Daily Archives: ஆகஸ்ட் 20, 2012

கிளீசு581 விண்மீன் தொகுதி
Posted by

கிளீசு581 விண்மீன் தொகுதி

ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற […]

விண்மீன் வகைப்பாடு
Posted by

விண்மீன் வகைப்பாடு

விண்மீன்கள் அதனது நிறமாலையைக்  (ஒரு விண்மீனின் புறப்பரப்பின் வெப்பத் தன்மையைப் பொறுத்து, அவை பல்வேறுபட்ட நிறங்களாகக் காட்சியளிப்பது. )  கொண்டு வகைப்பாடு செய்யப்படுகின்றது. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமுள்ளவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. மேக்நாத் சாகா  (Megh Nad Saha) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு […]

விண்மீன்கள்
Posted by

விண்மீன்கள்

விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது அண்டவெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். எமது பூமிக்கு அண்மையில் உள்ள விண்மீன் சூரியனாகும், இதுவே பூமிக்கு சக்தி வழங்கியாகத் திகழ்கின்றது. விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள்ளன. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் […]

பரட்டின் உணவுக்குழாய்
Posted by

பரட்டின் உணவுக்குழாய்

பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை. இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு […]

உணவுக்குழாய் அழற்சி
Posted by

உணவுக்குழாய் அழற்சி

உணவுக்குழாய் அழற்சிஅல்லதுஉணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இதுகடியதாகவோஅல்லதுநெடுங்காலத்துநோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ்உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்துஉணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோஇருக்கலாம்.   காரணங்கள் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன: கண்டிடா உணவுக்குழாய் அழற்சி  (Esophageal candidiasis) தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி கேர்ப்பிசு (herpes esophagitis) பெருங்குழியத் […]

All Posts from This Month