இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]
உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]
சென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project […]
விசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]
தமிழ்மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல். பதிப்பு விபரம் அடிப்படைத்தமிழிலக்கணம். எம்.ஏ.நுஃமான். கல்முனை: வாசகர் சங்கம், 2வது பதிப்பு, ஜுலை 2000. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்) 214 பக்கம். விலை: ரூபா 225. அளவு: 21.5*14 சமீ. இது ஒரு நூலகம் சேகரிப்பு.
கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற்பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.
குறுந்தொகை எட்டுத்தொகையில் அக நூல்கள் பிரிவில் அடங்குகின்றது. அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பிகாமஞ் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே.”
நுண்நோக்கி (இலங்கை வழக்கு – நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். உயிரணுக்கள் (கலங்கள்) சிக்கலான தன்மைகளையுடையவை, மிக நுண்ணிய அமைப்புக்களைக் கொண்டுள்ளவை, இத்தகைய சிறிய அமைப்பும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதன் நுண்ணுறுப்புகளும் உயிரணு வல்லுநர்களுக்கு அதன் அமைப்பையும், செயற்பாடுகளையும் […]
ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் […]