ஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))

Posted by

இதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம்.

இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட  “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று தமிழை இயல்பு மொழியாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

இப்போது நாங்கள் நிறுவிய ஜூம்லாவில் தேவையில்லாத கட்டுரைகள் எல்லாம் உள்ளது அல்லவா?

  • அவை ஒவ்வொன்றையும் உங்கள் கட்டுரைகளால் ஈடு செய்யலாம்.
  • அவை அமைந்திருக்கும் விதத்தைப் பார்த்து அறிந்த பின்னர் அவற்றை நீக்கலாம்.

ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்  பாடத்தை மீண்டுமொரு முறை நினைவில் வைத்துக்கொள்ளல் அவசியம். அங்கு கூறப்பட்ட அதே வார்ப்புருவை இங்கும் பயன்படுத்தப்போகின்றோம்.

//http://ajoomlatemplates.com/http://ajoomlatemplates.com/ எனும் இணையதளம் சென்று “Business Joomla 2.5 & 3.0 Template Free” என்பதன் கீழ் உள்ள “AppStore” வார்ப்புருவைத் தரவிறக்கம் செய்யுங்கள். ajt003_j25 எனும் பெயருடன் உங்கள் கணினியில் அது உள்ளதா என்பதைச் சரி பாருங்கள்.//

இந்த வார்ப்புரு ஜூம்லாவின் 2.5  மற்றும் 3.* பதிப்புகளுக்கு தொழிற்படும். சில வார்ப்புருக்கள் ஜூம்லாவின் ஒரு பதிப்புக்கு மட்டுமே விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வேறு எதாவது வார்ப்புரு விரும்பினால் ஜூம்லா 3.1.5க்கு உகந்ததா என்பதை அவதானித்து தரவிறக்கம் செய்யவேண்டும்.

நீட்சிகள் –> நீட்சி மேலாளர் ((Extension Manager)) சென்று உங்கள் வார்ப்புருவைத் தரவேற்றம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர்  நீட்சிகள் –> வார்ப்புரு மேலாளர்: பாணிகள் சென்று அந்த வார்ப்புருவை உள்ளிருப்பாக மாற்றுங்கள் (நட்சத்திரக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும்). இப்போது உங்கள் இணைய தளம் வேறொரு வடிவத்தில் இருக்கும்.

ஜூம்லாவில் கூறகங்கள் (modules), சொருகிகள் (plugins), வார்ப்புருக்கள் (templates), மொழிகள் (language) என்பன நிறுவப்பட்ட ஜூம்லாவை மேலதிகமாக நீட்சி செய்யும் முறைகளாகும். இவை அனைத்தும் நீட்சிகள் (Extension) எனப்படும்.

நிரல்கூற்றுப் பகுதிகள் அல்லது கூறகங்கள் இணையதளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் இணைக்கக்கூடிய நிரல்கூற்று அமைப்புகளைக் குறிக்கின்றது. அவை அமையும் இடம் வார்ப்புருக்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, பயனர் புகுபதிகை செய்யும் படிவம் இணையதளத்தின் வலது புறமா அல்லது இடது புறமா என்பதை கூறகங்கள் சென்று மாற்றி அமைக்கலாம்.

சொருகிகள் பொதுவாக முழு இணையதளத்துடன் அல்லது கட்டுரையுடன் இணைந்தவை. கட்டுரைகளை எழுதும் படிவம், பொத்தான்கள், கட்டுரைகளுக்குக் கீழே கருத்துப் படிவம், முகநூல் விருப்ப பொத்தான், கட்டுரையில் PDF சேர்த்தல் போன்றவை சொருகிகள் வடிவில் உள்ளன.

 

 

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/U75Xt

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

11 + 11 =