பல்கலைக்கழகம் தமிழ்

விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்
Posted by

விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்

சென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும்  எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில்  New Project […]

விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1
Posted by

விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1

விசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு:  Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]

அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ. நுஃமான்
Posted by

அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ. நுஃமான்

தமிழ்மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல். பதிப்பு விபரம் அடிப்படைத்தமிழிலக்கணம். எம்.ஏ.நுஃமான். கல்முனை: வாசகர் சங்கம், 2வது பதிப்பு, ஜுலை 2000. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்) 214 பக்கம். விலை: ரூபா 225. அளவு: 21.5*14 சமீ. இது ஒரு நூலகம் சேகரிப்பு.

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்
Posted by

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற்பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.

குறுந்தொகை
Posted by

குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகையில் அக நூல்கள் பிரிவில் அடங்குகின்றது. அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பிகாமஞ் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே.”

Posted by

நுண்நோக்கியியல்

நுண்நோக்கி (இலங்கை வழக்கு – நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். உயிரணுக்கள் (கலங்கள்) சிக்கலான தன்மைகளையுடையவை, மிக நுண்ணிய அமைப்புக்களைக் கொண்டுள்ளவை, இத்தகைய சிறிய அமைப்பும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதன் நுண்ணுறுப்புகளும் உயிரணு வல்லுநர்களுக்கு அதன் அமைப்பையும், செயற்பாடுகளையும் […]

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி
Posted by

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி

ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.

தமிழச்சியின் கத்தி
Posted by

தமிழச்சியின் கத்தி

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் […]

குடும்ப விளக்கு
Posted by

குடும்ப விளக்கு

‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார்.   மேலும் படிக்க http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114602.htm http://library.senthamil.org/075.htm

ஆத்திசூடி
Posted by

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.   கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல் கொடுக்க முடிந்த பொருளை […]

Map of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்