Monthly Archives: ஜூன் 2015

எக்சாம்ப் (XAMPP)
Posted by

எக்சாம்ப் (XAMPP)

எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, […]

இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்
Posted by

இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்

இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]

அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): அறிமுகம்
Posted by

அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): அறிமுகம்

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது. எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம்.  நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் […]

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்
Posted by

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்

ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது.  இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி […]

விண்மீன்களின் உருவாக்கம்
Posted by

விண்மீன்களின் உருவாக்கம்

 அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்
Posted by

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்

விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]

செங்குறுமீன்
Posted by

செங்குறுமீன்

செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது.  ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில்  அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான […]

அணுத்துகள்
Posted by

அணுத்துகள்

பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது  இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது.  அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, […]

அணுக்கட்டமைப்பு
Posted by

அணுக்கட்டமைப்பு

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது  நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன.  அறிவியல் சிந்தனைகளில் 1808ஆம் ஆண்டு ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கை, வேதியியல் சிந்தனைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்கொள்கையின்படி, எல்லா பொருட்களும் […]

இலைசோசோம்
Posted by

இலைசோசோம்

பகுப்புடல்கள் அல்லது இலைசோசோம்கள் (Lysosome) விலங்கு உயிரணுக்களில் (மெயக்கருவுயிரிக் கலங்களில்) உள்ள நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை என்று கருதப்படுகின்றது. எல்லா விலங்குக் கலங்களிலும் லைசோசோம் காணப்பட்டாலும் பாலூட்டிகளில் சிவப்பணுக்களில் இவை காணப்படுவதில்லை. தசைக் கலங்களிலும் இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. மேலணி மற்றும் சுரப்பிக் கலங்களில் இதன்  எண்ணிக்கை அதிகம். இவை உயிரணுக்களின் கழிவுப் பொருட்கள், தேவையிšலாத முதிர்ச்சியடைந்த நுண்ணுறுப்புகள், மேலதிகமான எண்ணிக்கையைக் கொண்ட நுண்ணுறுப்புகள், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் போன்றவற்றைச் செரிக்கும் (அழிக்கும்) […]

All Posts from This Month