குறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் […]
நன்றி: Mr.GK https://www.youtube.com/channel/UC5cY198GU1MQMIPJgMkCJ_Q
MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. “கணியம்” மின் மாத இதழில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன்,மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும்editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள். து.நித்யா nithyadurai87@gmail.com மின்னூலாக்கம் : து.நித்யா மின்னூல் வெளியீடு : […]
ரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. ஐரோப்பக்கண்டத்தில் சொந்த மொழி பேசுவோரின் மொழிகளுள் முதலாம் இடத்தை வகிப்பதும் இதுவே. உருசிய மொழியில் மெல்லின, வல்லின ஒலியும் உண்டு. ஒரு சொல்லில் உயிரெழுத்து நெடிலாக உச்சரிக்கப்படும் போது அந்த நெடில் உயிரெழுத்து “ ‘ ” குறி மூலம் […]
வாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை வனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை ஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம் தேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை யும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை அனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு ஏன் தெரிவதில்லை
பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.
மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற, ஒப்புயர்வற்ற புதினம். மாக்சிம் கோர்க்கி (Макси́м Го́рький) – ஒரு புகழ் பெற்ற இரசிய நாட்டு எழுத்தாளர் (28 மார்ச் ( 16)]1868 – 18 யூன் 1936). மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் […]
தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாகத் திகழ்கின்றது. இக்காப்பியத்தின் தலைவி கண்ணகியின் காலில் அணிகலனாக விளங்கிய சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் (சிலம்பு + அதிகாரம்) அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்ற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு […]