந்து என இந்த எட்டுத் தொகை நூல்களையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அக நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புற நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல். அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. புறநூல்கள் மன்னனை அவனது போர்த்திறமையை மற்றும் வெற்றியைக் குறித்துப் பாடப்பட்டதைக் குறிக்கின்றன.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று. முதலெழுத்துகள் தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும். “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” – தொல்காப்பியம் “உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” – நன்னூல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும். பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. உயிரெழுத்துகள் உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒஎன்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன. உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே […]
தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும். அ, ஆ எனும் முதல் இரு எழுத்துக்களும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு, வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றன. இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கின்றன. உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன ! நாக்கானது வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. நாக்கின் அமைவைப் பொறுத்தும் இதழ்கள் குவிவதைப் பொறுத்தும் உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது: இதழ் குவிந்த உயிர்– இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவித்து உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு. உ – ஊ – ஒ – ஓ – ஔ இதழ் குவியா உயிர் – இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவியாமல் உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு.அ – ஆ – இ – ஈ – எ – ஏ – ஐ முன் உயிர் – ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும் தொடுகையில் இல்லாமல் (தடை ஏற்படுத்தாமல்) விறைப்பான நிலையில் இருக்கும்போதும் பெறப்படும் ஒலி. இச்சமயத்தில் நாக்கானது மேல் எழுந்து […]
பௌலியின் தவிர்ப்புத் தத்துவம்: குறிப்பிட்ட அணுவில், இலத்திரன்களின் குவாண்டம் எண்களின் பங்கீடு பௌலியின் தவிர்ப்பு தத்துவத்தைப் பின்பற்றி அமைகின்றன. ஓர் அணுவின் சுற்றுப்பாதைத் துணை ஓட்டில் உள்ள இரு இலத்திரன்களின்* குவாண்டம் பெறுமானம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட ஓட்டில், n, l, m ஆகிய மூன்று குவாண்டம் எண்களின் ஒரே அளவு பெறுமானத்தை இரு வெவ்வேறு இலத்திரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் நான்காம் குவாண்டம் எண்ணின் பெறுமானம் (s) மாறுபடும். எனவே, s = +1/2 என ஒரு இலத்திரன் பெற்றிருந்தால், மற்றைய இலத்திரனின் ‘s’ பெறுமானம் –1/2 என அமையும். பிறிதொரு முறையில் சொல்ல வேண்டுமெனில், ஒரே துணை ஓட்டில் அமைந்துள்ள இலத்திரன்கள் எதிர் சுழற்சிகளைப் பெற்றிருக்கும். () எடுத்துக்காட்டாக, சுற்றுப்பாதையின் இரண்டாம் ஓடு ‘L’ ஐ நோக்கின், இந்த கூட்டிற்கு n = 2 ஆகும். n = 2 எனில் l, m, s ஆகிய குவாண்டம் எண்களின் மாறுபட்ட எட்டுவித சேர்க்கைகளை பின்வருமாறு குறிக்கலாம். (i) n = 2, l = 0, m = 0, s = +1/2 (s துணை ஓடு / s துணை ஆற்றல் மட்டம்) (ii) n = 2, l = 0, m = 0, s = –1/2 (s துணை ஓடு / s துணை ஆற்றல் மட்டம்) (iii) n = 2, l = 1, m = 0, s = +1/2 (p துணை ஆற்றல் மட்டம் ) (iv) n = 2, l = 1, m = 0, s = –1/2 (p துணை ஆற்றல் மட்டம் ) (v) n = 2, l = 1, m = +1, s = +1/2 (p துணை ஆற்றல் மட்டம் ) (vi) n = 2, l = 1, m = +1, s = –1/2 (p துணை ஆற்றல் மட்டம் ) (vii) n = 2, l = 1, m = –1, s = +1/2 (p துணை ஆற்றல் மட்டம் ) (viii) n = 2, l = 1, m = –1, s = […]
ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம் பாடத்தில் இலத்திரன்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டது. இலத்திரன் நிரப்பப்படுதல் ls, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s …………. எனும் வரிசையில் அமைந்துள்ளன, எனினும் சில தனிமங்களில் உறுதி நிலையைப் பெறுவதற்காக இலத்திரன்கள் கடைசி வரிசையில் மாறி அமையும்.செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கை = 29 (2, 8, 18, 1)எதிர்பார்க்கப்படும் இலத்திரன் நிலையமைப்பு =1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 அமைந்துள்ள இலத்திரன் நிலையமைப்பு = 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து A-யைபீட்டா கரோட்டினில்இருந்தும், நியாசினைடிரிப்டோபான்என்னும்அமினோ அமிலத்தில்இருந்தும், உயிர்ச்சத்து D-யை தோலைபுற ஊதாஒளிக்கு உட்படுத்துவதின் மூலமும் உற்பத்தி செய்ய இயலும்; இருப்பினும், இவற்றின் போதுமான அளவிற்கு நல்லசத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது. விற்றமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தின் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது. உயிர்ச்சத்துச் சமகூறு (vitamer) உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர் வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தொழில் குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை எடுத்துக்கொண்டால் அதற்கு சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெதயில்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் […]
ஓர் அணுவில் காணப்படும் இலத்திரன்களின் நிலையை விபரிக்கத் தேவைப்படும் குறிப்புகளே குவாண்டம் எண்களாகும் (இலங்கை வழக்கு: சக்திச்சொட்டெண்). ஓர் அணுவில் பல எண்ணிக்கை உடைய இலத்திரன் சுற்றுப்பாதைகள் காணப்படும். ஒரு சுற்றுப்பாதையின் அளவு சிறியதாயின், இலத்திரன், உட்கருவின் அண்மையில் அமைய வாய்ப்புண்டு. இவ்வகை சுற்றுப்பாதைகள் குறிப்பிட்ட எண் தொகுதிகளாக ‘குவாண்டம் எண்களாக’ குறிப்பிடப்படுகின்றன. ஆற்றல், அளவு, வடிவம், மற்றும் இலத்திரன் திசை நோக்கும் பண்பு ஆகியவைகளை குறிப்பதற்கு நான்கு குவாண்டம் எண்கள் (n, ℓ, m, s) தேவைப்படுகின்றன. முதன்மைக் குவாண்டம் எண் (n)இது சுற்றுப் பாதையின் அளவை விபரிக்கின்றது. அணுவுள், இலத்திரன்கள் மாறுபட்ட ஆற்றல் மட்டங்களில் அல்லது சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆற்றல் மட்டமும் குறிப்பிட்ட குவாண்டம் எண், அதாவது முதன்மைக் குவாண்டம் எண் (principal quantum number – தலைமைச்சத்திச்சொட்டெண் அல்லது பிரதான சக்திச் சொட்டெண்) என்று அழைக்கப்படுகிறது. இதுவே ‘ n ‘ என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. ‘n ‘ முழு எண் பெறுமானங்கள் உடையது. n = 0 ஆக ஒருபோதும் இராது. n = 1,2,3,4…… முதன்மைக் குவாண்டம் எண் (n) அதிகரிக்க சுற்றுப் பாதை பெரியதாகும், இலத்திரன்கள் கருவில் இருந்து தொலைவில் மிக நீண்ட இடைவெளியில் அமையும், கருவில் இருந்து தளர்வாக இலத்திரன்கள் பிணைக்கப்பட்டு இருக்கும், அதனால் இலத்திரன்களின் ஆற்றலும் உயரும். நீல்ஸ் போரினுடைய அணு மாதிரியில் விளக்கப்பட்ட ஒரேயொரு குவாண்டம் எண் இதுவேயாகும். சுற்றுப்பாதையின் முதல் ஓடு ‘K’ என்றும் இரண்டாம் ஓடு ‘L’ என்றும், மூன்றாவது ஓடு ‘M’ என்றும், நான்காவது ஓடு ‘N’ என்றும் முறையே குறிக்கப்படுகின்றன. உட்கருவிற்கு மிகச் சமீபமாக அமைவது K ஆற்றல் ஓடாகும். இரண்டாவதாக ‘L’ம் மூன்றாவதாக ‘M’ம் அமைகின்றன. n 1 2 3 4 ஓடு K L M N துணைக் குவாண்டம் எண் அல்லது சுற்றுப்பாதைக் கோண உந்தம் (ℓ) (azimuthal quantum number / orbital angular momentum) இது […]
அயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச்சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும். ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி எதிர்மின்னியைக் (எலக்ட்ரானை/இலத்திரனை) கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து வெளியாக முறையே 2, 8 எதிர்மின்னியைக் (இலத்திரனை/எலக்ட்ரானை) கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) இழந்து Na+ அயனியை ஆக்கும். Na → Na+ + e− Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு எதிர்மின்னிகளைக் (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) கொண்டது. ஏழு எதிர்மின்னிகளை (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) இழந்து உறுதியடைவதை விட ஒரு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஓர் எதிர்மின்னியைப் (இலத்திரனை/எலக்ட்ரானை) பெறுவதன் மூலம் Cl– அயனியை ஆக்கும். Cl + e− → Cl– ஈற்றோட்டில் இருந்து முதலாவது இலத்திரனை அகற்றத் தேவையான ஆற்றல் முதலாவது அயனியாக்க ஆற்றல் எனப்படும். இதே போல இரண்டாவது, மூன்றாவது என்று தொடர்ந்து செல்கின்றது. முதலாவது அயனியாக்க ஆற்றல்: X → X+ + e– இரண்டாவது அயனியாக்க ஆற்றல்: X+ → X2+ + e– மூன்றாவது அயனியாக்க ஆற்றல்: X2+ → X3+ + e– காரமண் உலோகங்கள் கார உலோகங்களைக் காட்டிலும் அளவில் சிறியன. ஆனால், அதிக உட்கரு மின்னூட்டத்தைப் பெற்றுள்ளன. எனவே, இலத்திரன்கள் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதால், கார உலோகங்களைக் காட்டிலும் முதல் அயனியாக்க ஆற்றல் அதிக மதிப்பை உடையன. இரண்டாம் அயனியாக்க ஆற்றல், முதல் அயனியாக்க […]
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல், சுவறுதல் அல்லது உறிஞ்சுதல் எனப்பொருள். இஞ்சி என்றால் கோட்டை மதில் என்றும் பெயர். இவற்றில் இருந்து பெயர் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இலத்தின் பெயரான Zingiber தமிழ் மற்றும் மலையாளச் சொற்களான இஞ்சி + வேர் என்பவற்றில் இருந்து தோன்றி இருக்கலாம். Zingi (இஞ்சி) + ber (வேர்) வேறு பெயர்கள் அல்லம், ஆசுரம், ஆத்திரகம், ஆர்த்திரகம், கடுவங்கம் உலர்ந்த இஞ்சி: சுக்கு, வேர்க்கொம்பு, சுச்சு கண்டாத்திரிலேகியம் என்பது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இலேகியம் ஆகும். இஞ்சியின் பொதுவான குணங்கள் இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது. இலைப்பகுதி உலர்ந்ததும் இஞ்சியின் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும். உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் […]
வலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் குறைந்து அமிலத்தன்மையைக் குருதி பெறுதல், இலகுவில் குருதிப்போக்கு ஏற்படக்கூடிய நிலை, கல்லீரல் – மூளை நலிவு. சில வேளைகளில் சுயமாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சிகிச்சை வழங்கப்படாத நிகழ்வுகள் மரணத்தில் முடியலாம். (1)நச்சுத்தன்மைநச்சுமையை உண்டாக்கவல்ல மருந்தின் அளவு வேறுபடக்கூடும். வயது வந்தோரில் ஏழு தொடக்கம் பத்து கிராமிற்கு மேற்பட்ட ஒருநேரப் பயன்பாடு அல்லது 150-200 மில்லிகிராம்/ கிலோகிராம் உடல் நிறை அளவிலான பயன்பாடு நஞ்சூட்டத்தை ஏற்படுத்தவல்லது. (2) 24 மணிநேரத்தில் வெவ்வேறு சிறிய மருந்தளவுகள் மேற்கூறிய மொத்த அளவைத் தாண்டுமாயினும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். அறிகுறிகள் மூன்று கட்டங்களாக நச்சுத்தன்மை ஏற்படுவதைப் பிரிக்கலாம். முதலாவதாக, அளவுமிகைப்பாட்டின் பின்னர் ஒரு சில மணிநேரங்களுக்குள் ஏற்படுவது: குமட்டல், வாந்தி, வெளுப்பு, வியர்வை. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் முதல் 24 மணி நேரங்களில் தென்படுவதில்லை. மிகவும் அரிதாக, மிகவும் அதிகமான மருந்தளவுப் பயன்பாட்டின் பின்னர் ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம் அல்லது கோமா முற்கூட்டியே ஏற்படலாம். இரண்டாவது கட்டம் 24 தொடக்கம் 72 மணிநேரப் பொழுதில் நிகழ்பவை, இதன்போது கல்லீரல் பாதிப்படைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும், பொதுவாக கல்லீரல் கலங்கள் பாதிப்படைகின்றன. கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்பு, பரசிட்டமோலின் வளர்சிதை வினைமாற்றப் பொருளான N-அசெட்டைல்-p-பென்சோகுவினோனிமைன் (NAPQI) எனும் பதார்த்தம் மூலம் நிகழ்கிறது, இதனால் கல்லீரலின் இயற்கை வேதிப்பொருளான குளுட்டாதியோன் சிதைக்கப்பட்டு கல்லீரல் கலங்களும் சேதமடைகின்றன, இதனையடுத்து கல்லீரல் செயலிழக்கின்றது. பாதிப்படைந்தவர் வலது கீழ் விலா என்புப் பகுதியில் […]
உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் பொருந்தாது. இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். [1] கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது. [2] ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம்.[3] உயிர்ச்சத்து டி3 குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் (வேறு பெயர்கள்: கல்சிபிடையோல், 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோல், 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி3, 25(OH)D3)பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. [4] கல்லீரலில் ஏர்கோகல்சிபெரோல் (உயிர்ச்சத்து டி2) 25-ஐதரொக்சி ஏர்கோகல்சிபெரோலாக (வேறு பெயர்கள்: 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி2, 25(OH)D2)மாற்றம் அடைகிறது. ஒரு நபரது உயிர்ச்சத்து டியின் நிலையை அறிவதற்கு இந்த இரண்டு உயிர்ச்சத்து ‘டி’யின் வளர்சிதைக்கூறுகளின் அளவுகள்குருதித் தெளியத்தில் கணிக்கப்படுகின்றன. [5][6] தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்ட கல்சிடையோல் நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் ஒரு இயக்குநீராகத் தொழிற்படுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் […]
தமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் என சிலர் அழைப்பர்.கி.பி.400 ஆண்டளவில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். ஆனால் நாம் இருக்கும் காலப்பகுதியில் மீண்டும் நான்காம் சங்கம் கி.பி 1901இல் பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல்கொண்ட தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் எனப்பட்டது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது. தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது கடைச்சங்கம் என்று அழைக்கப் பட்டது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. மூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் […]
ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89 அரசர்கள் 4440ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார் களவியல் உரை ( இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றிவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறைஇலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம். )கூறுகிறது. இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன. இவர்களுள் விரிசடைக் கடவுள் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும்இறையனார்களவியல் உரை கூறுகிறது. இவர்களுள் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார். அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. இதன்படி முதலாவது தமிழ் இலக்கணம் இக்காலப்பகுதியிலேயே வகுக்கப்பட்டுள்ளது என்பதனை அறியலாம். தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு முதற் சங்கம்4440 ஆண்டுகள் தமிழ்ச் சேவை புரிந்தது. இக் காலத்தில் 4 […]
முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டுரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய 59 புலவர்கள் இடைச்சங்கத்தில் பாடினர். இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. 3700 ஆண்டுகளாக இந்த இடைச்சங்கம் நடைபெற்றுள்ளது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது. “இவ்வகை யரசிற் கவியரங்கேறினார் ஐவகையரசர் ஆயிடைச் சங்கம் விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக் கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்” என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது. இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுணுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 (?) அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழித்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு பல இடைச்சங்க இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.
இடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும். முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும். இடம் காலம் பெரும்புலவர் இயற்றிய நூல்கள் முதற் சங்கம் கடல் கொண்ட பாண்டியர் தலைநகர் பழைய தென்மதுரை அறுதியிட்டுக் கூற முடியவில்லை அகத்தியர் அகத்தியம் இடைச் சங்கம் கபாடபுரம் அறுதியிட்டுக் கூற முடியவில்லை தொல்காப்பியர் தொல்காப்பியம் கடைச் சங்கம் மதுரை கி.பி.300 வரை கபிலர் பரணர் ஒளவையார் திருவள்ளுவர் பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் – http://www.tamilvu.org/courses/degree/c031/c0311/html/c03116l1.htm
ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல் கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 4. ஈவது விலக்கேல் ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே. 5. உடையது விளம்பேல் உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா. 6. ஊக்கமது கைவிடேல் எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. 7. எண் எழுத்து இகழேல் கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். 8. ஏற்பது இகழ்ச்சி இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. 9. ஐயம் இட்டு உண் இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு உண்ணு. 10. ஒப்புரவு ஒழுகு உலகத்தோடு பொருந்த நடந்துகொள். 11. ஓதுவது ஒழியேல் அறிவு தரும் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. 12. ஔவியம் பேசேல் ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே. 13. அஃகம் சுருக்கேல் மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே. உயிர்மெய் வருக்கம் 14. கண்டொன்று சொல்லேல் பார்க்காததை பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே 15. ஙப் போல் வளை ‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும். “ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை […]
‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார். மேலும் படிக்க http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114602.htm http://library.senthamil.org/075.htm
பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு எதிராகப் பாயவும் உதவியாக உள்ளது. வளிமண்டலத்தில் அசையும் விதங்கள் விலங்கினங்கள் வளிமண்டலத்தில் அசையும் விதங்களைப் பற்றிய அறிவு அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது. பொதுவாக பறத்தல் என்றால் இறக்கைகள் தேவை. வழுக்கும் தன்மைக்கு இவை தேவையில்லை. வளிமண்டலத்தில் அசையும் விதம் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது – வலுவான வளிமண்டல அசைவு, வலுவற்ற வளிமண்டல அசைவு. வலுவான அசைவில், விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்தி காற்றியக்க விசையை உண்டாக்குகின்றன. வலுவற்ற அசைவில், காற்றால் அல்லது காற்றில் கீழே விழுவதால் உடலில் பிரயோகிக்கப்படும் காற்றியக்க விசையைப் பயன்படுத்தி அசைகின்றன. வலுவற்ற அசைவு இம்முறையானது விலங்கொன்று உயர்ந்த இடத்தில் இருந்து அசைவதற்கு தேவைப்படுகின்றது. மிதக்கும் அல்லது வழுக்கும் முறை: கிடை மட்டத்திற்கு 45 பாகைக்கும் குறைவான கோணத்தில் மேலிருந்து கீழே விழுதல். வான்குடை (பாரசூட்) முறை: கிடை மட்டத்திற்கு 45 பாகைக்கும் கூடுதலான கோணத்தில் மேலிருந்து கீழே விழுதல். விழுதல்: மேலிருந்து புவியீர்ப்பு விசைக்கெதிராகக் கீழே விழுதல் வலுவான அசைவு வலுவான அசைவு நான்கு தடவைகள் பரிணாம வளர்சியுற்றுள்ளன (தெரோசோர்கள், பூச்சிகள், பறவைகள், வௌவால் இனங்கள்). இங்கு விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்திப் பறக்கின்றன. பறக்கும் முறை: சிறகை அடித்து மேலே எழும்புதல் ஒரு விலங்கினம் மேற்கூறிய முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் அசைகின்றது. மிதக்கும் அல்லது வழுக்கும் செயற்பாடானது மரத்துக்கு மரம் தாவுவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய […]
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது.
ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.
நுண்நோக்கி (இலங்கை வழக்கு – நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். உயிரணுக்கள் (கலங்கள்) சிக்கலான தன்மைகளையுடையவை, மிக நுண்ணிய அமைப்புக்களைக் கொண்டுள்ளவை, இத்தகைய சிறிய அமைப்பும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதன் நுண்ணுறுப்புகளும் உயிரணு வல்லுநர்களுக்கு அதன் அமைப்பையும், செயற்பாடுகளையும் கண்டறிய பிரச்சனைகளாக அமைந்துள்ளன. உயிரணுவின் அமைப்பு மூலக்கூறுகளின் அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி அறிய பல கருவிகளும், வழிமுறைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஒரு சராசரியான மனித உயிரணு ஒன்றின் அளவு 10 மைக்ரோ மீற்றர்கள் (μm) ஆகும். உயிரணுக்கள் அனைத்தும் 5-500μm க்கு இடைப்பட்ட விட்ட அளவினைக் கொண்டவை. ஆனால் பெரும்பாலான உயிரணுக்கள் 10-150μm அளவு விட்டத்திலேயே காணப்படுகின்றன. அனைத்துலக அலகு முறையின் (SI unit) படி நீளத்தின் அலகு பின்வருமாறு குறிக்கப்படுகின்றது: 1 மீட்டர் (m) = 1000 மில்லிமீட்டர்கள் (mm) 1 மில்லிமீட்டர் (10-3 m) = 1000 மைக்ரோமீட்டர்கள் (μm) 1 மைக்ரோமீட்டர் (10-6 m) = 1000 நனோமீட்டர்கள் (nm) 1 நனோமீட்டர் (10-9 m) = 1000 பிக்கோமீட்டர்கள் (pm) 1 அங்ஸ்ட்ரொம்(Å) = 10-10m =0.1 நனோமீட்டர் நோக்கும் உபகரணங்களால் (தொலை நோக்கி, நிழற்படக் கருவி) குறிப்பிட்டவொரு தூர இடைவெளியில் (கோண தூரம்) இருவெவ்வேறு புள்ளிகளை வேறுபடுத்தி அறியக்கூடிய ஆற்றல் பிரிவலு ஆகும். இந்த இடைத்தூரம் மனிதக் கண்ணுக்கு 0.1 மில்லி மீற்றர் ஆகும். எனவே மனிதக் கண்ணின் பிரிவலு 0.1 மில்லி மீற்றர். வேறுவிதமாகக் கூறின், 0.1 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட பருமனுடைய பொருட்களை மனிதக்கண்ணால் நோக்கமுடியும். இதற்கும் குறைந்த அளவுள்ள பொருட்களை நோக்க உருப்பெருக்கி தேவைப்படுகின்றது, நுணுக்குக்காட்டி (நுண்நோக்கி) இதற்கு துணைபோகின்றது. மேற்காட்டிய படத்தில் […]
குறுந்தொகை எட்டுத்தொகையில் அக நூல்கள் பிரிவில் அடங்குகின்றது. அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பிகாமஞ் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே.”
கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற்பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.
தமிழ்மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல். பதிப்பு விபரம் அடிப்படைத்தமிழிலக்கணம். எம்.ஏ.நுஃமான். கல்முனை: வாசகர் சங்கம், 2வது பதிப்பு, ஜுலை 2000. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்) 214 பக்கம். விலை: ரூபா 225. அளவு: 21.5*14 சமீ. இது ஒரு நூலகம் சேகரிப்பு.
விசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் இருந்து நிரலாக்க மென்பொருளின் தற்போதைய இலவசப் பதிப்பைத் (Download Visual Studio Community) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். Download Latest Visual Studio Community : https://www.visualstudio.com/vs/community/ நிறுவும்போது உங்கள் பிரதான தேவை Visual Basic என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறுவல் கேட்கும்போது Visual Basic என்று குறிப்பிடுங்கள். தரவிறக்கம் செய்து அதனை நிறுவிய பின்னர் உங்கள் மென்பொருளாக்கப் பயணத்தைத் துவங்கலாம். இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுவது Visual Studio Ultimate 2012 பதிப்பு எனினும் நிரல்மொழியும் பயன்படுத்தும் விதமும் Visual Studio 2012 Express உடன் ஒப்பிடுகையில் ஒரே விதமாக அமைந்திருக்கும். Visual Studio Ultimate 2012 பதிப்பில் பல வசதிகள் உள்ளது, ஆனால் அது இலவசமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் முதல் மென்பொருள் உங்களது முதல் மென்பொருளை இந்தப் பயிற்சியின் இறுதியில் உருவாக்க முடியும். இப்பாடத் தொடரில் வெவ்வேறு வகுப்பில் கூறப்படவுள்ள ஒவ்வொரு படிமுறைகளையும் விளங்கிக்கொள்ளும்போது Visual Studio 2012 இன் ஒவ்வொரு கூறுகளையும் அறியும் வாய்ப்பு உண்டாகும். முதலில் ஒரு “வணக்கம் தமிழா!” எனும் சிறிய மென்பொருளை உருவாக்குவோம். Windows Forms Application Project உருவாக்கல் இப்போது மேலேயுள்ள படத்தில் காட்டியது போன்று காட்சியளிப்பதை காணலாம். இங்கேதான் ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் அடங்கியுள்ளன. நிரல் மொழியை எழுதுவதும் இங்கேதான். இப்போது சில தேவையான பகுதிகளைப் பார்ப்போம்; படத்தில் உள்ள எண்களுக்குரிய விளக்கம் […]
சென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project என்பதைத் தெரிவு செய்க. பின்னர் Visual Basic, Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க. கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான AlarmClock எனும் பெயரை எழுதலாம். உங்கள் மென்பொருள் சேமிக்கும் இடத்தை உலாவித் தெரிவு செய்க. இப்பொழுது உருவாகியிருக்கும் படிவத்தின் பெயரை Form1 என்பதில் இருந்து frmAlarmClock எனபதற்கு மாற்றுக. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் படிவத்தின் பெயர் “(Name)” என்று காணப்படும். அதற்கு அருகாமையில் உள்ள Form1தான் frmAlarmClock ஆக மாற்றப்படவேண்டியது. மேலும் கீழே பண்புப்பெட்டியில் இன்னுமொரு Form1 காணப்படும். இதுவே மென்பொருள் படிவத்தின் தலைப்பாக விளங்கப்போவது. இதனைத் தமிழில் “எழுப்பொலிக் கடிகாரம்” என்று மாற்றுவோம். காலக்கணிப்பி இப்பொழுது நாம் அறியவேண்டியது காலக்கணிப்பி (Timer) என்றால் என்ன என்பதைப் பற்றி. கருவிப்பெட்டியின் (toolbox) மேலே Timer என்று எழுதித் தேடுங்கள். கடிகாரத்தின் குறுஓவம் கொண்டுள்ள காலக்கணிப்பியைப் பிடித்து படிவத்துள் போடுங்கள். இப்பொழுது கீழே Timer1 தோன்றியிருப்பதைப் பார்க்கலாம். எமக்குத் தேவையான காலக்கணிப்பியின் பண்புகள்: பெயர்: Timer1 என்றிருப்பதை TimerClock என்று மாற்றுங்கள். எப்பொழுதும் பண்புப் பெயரை இவ்வாறு எளிதாகப் புரியும்படி மாற்றுவது நிரல் எழுதும் போது ஏற்படும் சில குளறுபாடுகளைத் தவிர்க்கும். செயற்படுநிலை (Enabled): இது True அல்லது False என்று மாற்றக்கூடியது. இடைவெளி (Interval): இது இயல்பாக 100 என்று இருக்கும். இது மில்லி செக்கன்கள் அளவு ஆகும். […]
உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக எவ்வித இடர்களோ நோயறிகுறிகளோ இருப்பதில்லை. எனினும் இயல்பாக உறுப்பு அமைந்துள்ள நபர்களிலும் பார்க்க இவர்களில் இதய சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களில் இடதுபுறத்தில் அமையவேண்டிய இதயம் வலது புறத்தில் காணப்படும். இது வலப்புற இதயம் (டெக்சோ கார்டியா) என அழைக்கப்படுகின்றது. இவ்வகை நபர்களுக்கு மருத்துவ எச்சரிக்கை அடையாள அணிகலன் வழங்கப்படுகின்றது. அவசரகால நிலைமைகளின்போது இடப்புறத்தில் கேட்க வேண்டிய இதய ஒலியை இந்நபர்களில் மருத்துவர்கள் உடனேயே வலது பக்கத்தில் கேட்க மருத்துவ அடையாள அணிகலன் உதவுகின்றது.[1] இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டாக குடல்வால் அழற்சி உள்ளது. பொதுவாக சாதாரண நபர்களுக்கு வலப் புறத்தில் ஏற்படக்கூடிய வலி, இவர்களுக்கு குடல்வால் இடதுபுறத்தில் அமைந்துள்ளதால் இடப்புறத்தில் ஏற்படும். உள்ளுறுப்பு இடப்பிறழ்வு ஒரு மரபணு தொடர்புடைய நிலையாகும். ஏறத்தாழ 25% உள்ளுறுப்பு இடப்பிறழ்வு மாந்தர்களில் முதன்மை பிசிர்முனைப்பு இயங்காமைக் (Primary ciliary dyskinesia) குறைபாடு (அல்லது கார்டாஜெனேர் கூட்டறிகுறி) காணப்படும். பிசிர்முனைப்பு சீதத்தை நுரையீரலில் இருந்து அகற்ற உதவும் ஒரு நுண்ணுறுப்பு, இதன் இயங்காமையால் சீதம் சளியாக வெளியேறுவது குன்றும். இது மேலும் நுண்ணுயிரித் தொற்றை ஏற்படுத்தும்.
இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது. இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை இறக்கின்றது (செயலிழந்து இறந்துவிடுகின்றது); உயிரிய இறப்பு உண்டாகின்றது. இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது. இதய நிறுத்தம் ஒரு மருத்துவ நெருக்கடி நிகழ்வு, தொடக்கவேளையிலேயே உரிய சிகிச்சை வழங்கப்படின் இதயம் பழைய நிலைக்கு மீளும், அன்றேல் இதய இறப்பு நிகழும் தீங்கு உண்டு. சிலவேளைகளில் திடீரென நிகழும் இதய நிறுத்தத்தால் இதயம் முற்றிலும் தன் தொழிற்பாட்டை இழக்கும் சூழல்கள் உண்டு, இது திடீர் இதய இறப்பு எனப்படும், இத்தகைய நேரத்தில் இதயம் பழைய நிலைக்கு மீளமாட்டாது. இதய நிறுத்தத்துக்குரிய சிகிச்சையின் நோக்கம் இதயத்தை மீளத் துடிக்கவைத்து, குருதிச் சுற்றோட்டத்தைச் சீர் செய்தல், மூச்சுவிடுதலை மீளக் கொணருதல் ஆகும். இதற்கு இதய-மூச்சு மீளுயிர்விப்பு (cardiopulmonary resuscitation) வழங்கப்படுகின்றது, தேவையேற்படின் குறுநடுக்க அகற்றலும் (defibrillation ) செய்யப்படுகின்றது. உசாத்துணைகள் Jameson, J. N. St C.; Dennis L. Kasper; Harrison, Tinsley Randolph; Braunwald, Eugene; Fauci, Anthony S.; Hauser, Stephen L; Longo, Dan L. (2005). Harrison’s principles of internal medicine. New York: McGraw-Hill Medical Publishing Division. ISBN 0-07-140235-7. “Sudden Cardiac Arrest Causes“. […]
தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க வல்ல தூக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக இருக்கலாம், சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில் நடை புரிவோரும் உண்டு. துயில் நடை புரிவோருக்குத் தாம் தூக்கத்தில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் சுய அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும் வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 செக்கன்களில் இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம். விளக்கம் தூக்கத்தின் படிநிலைகள் தூக்கமானது இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது: ரெம் (REM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்க உறக்கம், என்ரெம் (NREM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்கமற்ற உறக்கம். என்ரெம் தூக்கம் மேலும் மூன்று (முன்னர் நான்கு) நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நிலை 1 (இலகு உறக்க நிலை), நிலை 2 (கூட்டு உறக்க நிலை), நிலை 3 (மந்த அலை உறக்க நிலை). ஒருவரது உறக்கத்தில் இந்தநிலைகள் ஒரு சுழற்சியாக வந்துபோகும். நிலை 1 -> நிலை 2 -> நிலை 3 -> நிலை 2 -> ரெம் தூக்கம். ஒரு உறக்க சுழற்சி வட்டம் 1.5 மணிநேரம் நீடிக்கும். துயில் நடை பொதுவாக முன்னிரவில் (11.00 – 1.00) மந்த அலை உறக்க நிலையின் போது நிகழலாம். மூளை அலைகளில் ஒன்றான டெல்டா அலையின் செயற்பாடு மந்த அலை உறக்க நிலையின் போது அதிகமாகக் காணப்படுகின்றது. […]
வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் ஊடகம் போலத் தொழிற்படுகிறது. புரோசுடாகிளாண்டினின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட்ட வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். இந்த மருந்துகள் அடங்கிய கட்டுரையைப் பயன்படுத்தி உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ அல்லது எவரிற்கும் சிகிச்சை வழங்குதல் உகந்தது அல்ல! உங்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்தவருக்குச் சிகிச்சை தேவைப்படுமாயின் சிறந்த மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையின் பெயரிலேயே மருந்துகள் பயன்படுத்தல் வேண்டும். புரோசுடாகிளாண்டின் கொழுப்பமிலமான அரக்கிடோனிக் அமிலத்தில் இருந்து உருவாகுகின்றது, இந்த உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நொதியமாக சைக்கிளோஒக்சிசனேசு விளங்குகிறது, இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் இந்த நொதியத்தைத் தடுப்பதனால் புரோசுடாகிளாண்டின் உருவாகுதல் நிறுத்தப்படுகிறது, இதன் மூலம் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவும் கட்டுப்படுத்தப்படுகிறது. சைக்கிளோஒக்சிசனேசு சமநொதியங்களாகக் காணப்படுகிறது; சைக்கிளோஒக்சிசனேசு – 1 (COX-1), சைக்கிளோஒக்சிசனேசு – 2 (COX-2), சைக்கிளோஒக்சிசனேசு – 3 (COX-3) என்பன அவையாகும். அநேகமான இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் மேற்கூறப்பட்ட நொதியங்களைத் தாக்குகிறது, அதேவேளை தெரிந்தெடுத்துத் தாக்கும் மருந்துகளும் (COX-2) உண்டு. இந்த இயல் இயக்க முறையைப் பற்றி அசுப்பிரின் மூலம் விளக்கிய ஜோன் வேன் (1927-2004) இதற்காக நோபெல் பரிசைப் பெற்றார். பெரும்பான்மையான இயல் இயக்க முறையின் பகுதிகள் இன்னமும் தெளிவாக அறியப்படாமலேயே உள்ளன. வகைப்பாடு வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சலிசிலிக் அமிலக் கிளைப் பொருள்கள் […]
முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி தெரிந்திருத்தல் அவசியம்.முதலுதவியின் குறிக்கோள் உயிரைப் பாதுகாத்தல்: முதலுதவி உட்பட எந்தவொரு மருத்துவ சிகிச்சையினதும் குறிக்கோள். நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்: ஆபத்தான சூழலில் இருந்து பாதிக்கப்பட்டவரை அகற்றுதல், நுட்பங்களைப் பயன்படுத்தி ஆபத்து அதிகரித்தலைத் தடுத்தல், எ.கா: குருதிப்பெருக்கை அழுத்தம் மூலம் கட்டுப்படுத்தல் குணமடைதலைத் துரிதப்படுத்தல், எ.கா: சிறிய காயத்திற்கு பிளாஸ்டர் இடல். முதலுதவி செய்பவர் கருத்தில் கொள்ளவேண்டியது முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல், எ.கா: தீ விபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்தல் சுற்றுச் சூழலை அவதானித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல். பாதிக்கப்பட்டோர் ஒன்றுக்கு மேற்பட்டோராயின் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது கவனம் செலுத்தல். மருத்துவ உதவி அல்லது பிற உதவி கிடைக்கும்வரை பாதிக்கப்பட்டவரை விட்டு அகலக் கூடாது. பதட்டம், பயம் இல்லாமல் இருத்தல், பாதிக்கப்பட்டவர் உணர்வுடன் இருக்கும் பட்சத்தில் அவருக்கு தேற்றி ஆறுதல் சொல்லல். எத்தகைய உதவி முதலில் தேவையென உடனே தீர்மானித்து உடன் உதவி வழங்குதல்.
பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் பிரபலம் பெற்றதும் அடிக்கடி கூறப்படுவதுமான கவிதையாக இது விளங்கியது. இதன் திடீர்ப் பிரசித்தி காரணமாக, கவிதையின் சிலவரிகள் போருக்கு பணம், படைபலம் திரட்ட உதவியது. இக்கவிதையில் போரில் உயிரிழந்த வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவே நினைவுறுத்தும் நாளின் சின்னமாக இன்று விளங்குகின்றது. இக்கவிதையும் பொப்பிச் சின்னமும் பொதுநலவாய நாட்டு மக்களிடையே, குறிப்பாக கனடாவில், பிரபல்யமானவையாக உள்ளன. கவிதை In Flanders fields the poppies blow Between the crosses, row on row, That mark our place; and in the sky The larks, still bravely singing, fly Scarce heard amid the guns below. We are the Dead. Short days ago We lived, felt dawn, saw sunset glow, Loved and were loved, and now we lie In Flanders fields. Take up our quarrel with the foe: To you from failing hands we throw The torch; be yours to hold it high. If ye break faith with us who die We shall not sleep, though poppies grow In Flanders fields. கவிதையின் தமிழாக்கம் பிளாண்டர் […]
தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாகத் திகழ்கின்றது. இக்காப்பியத்தின் தலைவி கண்ணகியின் காலில் அணிகலனாக விளங்கிய சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் (சிலம்பு + அதிகாரம்) அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்ற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற, ஒப்புயர்வற்ற புதினம். மாக்சிம் கோர்க்கி (Макси́м Го́рький) – ஒரு புகழ் பெற்ற இரசிய நாட்டு எழுத்தாளர் (28 மார்ச் ( 16)]1868 – 18 யூன் 1936). மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல, உண்மை. >>>>>>>>>>>>>தரவிறக்கம்<<<<<<<<<<<<<
நன்றி: த.உழவன் (தமிழ் விக்சனரி)
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.
பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த நாராயண மகாராஜா. பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர். பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த நாராயண மகாராஜா
பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.
புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.
வாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை வனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை ஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம் தேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை யும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை அனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு ஏன் தெரிவதில்லை
சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் – பாலை மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர். பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள். மேலதிகமாகப் படிக்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311333.htm