அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை.
