தமிழில் உருசிய மொழி: அறிமுகம் (பகுதி 1)

Posted by

 

ரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.
ஐரோப்பக்கண்டத்தில் சொந்த மொழி பேசுவோரின் மொழிகளுள் முதலாம் இடத்தை வகிப்பதும் இதுவே.

உருசிய மொழியில் மெல்லின, வல்லின ஒலியும் உண்டு. ஒரு சொல்லில் உயிரெழுத்து நெடிலாக உச்சரிக்கப்படும் போது அந்த நெடில் உயிரெழுத்து “ ‘ ” குறி மூலம் சுட்டிக்காட்டப்படும்.

இனி உருசிய மொழியின் எழுத்துக்களைப் பார்ப்போம்…

 

உருசிய அரிச்சுவடி

உருசிய அரிச்சுவடி (உருசியத்தில்: AZBUKA ) எழுத்துக்கள் சிரிளிக் ( si-\’ri-lik) என அழைக்கப்படுகிறது. Azbuka என்பது சிரிளிக் அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து உருவானது ஆகும். ஆங்கிலத்தைப் போன்று இரசிய மொழிக்கும் பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள் ; தொடர்ந்து எழுதுதல் ; அச்சு வடிவ எழுத்து ஆகியன உண்டு.

இரசிய எழுத்து உச்சரிப்பானது தமிழில் எழுதப்படக்கூடியதல்ல, ஆங்கில மூலம் பழகுதல் கூட சிறந்ததல்ல.
மேற்கொண்டு நீங்கள் படிக்கும் போது இதன் ஒலி வடிவத்தை கேட்பீர்கள், அதன் மூலம் மட்டுமே பழகுதல் வேண்டும்.
எனினும் பின்வருவனவற்றை ஒருதடவை பாருங்கள் ஆனால் அதனைப் பழக்கப்படுத்த முயற்சிக்கவேண்டாம்.
இரசிய மொழியில் குறில் நெடில் சுட்டப்படுவது அடையாளக் குறியீட்டின் மூலமே (இரசிய மொழியில் உதரேனிய)

எ.கா:
Аннá : அன்னா(ஆ)
Áнна : ஆன்ன(ா)

ஆனால் உதரேனிய எனப்படும் { \’ } குறியானது எழுத்து வழக்கிலோ அச்சுவழக்கிலோ நடைமுறையில் காணப்படுவது அரிது, மொழி பயிலுபவர் தொடக்கத்தில் குறில் நெடில்களை வேறுபடுத்த இது பெரிதும் உதவுகிறது.

 

А – а : அ / ஆ

Б – б : ப (உச்சரிப்பு: இரு உதடுகளும் நன்கு அழுத்தி ஆங்கில B போன்று…)

В – в : வ (வருடம்)

Г – г : g (உச்சரிப்பு: ஆங்கில G போன்று…)

Д -д : த (Dha)

Е е : யே

Ё ё : யோ

Ж ж : தமிழில் இதற்கு நிகரான எழுத்துகள் இல்லை. (உச்சரிப்பு: ZzH…)

З з : தமிழில் இதற்கு நிகரான எழுத்துகள் இல்லை. (உச்சரிப்பு: z…)

И и : இ/ ஈ (கயிறு)

Й й : ய் (பாய்)

К к :

Л л :

М м :

Н н :

О о : ஓ / ஒ

П п :

Р р :

С с :

Т т : த (தகரம்)

У у : உ (உரல்)

Ф ф : F

Х х : Ha

Ц ц : ட்ஸ

Ч ч : ச் (பச்சை)

Ш ш :

Щ щ : ஷ்ஷ

Ъ ъ : வன் குறி

Ы ы : ய்

Ь ь : மென் குறி

Э э :

Ю ю : இயு

Я я : இயா


சில இரசிய சொற்கள் (இலகுவாக உச்சரிக்கக் கூடியது)

Книги { க்னிகி(g) } : புத்தகம்

Папа {பாப்பா} : அப்பா

Мама {மாமா} : அம்மா

Бог {போ(ஹ் } : கடவுள்
* இங்கு Бог என்பதன் நேரடி உச்சரிப்பு போ(க்(g) {Bog} என்பதாகும். ஆனால் உச்சரிக்கப்படுவது போஹ் என்றே…

Россия {ரஸ்சியா} : இரசியா

Один {அஜின்) : ஒன்று
* இங்கு முதல் எழுத்து O ஆனால் அதன் உச்சரிப்பான \”ஓ\” இங்கு இல்லை, மாறாக \”அ\” என்பதே உள்ளது,
மேலும்,
எழுத்து \”д\” இன் உச்சரிப்பு \”த\” என்பது வன்மையாக நாக்கை அழுத்தி உச்சரிக்கப்படும். (ஆங்கிலத்தில் Dha )
д உடன் и சேர்ந்தால் \”தி\” என்று வரவேண்டிய உச்சரிப்பு இரசிய மொழியில் \”ஜி\” என்பது போன்று உச்சரிக்கப்படும்.

பின்வரும் காணொளியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதனை அவதானியுங்கள்.

இப்போது நீங்கள் கேட்டவற்றில் உங்களுக்குப் புரியாதிருக்கக்கூடிய எழுத்துக்களைப் பற்றிப் பார்ப்போம்.

Й

இதனை “இ – க்ராத்கய” என்பர்; “И” எனும் எழுத்து “ஈ” என உச்சரிக்கப்பட “Й” என்பது “இ” “க்ராத்கய” என உச்சரிக்கப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? “க்ராத்கய” என்றால் குறுகியது என்று பொருள் படும்.

நம் தமிழில் குறில் நெடில் உள்ளது போன்றுதான் இவையும்…

“ஈ” என்ற உச்சரிப்பிற்கு ஏறத்தாழ சமனானது “И” , எனினும் தமிழ் “ஈ”யை விடக் குறுகியது. “இ” என்ற உச்சரிப்பிற்கு ஏறத்தாழ சமனானது “Й” .

உருசிய மொழியில் இவை சேர்ந்து வருவதை அவதானிக்கலாம்.

எ.கா: русскийரு ஸ் கி

 

Ъ

இதனை “திவியோர்தி zஸ்னாக்” என்று கூறுவதைக் கவனித்தீர்களா? “திவியோர்தி” என்றால் வன்மையான என்று பொருள் தரும், “zஸ்னாக்” என்றால் குறியீடு.

ஒரு மெய்யெழுத்துக்கும் உயிர் எழுத்துக்கும் இடையிலேயே இந்தக்குறி எழுதப்படும். பெயரில் “வன்மை” என்று இருந்தாலும் இதன் தொழில் வேறு.

இதன் பயன்பாடு என்ன? ஒரு மெய்யெழுத்தையும் உயிர் எழுத்தையும் பிரித்துப் படிக்க உதவுகிறது. என்ன குழப்பமாக உள்ளதா? பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்:

– மயில் –

Ъயில் = மய்யில் (மையில்)

மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் மயில் என்பதில் “ம” விற்கும் “யி”ற்கும் இடையில் திவியோர்தி zஸ்னாக் இடப்பட்டால் அது மய்யில் (மையில்) என உச்சரிக்கப்படும்.

உருசிய மொழியில் я”, “ё”, “е”, “ю” ஆகிய எழுத்துக்களுக்கு முன்னரே இது இடப்படுகிறது, இதன் மூலம் உயிர் எழுத்துக்கள் அழுத்தி உச்சரிக்கப்படுகின்றன.

எ.கா:

съёмка  சிய்யோம்கா , இங்கு திவியோர்தி zஸ்னாக் இல்லாவிடின் (сёмка) சியோம்கா என உச்சரிக்கப்படும். எனினும் இதனது உச்சரிப்பு தமிழில் இங்கு எழுதி உள்ளது போல உச்சரிக்கப்படாது.

 

Ь

இதுமியாக்கி zஸ்னாக்” எனப்படும். “மியாக்கி” என்றால் மென்மையான என்று அர்த்தம், எனவே இது மென் குறி எனலாம். இதன் பயன்பாடு இதற்கு முன்னாள் வரும் எழுத்தை மென்மையாக்குவது ஆகும்.

தமிழில் ன், ண் ; ல், ள் என இருப்பது போல் இங்கு வேறுபாட்டைக் காட்ட இந்தக்குறி பயன்படுத்தப்படுகிறது.

இந்தக்குறியுடன் சேர்ந்து வரக்கூடிய மெய்யெழுத்துக்கள் -ль,  -нь,  -ть,  -дь ஆகியன ஆகும். அதே நேரம் பொதுவாக இந்த மெய்யெழுத்துக்களுக்கு முன்னே உள்ள உயிர் எழுத்தும் அழுத்தமாக உச்சரிக்கப்படும். இதன் பயன்பாடு புதிதாகப் பழகுவோருக்கு உண்மையிலேயே சிக்கல் நிறைந்த ஒன்றாகும்.

எ.கா :

день – ஜியேன் (நாள்)

ден – ஜெண்

 

மீண்டும் எழுத்துக்களை உச்சரிப்போமா? இங்கு உள்ள காணொளியில் எழுத்துக்கள் காட்டப்பட உச்சரித்துப் பழகுங்கள்

உச்சரிப்புப் பயிற்சி

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/Ampwl

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four + sixteen =