வாழை மருத்துவம்

Posted by

வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா

அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் பெயர்களான மியுசா சாப்பியென்டம், மியுசா பராடிசியகா ( Musa sapientum and Musa paradisiaca ) என்பன தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை.வாழையின் எல்லாப் பகுதிகளுமே ( இலை, பூ, காய், பழம், தண்டு) பல வழிகளில் பயன்படுகிறது. வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், தனிமங்கள், சேர்மங்கள் மருத்துவ உலகில் முக்கியமானவையாகும். மலிவானதும் மிகையாக சத்துக்கள் செறிந்ததுமான வாழைப்பழத்தை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுவது சிறந்தது.வாழை வகைகளும் அவற்றின் பழங்களின் பயன்களும்

 • செவ்வாழை
 • மலைவாழை: சமிபாட்டுகுறைபாடு (அஜீரணம்), மலச்சிக்கல், சோகையை நீக்கும்
 •  மொந்தன்: காமாலை
 •  பூவன் : மலச்சிக்கல், மூலநோய்
 •  பேயன்: வயிற்றுப் புண்
 •  கப்பல் வாழை (ரசுதாளி, ரஸ்தாலி)
 • கற்பூரவல்லி
 • பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும்
 • ஏலரிசி வாழை:
 • கதலி வாழை
 • நாடன்
 • நேந்திரம்

 

வாழைத்தண்டு

உடல் எடை குறைய: ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், குருதியில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.

கொசுக்கடி: கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும்.

முகப்பரு: முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும்.

சிறுநீரக நோய்கள்: சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீரடைப்பு, சிறுநீரகத்தில் கல் போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளுக்கும்  வாழைத்தண்டு சிறந்தது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு, வயிற்றுப்புண், தோல் நோய்கள், வயிற்றுப் பூச்சி, பல்லில் பூச்சி, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கும் வாழைத்தண்டு உகந்ததல்ல.

 

வாழை இலை

வாழை இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தன. தோலில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் தோலுக்கு மெருகேற்றி அழகைக் கூட்டுகின்றது. இது இலையாக அல்லது அதிலி இருந்து எடுக்கும் சாறாகப் பயன்படுகின்றது.

 • தோலில் ஏற்படும் சிறிய புண்கள் மற்றும்  வேறு  தோல் நோய்களான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு, தீப்புண் , வேனிற் கட்டி (sunburn) போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் குணமடையும்.
 • குளிர்ந்த நீரில் நனைத்த வாழையிலையை தீக்காயங்கள், வேனிற் கட்டி ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியை ஏற்படுத்தும். தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய்க் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
 • சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும். சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் போன்ற  பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.
 • நச்சுப் பூச்சிக்கடி, தேனீ, குளவிக்கடி,  சிலந்திக்கடி, தோல் அரிப்பு போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.
 • மனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான ஆலன்டொயின் எனும் பதார்த்தம் ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது தாவரங்களிலும் காணப்படுகின்றது. இதை அழகு சாதனைப் பொருட்களில் செயற்கையாகச் சேர்க்கின்றனர். வாழையிலையிலும் இது காணப்படுவதால் நுண்ணுயிரிகளில் இருந்து தோலைப் பாதுகாத்தலிலும் புதிய தோல் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது.
 • குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாகச் சொன்னால், தோலைப் பாதுகாக்கவும் அழகுடன் மிருதுவாக மெருகுடன் விளங்கச் செய்யவும் வாழை இலை உதவுகின்றது.

வாழை வேர்: குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.

வாழைப்பழம்

முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. மூலத்தால் கசியும் குருதிப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.

ஒரு வாழைப்பழத்தில் (100 – 150 கிராம்) 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது.

செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

சமிபாட்டுக் குறை (அஜீரணம்), மூலநோய்: தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உணவு நன்கு சமிபாடு அடையும் மூலமும் குணமாகும். அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

இருமல்: கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

சிறுநீரக நோய்கள்: நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.

குருதிச்சோகை: இரும்புச் சத்து இருப்பதால் ஈமொகுளோபினின் உற்பத்தியைக் கூட்டி குருதிச்சோகை வராமல் தடுக்கவல்லது.

உயர் குருதி அழுத்தம்: பொட்டாசியம் அதிகளவில் உள்ள, உப்புக் குறைவாக உள்ள பழமாதலால், உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

மன அழுத்தம், மனச்சோர்வு: இதில் காணப்படும் ட்ரிப்டோபான் எனும் அமினோவமிலம் உடலில் செரடோனின் ஆக மாற்றப்படுகின்றது. இதைவிட இம்மாற்றத்துக்கு இதில் காணப்படும் உயிர்ச்சத்து பி6 முக்கிய பங்கை வகிக்கின்றது. செரடோனின் மனத்தை உற்சாகமாக வைத்திருக்க உதவுகின்றது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்கவும் செரோடினின் பெரிதும் உதவுகிறது.நன்கு கனிந்த வாழைப்பழம் : புள்ளிகள் இருப்பதைக் காண்க.

புற்றுநோய்: கழலை நசிவுக்காரணி (Tumor Necrosis Factor ; TNF) என்பது உடலில் தேவையற்ற உயிரணுக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு காரணியாகும், இவை புற்றுநோய்க்கலங்களை வளரவிடாமல் செய்கின்றது. நன்கு கனிந்த வாழைப்பழத்தில் இக்காரணி உண்டு என அறியப்பட்டுள்ளது. இதைவிட வாழைப்பழத்தில் எதிர் ஒட்சியேற்றுத் தன்மை உள்ளது, இதனாலும் புற்றுநோய்கள், இதயநோய்கள் கட்டுப்படுத்தப்படலாம்.

நெஞ்செரிவு: அமிலத்தன்மையால் ஏற்படும் நெஞ்செரிவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு அமிலவெதிரியாக தொழிற்படுகின்றது.
 

வாழை (தோல் நீங்கியது)
100 
கிராமில் உள்ள ஊட்டச் சத்து ஆற்றல் 90 kcal   370 kJ

மாப்பொருள்     22.84 g
– சர்க்கரை  12.23 g
– நார்ப்பொருள்  2.6 g  
கொழுப்பு 0.33 g
புரதம் 1.09 g
உயிர்ச்சத்து ஏ  3 μg 0%
தயமின்  0.031 mg   2%
ரிபோஃபிளாவின்  0.073 mg   5%
நியாசின்  0.665 mg   4%
பான்டோதெனிக் அமிலம்  0.334 mg  7%
உயிர்ச்சத்து பி6  0.367 mg 28%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  20 μg  5%
உயிர்ச்சத்து சி  8.7 mg 15%
கால்சியம்  5 mg 1%
இரும்பு  0.26 mg 2%
மக்னீசியம்  27 mg 7%
பொசுபரசு  22 mg 3%
பொட்டாசியம்  358 mg   8%
துத்தநாகம்  0.15 mg 2%

உசாத்துணைகள்

 1. http://tamil.boldsky.com/beauty/skin-care/2012/plantain-leaf-natural-boon-skin-care-001629.htmlhttp://tamil.boldsky.com/beauty/skin-care/2012/plantain-leaf-natural-boon-skin-care-001629.html அழகான சருமத்தை தரும் வாழை இலை!!!
 2. http://healthyinsid3.blogspot.com/2011/12/benefits-of-banana-leaves-for-skin.htmlhttp://healthyinsid3.blogspot.com/2011/12/benefits-of-banana-leaves-for-skin.htmlBenefits of Banana Leaves For Skin
 3. http://www.banana.com/medicinal.htmlhttp://www.banana.com/medicinal.html
 4. http://eegarai1.wordpress.com/category/ வாழை மருத்துவம்
 5. http://en.wikipedia.org/wiki/Bananahttp://en.wikipedia.org/wiki/Banana
 6. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88
 7. http://www.siruppiddy.net/?p=9230
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/n8PLY

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

nine − 9 =