சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் […]
வாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை வனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை ஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம் தேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை யும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை அனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு ஏன் தெரிவதில்லை
புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.
பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.
பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த நாராயண மகாராஜா. பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர். பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த […]
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நன்றி: த.உழவன் (தமிழ் விக்சனரி)
மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற, ஒப்புயர்வற்ற புதினம். மாக்சிம் கோர்க்கி (Макси́м Го́рький) – ஒரு புகழ் பெற்ற இரசிய நாட்டு எழுத்தாளர் (28 மார்ச் ( 16)]1868 – 18 யூன் 1936). மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் […]