பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை.
இந்த நிலையை 1950இல் நோர்மன் பரட் (1903–1979) என்பவர் விவரித்தார்.[4]