ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்

Posted by

ஜூம்லா வார்ப்புருக்கள் (joomla templates) பற்றி இங்கே விளக்கபாடுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு அதன் வெளிப்பார்வை மிக முக்கியம். நாம் விதம் விதமாய் சட்டை உடுத்துவது போலவே இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி உள்ள சட்டையைப் பலர் பயன்படுத்துவது குறைவு அல்லவா? அதே போல இங்கும் ஒரு இணையத்துக்கு என்று தனித்துவமான வார்ப்புரு ஒன்று தேவையானது.

 

இணைய உலகில் இலவசமாகவும் காசுக்கும் ஏராளமான ஜூம்லாச் சட்டைகள் வாங்கலாம். அவை ஒவ்வொன்றும் உங்கள் தேவையைப் பொறுத்தது என்பதைக் கவனித்தல் வேண்டும். உங்கள் இணையதளத்தின் நோக்கம் இசையாக இருக்கலாம், வியாபாரமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் அல்லது தனிநபரைப் பற்றியதாக இருக்கலாம்.இவை ஒவ்வொன்றுக்கும் வகைப்படுத்தப்பட்ட ஜூம்லா வார்ப்புருக்கள் கிடைக்கின்றன. இவை எங்கே கிடைக்கும்  என்பதை கூகிள் உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூம்லா வார்ப்புரு இயல்பாகவே ஜூம்லா நிறுவலில் நிறுவப்பட்டிருக்கும். எனினும் அது நன்றாக இராது. நிறுவலின் போது மாதிரித்தரவை நிறுவி இருந்தால் தற்போது உங்களிடம் பல தேவையற்ற கட்டுரைகளும் மெனுக்களும் (பட்டியலும்) காணப்படும். மாதிரித்தரவு நிறுவல் அற்ற எதுவித உள்ளடக்கம் அற்ற ஜூம்லா இணையதளத்தின் புதிய தோற்றம் கிட்டதட்ட இவ்வாறு அமையும்:

இப்பொழுது நிர்வாக மையத்தில் extension என்பதன் கீழ் உள்ள template manager ஐச் சொடுக்குங்கள். (இதை இருவிதமாக அணுகலாம்: மெனுவில் அல்லது கட்டுப்பாட்டு மையத்தில்/ control panel –இல் ) இது நேரடியாக ‘style’ எனும் வார்ப்புருக்களை மாற்றி அமைக்கும் பக்கத்தைத் திறக்கும். அங்கே தற்போது பயன்படுத்தப்படும் வார்ப்புருக்களுக்கு நட்சத்திரக் குறி இடப்பட்டிருக்கும். இங்கே இரு வார்ப்புருக்களுக்கு நட்சத்திரக் குறி இருக்கும் ஒன்று உங்களது பிரதான தளம், மற்றது நீங்கள் தற்போது செயற்படும் நிர்வாகத் தளம்.

அங்கே உள்ள வேறேதாவது வார்ப்புருத் தேவையாயின் அவை எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை ‘style’ இன் அருகாமையில் உள்ள ‘templates’ க்குப் போவதன் மூலம் பார்க்கலாம்.

புதிதாக வார்ப்புரு ஒன்றை நிறுவுவதற்கு முதலில் அதனைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் வார்ப்புருக்கள்

தொழிற்பாடுகள் குறைந்தவை, எனினும் ஒரு சாதாரண இணையத் தளம் உருவாக்க இவற்றைப் பயன்படுத்தலாம். http://www.siteground.com/joomla-templates.htmhttp://www.siteground.com/joomla-templates.htm எனும் இணையத்தளம் பல இலவச வார்ப்புருக்களை வழங்குகின்றது, ஆனால் இன்னுமொரு இணையத்தளம் தோற்றத்தில் சிறந்த வார்ப்புருவை வழங்குகின்றது. http://ajoomlatemplates.com/http://ajoomlatemplates.com/ எனும் இணையதளம் சென்று “Business Joomla 2.5 & 3.0 Template Free” என்பதன் கீழ் உள்ள “AppStore” வார்ப்புருவைத் தரவிறக்கம் செய்யுங்கள். ajt003_j25 எனும் பெயருடன் உங்கள் கணினியில் அது உள்ளதா என்பதைச் சரி பாருங்கள்.

இப்போது extensionsஇன் கீழ் உள்ள extension managerஐ சொடுக்கினால் “Extension Manager: Install” என்னும் பக்கத்தை அடைவீர்கள். அங்கு “browse” என்பதை அழுத்தி நீங்கள் தரவிறக்கிய கோப்பைத் தெரிவு செய்யுங்கள் (ajt003_j25). பின்னர் upload and install என்பதைச் சொடுக்க நிறுவல் வெற்றிகரமாக முடிவடைந்த செய்தி வரும்.

மீண்டும் template manager சென்று அங்கு நிறுவிய வார்ப்புரு உள்ளதா என்பதைச் சரிபாருங்கள். பின்னர் கீழ்க்காணும் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல புதிதாக நிறுவிய வார்ப்புருவை ‘default’ஆக மாற்றுங்கள். இப்போது உங்கள் மாதிரித் தரவு நிறுவாத இணைய தளம் இவ்வாறு தோற்றமளிக்கும். நீங்கள் ஏற்கனவே மாதிரித் தரவு நிறுவியிருந்தால் மாதிரித் தரவில்லாத வேறொரு புதிய ஜூம்லா ஒன்றை நிறுவல் செய்த பின்னர் இவ்வாறான படிகளை மேற்கொள்ளுங்கள்.

புதிதாகக் காட்சியளிக்கும் இணையத்தில் மெனு இல்லை, உள்ளடக்கம் இல்லை எனவே இப்படிக் காட்சியளிகின்றது. பாடத்தின் இறுதியில் உங்கள் இணையத்தளம் இவ்வாறு அமையும்:

ஜூம்லா இணையத் தரவு மேலாண்மை ஒருங்கியத்தில் உள்ளடக்கங்கள் இடுவதற்கு பல நிரல்கூற்றுப் பகுதிகள் (modules) உள்ளன. அவை அமையும் இடம் வார்ப்புருக்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இவை ஒரு வார்ப்புருவில் கட்டம் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நிரல்கூற்றுப் பகுதிகளில் (படத்தில் சிவப்பு நிறம்)  மெனு, புகுபதிகை, புதிய செய்திகள், அதிகம் படித்தவை, விளம்பரம் எனப்பல தேவையான விடயங்கள் இடலாம். இவற்றைத் தவிர வார்ப்புருவில் பிரதான செய்திக்கென இடம் (படத்தில் பச்சை நிறம்) உள்ளது.

இதை விட வார்ப்புரு மையத்தில் ஒவ்வொரு வார்ப்புருவுக்கும் பிரத்தியேகமான தொழிற்பாடுகள் உளதை அறியலாம். இதை அணுக வார்புருவின் பெயருக்கு மேலே சொடுக்கவேண்டும்.

வார்ப்புரு பற்றி ஆங்காங்கே பிற பகுதிகளில் தெரிவிக்கப்படும்.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/2pu0j

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

five + ten =