Monthly Archives: ஆகஸ்ட் 2015

உயிர்ச்சத்து டி
Posted by

உயிர்ச்சத்து டி

உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]

நச்சுத்தன்மை: பரசிட்டமோல்
Posted by

நச்சுத்தன்மை: பரசிட்டமோல்

வலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான  பெரும்பாலானவர்களுக்கு முதல் 24  மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]

இஞ்சி மருத்துவம்
Posted by

இஞ்சி மருத்துவம்

இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]

அயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)
Posted by

அயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)

அயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச்சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும்.  ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: […]

குவாண்டம் எண்கள்
Posted by

குவாண்டம் எண்கள்

ஓர் அணுவில் காணப்படும் இலத்திரன்களின் நிலையை விபரிக்கத் தேவைப்படும் குறிப்புகளே குவாண்டம் எண்களாகும் (இலங்கை வழக்கு: சக்திச்சொட்டெண்). ஓர் அணுவில் பல எண்ணிக்கை உடைய இலத்திரன் சுற்றுப்பாதைகள் காணப்படும். ஒரு சுற்றுப்பாதையின் அளவு சிறியதாயின், இலத்திரன், உட்கருவின் அண்மையில் அமைய வாய்ப்புண்டு. இவ்வகை சுற்றுப்பாதைகள் குறிப்பிட்ட எண் தொகுதிகளாக ‘குவாண்டம் எண்களாக’ குறிப்பிடப்படுகின்றன. ஆற்றல், அளவு, வடிவம், மற்றும் இலத்திரன் திசை நோக்கும் பண்பு ஆகியவைகளை குறிப்பதற்கு நான்கு குவாண்டம் எண்கள் (n, ℓ, m, s) தேவைப்படுகின்றன. முதன்மைக் […]

உயிர்ச்சத்து
Posted by

உயிர்ச்சத்து

உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]

ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை
Posted by

ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை

 ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம் பாடத்தில் இலத்திரன்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டது. இலத்திரன் நிரப்பப்படுதல்  ls, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s …………. எனும் வரிசையில் அமைந்துள்ளன, எனினும் சில தனிமங்களில் உறுதி நிலையைப் பெறுவதற்காக இலத்திரன்கள் கடைசி வரிசையில் மாறி அமையும்.செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கை = 29 (2, 8, 18, 1)எதிர்பார்க்கப்படும் இலத்திரன் நிலையமைப்பு =1s2, […]

All Posts from This Month