பல்கலைக்கழகம் தமிழ்

கடைச்சங்கம்
Posted by

கடைச்சங்கம்

இடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என […]

இடைச்சங்கம்
Posted by

இடைச்சங்கம்

முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். […]

தலைச்சங்கம் (முதற்சங்கம்)
Posted by

தலைச்சங்கம் (முதற்சங்கம்)

ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற […]

தமிழ்ச்சங்கம்
Posted by

தமிழ்ச்சங்கம்

தமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின்  காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் […]

இஞ்சி மருத்துவம்
Posted by

இஞ்சி மருத்துவம்

இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]

அயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)
Posted by

அயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)

அயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச்சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும்.  ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: […]

குவாண்டம் எண்கள்
Posted by

குவாண்டம் எண்கள்

ஓர் அணுவில் காணப்படும் இலத்திரன்களின் நிலையை விபரிக்கத் தேவைப்படும் குறிப்புகளே குவாண்டம் எண்களாகும் (இலங்கை வழக்கு: சக்திச்சொட்டெண்). ஓர் அணுவில் பல எண்ணிக்கை உடைய இலத்திரன் சுற்றுப்பாதைகள் காணப்படும். ஒரு சுற்றுப்பாதையின் அளவு சிறியதாயின், இலத்திரன், உட்கருவின் அண்மையில் அமைய வாய்ப்புண்டு. இவ்வகை சுற்றுப்பாதைகள் குறிப்பிட்ட எண் தொகுதிகளாக ‘குவாண்டம் எண்களாக’ குறிப்பிடப்படுகின்றன. ஆற்றல், அளவு, வடிவம், மற்றும் இலத்திரன் திசை நோக்கும் பண்பு ஆகியவைகளை குறிப்பதற்கு நான்கு குவாண்டம் எண்கள் (n, ℓ, m, s) தேவைப்படுகின்றன. முதன்மைக் […]

ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை
Posted by

ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை

 ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம் பாடத்தில் இலத்திரன்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டது. இலத்திரன் நிரப்பப்படுதல்  ls, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s …………. எனும் வரிசையில் அமைந்துள்ளன, எனினும் சில தனிமங்களில் உறுதி நிலையைப் பெறுவதற்காக இலத்திரன்கள் கடைசி வரிசையில் மாறி அமையும்.செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கை = 29 (2, 8, 18, 1)எதிர்பார்க்கப்படும் இலத்திரன் நிலையமைப்பு =1s2, […]

ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம்
Posted by

ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம்

பௌலியின் தவிர்ப்புத் தத்துவம்: குறிப்பிட்ட அணுவில், இலத்திரன்களின் குவாண்டம் எண்களின் பங்கீடு பௌலியின் தவிர்ப்பு தத்துவத்தைப் பின்பற்றி அமைகின்றன. ஓர் அணுவின் சுற்றுப்பாதைத் துணை ஓட்டில் உள்ள இரு இலத்திரன்களின்* குவாண்டம் பெறுமானம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட ஓட்டில், n, l, m ஆகிய மூன்று குவாண்டம் எண்களின் ஒரே அளவு பெறுமானத்தை இரு வெவ்வேறு இலத்திரன்கள் பெற்றிருக்கலாம்.  ஆனால் நான்காம் குவாண்டம் எண்ணின் பெறுமானம் (s) மாறுபடும். எனவே, s = +1/2 […]

உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை
Posted by

உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும்.   அ, […]

Map of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்