தமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின்  காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை.

இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் என சிலர் அழைப்பர்.கி.பி.400 ஆண்டளவில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார்.  ஆனால் நாம் இருக்கும் காலப்பகுதியில் மீண்டும்  நான்காம் சங்கம் கி.பி 1901இல் பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது.பாண்டிய     மன்னர்கள்    தொடக்கத்தில்   கடல்கொண்ட தென்மதுரையைத்  தலைநகராகக்  கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர்  பெருமக்களைக்   கொண்டு   தமிழ்   இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும்  நடைபெற்றன.  அதுவே  முதற் சங்கம் எனப்பட்டது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.

தென்மதுரை கடல்  பெருக்கெடுத்து  வந்ததால் அழிந்தது. அதன் பிறகு  கபாடபுரம்  என்ற   ஊரைத்   தலைநகராகக்   கொண்டு பாண்டியர்கள்  ஆண்டார்கள்.  அங்கும்  ஒரு   தமிழ்ச்   சங்கம் தொடங்கப்பட்டுப்  புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது  இடைச் சங்கம்  என்று அழைக்கப்  பட்டது. தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது.

கபாடபுரமும் கடலால்  அழிவுற்ற   பிறகு  இன்றைய மதுரைக்குப் பாண்டியர்  தலைநகரை  மாற்றினர்.  இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்  பெற்று  கி.பி.200   வரை    நடைபெற்றது.   இது கடைச்சங்கம் என்று அழைக்கப் பட்டது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது.

மூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். அக, புறச் சான்றுகளின் அடிப்படையில் சிலர், நடு நிலையாகச் சில கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு, பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கருத்து, மூன்றாம் சங்கம் முடிவுற்றதாகக் கருதப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பதாகும்.

இவற்றின் காலப்பகுதிகளைக் கணக்கில் கொண்டால்,

  • {ln:கடைச்சங்கம்} 1850 ஆண்டுகள் நடைபெற்றது; இது கி.பி.200   வரை    நடைபெற்றது. எனவே இது தொடங்கிய ஆண்டு கி.மு. 1650 ஆக இருக்கலாம்.
  • {ln:இடைச்சங்கம்} 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. எனவே இது தொடங்கிய ஆண்டு கி.மு.5350 ஆக இருக்கவேண்டும்.
  • {ln:முதற்சங்கம்} 4440 ஆண்டுகள் நடைபெற்றதாயின் அது தொடங்கியது கி.மு 9790 ஆக இருக்கலாம்.

இவை உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. முதற்சங்கம் கி.மு. 2387இல் முதற் கடற்கோளால்முடிவடைந்தது என்றும் குறிப்புகள் உள்ளன. இதன்படி நோக்கின் முதற்சங்கம் கி.மு. 6827இல் தொடங்கியது எனக் கணிக்கலாம். எனவே இதிலிருந்து கடைச்சங்கம் (1850 ஆண்டுகள்), இடைச்சங்கம் (3700 ஆண்டுகள்) ஆகியவற்றின் கால அளவுகளில் வழுக்கள் உள்ளன என அறியலாம்.

முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.

இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.

முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.

எனினும் செவி வழிவந்த வரலாற்று நம்பிக்கைகளின்படி, இவ்வாறு  மூன்று   சங்கங்கள்  நடத்தப்  பெற்று,  புலவர்களும், அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்த இம் முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று  இன்று வரை அழைக்கப் படுகிறது.

உசாத்துணைகள்

  1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – பேராசிரியர் கே.கே.பிள்ளை
  2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  3. விக்கிபீடியாவிக்கிபீடியா
  4. நான்காம் சங்கம்: தமிழ் எழுத்து
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/WPevP

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

sixteen + fifteen =