ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் […]