தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாகத் திகழ்கின்றது. இக்காப்பியத்தின் தலைவி கண்ணகியின் காலில் அணிகலனாக விளங்கிய சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் (சிலம்பு + அதிகாரம்) அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்ற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு […]
பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே […]
முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]