Yearly Archives: 2013

அணுக்கொள்கை
Posted by

அணுக்கொள்கை

வேதியியல் மற்றும் இயற்பியலில், அணுக் கொள்கை என்பது ஒரு பொருளின் இயல்பைப் பற்றிய கோட்பாடு, இதில் ஒரு பொருளானது அணு எனும் சிறிய அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது; அதனை மேலும் பிரிக்கமுடியுமா இல்லையா என்பது பற்றிய பலரது கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது.  ரொபர்ட் போய்ல் (Robert Boyle)   ரொபர்ட் போய்ல் (25 சனவரி  1627 – 31 திசம்பர்  1691) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இரசவாதியாக இருந்தார், போயிலின் விதி எனும் வேதியியல் விதி இவரால் ஆக்கப்பட்டது. இவரே […]

ஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))
Posted by
Posted in

ஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))

இதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம். இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட  “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று […]

சுவரெலும்பு
Posted by

சுவரெலும்பு

மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal […]

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு
Posted by

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது: * நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis); * கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி. ==செதிலுருப்பகுதி (squama)== செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: . வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் […]

மனித எலும்புகள் பட்டியல்
Posted by

மனித எலும்புகள் பட்டியல்

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 – 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான […]

முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)
Posted by

முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)

(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது) சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன.  முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் […]

கலம் (உயிரணு) – அறிமுகம் : உயிரணுக் கொள்கை
Posted by

கலம் (உயிரணு) – அறிமுகம் : உயிரணுக் கொள்கை

உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு (கலம்) ஆகும். உயிரினங்கள் தனியொரு உயிரணுவாலோ அல்லது பல உயிரணுக்களின் சேர்க்கையாலோ ஆக்கப்பட்டவை. தனியொரு உயிரணுவினால் உருவான உயிரினங்களாக அமீபா, பக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள் பல்லுயிரணுக்களுக்கு உதாரணமாகும். விலங்குகளின் உயிரணு தாவரங்களினதில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. விலங்குகளில் உயிரணுக்கள் பல சேர்ந்து இழையங்களாகவும் (tissue) பல இழையங்கள் சேர்ந்து உறுப்புக்கள் (organs) தோன்றியும் உறுப்புக்களின் தொகுப்பு தொகுதியாகவும் (system) இறுதியில் பல […]

ஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்
Posted by
Posted in

ஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்

ஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது. எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. […]

ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்
Posted by
Posted in

ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்

ஜூம்லா வார்ப்புருக்கள் (joomla templates) பற்றி இங்கே விளக்கபாடுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு அதன் வெளிப்பார்வை மிக முக்கியம். நாம் விதம் விதமாய் சட்டை உடுத்துவது போலவே இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி உள்ள சட்டையைப் பலர் பயன்படுத்துவது குறைவு அல்லவா? அதே போல இங்கும் ஒரு இணையத்துக்கு என்று தனித்துவமான வார்ப்புரு ஒன்று தேவையானது.   இணைய உலகில் இலவசமாகவும் காசுக்கும் ஏராளமான ஜூம்லாச் சட்டைகள் வாங்கலாம். அவை ஒவ்வொன்றும் உங்கள் தேவையைப் […]

ஜூம்லா (2)
Posted by
Posted in

ஜூம்லா (2)

பகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு  அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம். தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம் நிர்வாக மையம் அணுக […]

All Posts from This Month