பகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு  அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம்.

தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம்

நிர்வாக மையம் அணுக தங்களது தளத்தின் முகவரியின் அருகே “/administrator” என்று இட்டு செல்லுதல் வேண்டும். இங்கு எமது பிரதான தளத்தின் முகவரி: https://localhost/thamil/http://localhost/thamil/ ; நிர்வாக மையத்தின் முகவரி: http://localhost/thamil/administrator/http://localhost/thamil/administrator/

தற்போது, மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஏதாவது பிழை வந்தால் பின்வருமாறு செய்தல் வேண்டும்.

  1. உங்களது எக்சாம்ப் உள்ள கோப்பகம் செல்லுங்கள்
  2. எடுத்துகாட்டாக “L:\www-websites\Xampp\htdocs” சென்று அங்கு thamil கோப்பகத்தை திறவுங்கள்
  3. configuration.php எனும் கோப்பை notepad அல்லது Notepad++  எனும் செயலி மூலம் திறந்து “public $error_reporting = ‘default’;” எனும் வாசகத்தை public $error_reporting = ‘0’;  என்று மாற்றுங்கள்; சேமியுங்கள்.

உங்கள் பெயர், கடவுச்சொல் இட்டபின்னர் நிர்வாக மையத்தைக் காணுறலாம்.

நாம் எடுத்துக்காட்டாக உருவாக்கப்போகும் தளம் ஒரு தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பைப் பற்றியதாக அமையப் போகின்றது. ஏற்கனவே “என் தமிழ்” என்று பெயர் இட்டுள்ளோம். இப்போது சற்று விரிவாக  இணையத்துக்குரிய பல அம்சங்களை அடக்குவோம்.

Global Configuration : Site

Site Name * = என் தமிழ்

Metadata Settings

இணையதளத்தைப் பற்றிய விவரம் “Site Meta Description” இல் கொடுக்கவேண்டும். அதற்கு அடுத்ததாக உள்ள Site Meta Keywords இல் இணையதளத்தைத் தேடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான திறவுச்சொற்கள் இடல் தேவையானது. கூகிள் போன்ற தேடுபொறிகளில் தேடுவதற்கு இவை உதவி புரிகின்றன.

இங்கு கொடுக்கப்படும் இவ்விரு தரவுகளும் நாம் உருவாக்கப் போகும் தளத்திற்கான பொதுத் தரவுகளாகும்.

கூகிள் போன்ற தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கவேண்டுமாயின் இணையதளத்தில் இருக்கும் ஒவ்வொரு பக்கங்களுக்கும் தனித்தனி Metadata Settings இருப்பது அவசியம்.

firefox  போன்ற உலாவியில் view page source என்பதை சொடுக்குவதன் மூலம் அப்பக்கத்துக்குரிய Metadata Settings நோக்கலாம்.

அடுத்ததாக முக்கியமானது SEO Settings. SEO என்பது Search Engine Optimization  என்பதைக் குறிக்கும். கூகிள், பிங், யாகூ போன்ற தேடற் பொறிகளின் கண்ணில் உங்கள் இணையம் சிக்குவதற்கு இணையத்தின் முகவரியின் பின்னே அமையும் கூட்டுத்தொடர்கள் சரிவர அழகாக இருப்பது அவசியம்.

http://localhost/thamil/index.php?option=com_content&view=article&id=1:thmil&catid=9&Itemid=101http://localhost/thamil/index.php?option=com_content&view=article&id=1:thmil&catid=9&Itemid=101 எனும் முகவரிக்கும் http://localhost/thamil/index.php/9-uncategorised/1-thmil.htmlhttp://localhost/thamil/index.php/9-uncategorised/1-thmil.html எனும் முகவரிக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். முதலாவது தேடற்பொறிக்கு தோழமையாக உள்ள முகவரி அல்ல. இரண்டாவது முகவரியை தேடற்பொறி இலகுவில் எடுத்துக்கொள்ளும். எனவே பின்வருமாறு படத்தில் இரண்டாவதாக உள்ளது போன்று இட்டுக்கொள்வதன மூலம் உங்களது இணையதளத்தை தேடற்பொறியின் தோழமைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம்.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/uXxrF

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 × 1 =