ஜூம்லா ஒரு பிரசித்திபெற்ற இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். PHP நிரல் மொழியில் ஆக்கப்பெற்றிருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோருக்கு PHP நிரல் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.  Open Source Matters (OSM) எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் எல்லோருக்கும் இலவசமாகக்  கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும்.

 

இதன் நிரல் மொழியாக பி.எச்.பியும் (PHP) தரவுத்தள மொழியாக மைசீக்குவெலும் (MySQL) தொழிற்படுகின்றது, எனினும் இவற்றைப் பற்றிய அறிவு ஜூம்லா பயன்படுத்துவருக்குப் பெரிதாகத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

எந்தவொரு  வகையான இணையதளத்தையும்  ஜூம்லா ஒருங்கியம் மூலம் இலகுவில் உருவாக்கலாம், சுருங்கக்கூறின், இதனைப் பற்றிக் கற்றுக்கொள்ளல் மிக எளிது. ஜூம்லாவை நிறுவியபின்னர் இலவசமான அல்லது வர்த்தக நீட்சிகள் கொண்டு இன்னமும் இணையதளத்தை மெருகூட்டலாம்.

ஜூம்லா உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தைப் பயன்படுத்தி ஒரு இணைய தளம் உருவாக்குவது பற்றி இப்பதிவில் அறிய இருக்கின்றோம். இதற்கு முன்னர் இணைய முகவரி, இணைய இடம் போன்றவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது பற்றி சுருக்கமாக இங்கே:இணையதளம் உருவாக்கல் அறிந்துகொள்ளலாம்.

இணைய இடம் இல்லாமலேயே உங்கள் சொந்தக் கணினியிலேயே இவற்றை முதலில் செய்து பார்க்கலாம், இதற்கு உங்கள் கணினியில் சேவையகம் (server) ஒன்றை நிறுவவேண்டும், இதற்கான விளக்கம் உங்கள் கணினியில் சேவையகம் -இல் உள்ளது.

முதலில் இந்த இலவச உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தை ஜூம்லா இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும்.

தரவிறக்கம் செய்க: http://www.joomla.org/download.html தற்போதைய ஜூம்லா வெளியீடு 3.*

இங்கு காட்டப்பட்டுள்ளது ஜூம்லா 1.7.* க்குரிய விளக்கம், எனினும் நிறுவுதல் இரண்டுக்கும் ஒன்றே. மேலும் இவ்விரு வெளியீடுகளுக்கும் இடையில் பெரிதளவு வேறுபாடு இல்லை.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/HUXJE

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four + one =