எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது.
எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம்,
- X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்)
- A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம்
- M – மைசீக்குவெல்
- P – பிஎச்பி
- P – பேர்ல்
இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
மைக்கிரோசொப்ட் வின்டோசுக்கான நிறுவல் முறை
- தரவிறக்கம் செய்து கொள்க:http://www.apachefriends.org/en/xampp-windows.html
செல்லவும்.
- நிறுவி முடிந்த பின்னர் Start –> Programs –> Xampp என்பதைச்சொடுக்கி அல்லது நேரடியாக நிறுவிய பக்கத்துக்குச் சென்று xampp-control என்பதைச் சொடுக்கி XAMPP Control Panel-ஐ இயக்கலாம்.
- Apache, MYSQL என்பவற்றை துவங்க வேண்டும்.
- இப்போது உங்கள் இணைய உலாவியில் “localhost” அல்லது “127.0.0.1” என்று எழுதி இடுவதன் மூலம் கட்டுப்பாட்டுப் பக்கத்தை அணுகலாம்.
- இணையக் கோப்புகள் எல்லாம் “htdocs” (C:\www\xampp\htdocs) கோப்பகத்துக்குள்ளே காணப்படும்.
- htdocs உள்ளே வேறொரு கோப்பகம் உருவாக்கி (எ.கா: mywebsite ) அதனுள்ளே ஒரு index.php கோப்பை உருவாக்குங்கள்
- index.php உருவாக்கல்: notepad திறக்கவும், அங்கு ஏதாவது எழுதவும், பின்னர் save as typeஇல் எல்லாம் எனத் தெரிவு செய்து கோப்புப் பெயருக்கு index.php என எழுதவும். நீங்கள் தமிழில் எழுதினால் கீழே உள்ள ANSI என்பதை unicodeக்கு மாற்றத் தவறவேண்டாம்.
- இப்போது C:\www\xampp\htdocs\mywebsite உள்ளே index.php இருக்க வேண்டும்.
- உலாவியில் localhost/mywebsite என்று இடுங்கள் நீங்கள் எழுதியதைக் காணலாம்.