Yearly Archives: 2011

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்  (aortic stenosis)
Posted by

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis)

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் […]

கிளீசு விண்மீன்கள் (Gliese Stars)
Posted by

கிளீசு விண்மீன்கள் (Gliese Stars)

புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று செய்திகள் படிக்கின்றோம், அவை எங்கே அமைந்துள்ளன? அங்கு உயிரினம் உண்டா? எங்கள் பூமி போன்றே அவற்றின் அமைப்பு உள்ளதா என்பது பற்றிப் பார்க்கத் தொடங்கினால் மிகவும் சுவையான விடயமாக இருக்கும். நாம் வாழும் பூமி, பூமிக்கு சக்தி வழங்கும் கதிரவன், சகோதரக் குடும்பங்கள் இவை யாவும் சேர்த்து சூரியக் குடும்பம் என்கின்றோம். நமது சூரியன் ஒரு வகை நட்சத்திரம் எனக் கருதுகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ கிரகங்களும் விண் கற்களும் […]

முட்தோலிகள்
Posted by

முட்தோலிகள்

முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா (Phylum Echinodermata) கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குகளின் ஒரு தொகுதியாகும். அலையிடை மண்டலம் தொடக்கம் ஆழ்கடல் மண்டலம் வரையிலானபெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. இத்தொகுதியில் ஏறத்தாழ 7000 இனங்கள் உயிர்வாழ்கின்றன. எண்ணிக்கையில் இரண்டாவதாக, முதுகுநாணிகளை அடுத்து இருவாயுளிகள் (டியூட்டெரோஸ்டோமியா; Deuterostomia) பெருந்தொகுதிக்குள் அடங்கும் உயிரினத் தொகுதி ஆகும். இவை நன்னீரிலோ நிலப்பகுதிகளிலோ வசிப்பது இல்லை. கிரேக்க ἐχινοδέρματα (ἐχινός– முட்கள் , δέρμα– தோல்; முள்ளை உடைய தோல்) எனும் சொல்லில் […]

பிரஸ்பையோபியா அல்லது மூப்புப்பார்வை
Posted by

பிரஸ்பையோபியா அல்லது மூப்புப்பார்வை

பிரஸ்பையோப்பியா (presbyopia) அல்லது மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது. வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே […]

டைட்டானிக் பாக்டீரியா
Posted by

டைட்டானிக் பாக்டீரியா

துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹலோமொனஸ் டைட்டானிசே (Halomonas titanicae) என்ற உயிரியல் பெயர் கொண்ட புதுவித பாக்டீரியா இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்துகிறது. கூரான பனிக்கட்டிகள் தொங்குவது போன்று,நுண் துளைகளைக் கொண்ட,எளிதில் உருக்குலைந்துவிடும் அமைப்பானது இரும்பில் உருவாகுகின்றது; கூர்த்துருத்துகள்கள் (rusticles) என்றழைக்கப்படும் இந்த அமைப்பிலேயே 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப் பாக்டீரிய இனங்கள் அங்குள்ள இரும்பை உணவாகக் கொண்டு வசிக்கின்றன.   இதன் காரணமாக இறுதியில் டைட்டானிக் கப்பலின் மீதிகள் முற்றிலும் மறைந்துவிடும். […]

கண்டிடா உணவுக்குழாய் அழற்சி
Posted by

கண்டிடா உணவுக்குழாய் அழற்சி

கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) என்பது கண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans) என்னும் பூஞ்சையால் (ஒரு வகை மதுவம்) ஏற்படும் தருணத் தொற்று ஆகும். எய்ட்ஸ் உட்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரில் இந்நோய் ஏற்படுகின்றது, பூஞ்சை முக்கியகூறாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பியை[1] நீண்டகாலமாகப் பயன்படுத்துவோருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நோய்த் தோற்றம் கண்டிடா உணவுக்குழாய் அழற்சி உடையவருக்கு மார்பெலும்பின் பிற்பகுதியில் விழுங்கும்போது வலி (விழுங்கல்வலி) ஏற்படுகின்றது.[1] நீண்டகால கண்டிடா அழற்சியால் எடை குறைவடையும். இத்தகைய […]

மஞ்சள் (Curcuma longa)
Posted by

மஞ்சள் (Curcuma longa)

மஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது. மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் […]

அன்னாசி
Posted by

அன்னாசி

அன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.  ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து […]

முதிர் வளையம்
Posted by

முதிர் வளையம்

முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் (arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல்நிறமான ஒளிபுகாத வளையமொன்று கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் காணப்படுவது ஆகும். இது பிறப்பின்போது காணப்பட்டுப் பின்னர் மறைந்துவிடும், எனினும் 60 – 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாகக் காணப்படலாம், குருதியில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளோரில் அல்லது நீரிழிவு நோயுள்ளவர்களில் ஆரம்பகாலங்களிலேயே (40 வயதளவில்) தோன்றலாம், எனினும் இது எவ்வித நோய்கள் இல்லாமலும் தோன்றலாம், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கும் குடும்பத்தில் […]

உயிர்காப்பு உடன்பிறப்பு
Posted by

உயிர்காப்பு உடன்பிறப்பு

உயிர்காப்பு உடன்பிறப்பு (savior sibling அல்லது saviour sibling) என்பது சில பாரதூரமான நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை ஆகும். (1) ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் சம்பந்தமான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. அத்தகைய உயிரணுக்களோ அல்லது உறுப்புக்களோ மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறப்படல் அவசியமாகின்றது, இந்தத் தேவைக்கு உடன் பிறந்த நோயற்ற சகோதரர் ஒருவரே உதவ முடியும். (2) உயிர்காப்பு […]

All Posts from This Month