பல்கலைக்கழகம் தமிழ்

விண்மீன்களின் உருவாக்கம்
Posted by

விண்மீன்களின் உருவாக்கம்

 அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்
Posted by

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்

விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]

செங்குறுமீன்
Posted by

செங்குறுமீன்

செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது.  ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில்  அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான […]

அணுத்துகள்
Posted by

அணுத்துகள்

பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது  இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது.  அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, […]

அணுக்கட்டமைப்பு
Posted by

அணுக்கட்டமைப்பு

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது  நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன.  அறிவியல் சிந்தனைகளில் 1808ஆம் ஆண்டு ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கை, வேதியியல் சிந்தனைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்கொள்கையின்படி, எல்லா பொருட்களும் […]

வாழை மருத்துவம்
Posted by

வாழை மருத்துவம்

வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் […]

அணுவாரை
Posted by

அணுவாரை

ஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது.   தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக […]

உயிரணு வகைகள் (கல வகைகள்)
Posted by

உயிரணு வகைகள் (கல வகைகள்)

உயிரணுக்களை பல்வகையாக பாகுபடுத்தலாம். உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருகல உயிரினம், பல்கல உயிரினம் எனவும் உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து நிலைக்கருவிலி (புரோகரியோட்டுக்கள் – prokaryotes ), மெய்க்கருவுயிரி (இயூகரியோட்டுக்கள் –  eukaryotes ) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரி உயிரணுக்கள் அவற்றின் அமைப்பைப் பொறுத்து மேலும் தாவரக் கலம், விலங்குக் கலம் எனவும் வகுக்கப்படுகின்றது. இவற்றை விடப் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பாட்டைப் பொறுத்தும் அமைப்பைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. எ.கா: குருதிக்கலம், குருத்தணு, நரம்புக் கலம்.  உயிரணுவின் கருவின் தன்மையைப் […]

கறிவேப்பிலை
Posted by

கறிவேப்பிலை

சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும்  கறிவேப்பிலை பல  மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்; நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை,  கருவேப்பிலை. கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் […]

இணையதளம் உருவாக்கல்
Posted by

இணையதளம் உருவாக்கல்

இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம். திரளப் பெயர் (domain name) இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது. […]

Map of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்