பல்கலைக்கழகம் தமிழ்

தமிழ் இலக்கணம் – அறிமுகம்
Posted by

தமிழ் இலக்கணம் – அறிமுகம்

முத்தமிழ் என்று அழைக்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கின்றது.  அகத்திய மாமுனிவரால் இயற்றப்பட்ட அகத்தியம் என்னும் நூலே முதலாவது தமிழ் இலக்கண நூல் என்று கருதப்படுகிறது, அதன் பின்னர்  தொல்காப்பியமும் பின்னர் 13ம் நூற்றாண்டளவில் நன்னூலும் மூன்று பிரசித்திபெற்ற  இலக்கண நூல்கள் ஆகும்.   அகத்தியம் மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய […]

அணுக்கொள்கை
Posted by

அணுக்கொள்கை

வேதியியல் மற்றும் இயற்பியலில், அணுக் கொள்கை என்பது ஒரு பொருளின் இயல்பைப் பற்றிய கோட்பாடு, இதில் ஒரு பொருளானது அணு எனும் சிறிய அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது; அதனை மேலும் பிரிக்கமுடியுமா இல்லையா என்பது பற்றிய பலரது கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது.  ரொபர்ட் போய்ல் (Robert Boyle)   ரொபர்ட் போய்ல் (25 சனவரி  1627 – 31 திசம்பர்  1691) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இரசவாதியாக இருந்தார், போயிலின் விதி எனும் வேதியியல் விதி இவரால் ஆக்கப்பட்டது. இவரே […]

ஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))
Posted by
Posted in

ஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))

இதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம். இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட  “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று […]

முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)
Posted by

முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)

(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது) சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன.  முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் […]

கலம் (உயிரணு) – அறிமுகம் : உயிரணுக் கொள்கை
Posted by

கலம் (உயிரணு) – அறிமுகம் : உயிரணுக் கொள்கை

உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு (கலம்) ஆகும். உயிரினங்கள் தனியொரு உயிரணுவாலோ அல்லது பல உயிரணுக்களின் சேர்க்கையாலோ ஆக்கப்பட்டவை. தனியொரு உயிரணுவினால் உருவான உயிரினங்களாக அமீபா, பக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள் பல்லுயிரணுக்களுக்கு உதாரணமாகும். விலங்குகளின் உயிரணு தாவரங்களினதில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. விலங்குகளில் உயிரணுக்கள் பல சேர்ந்து இழையங்களாகவும் (tissue) பல இழையங்கள் சேர்ந்து உறுப்புக்கள் (organs) தோன்றியும் உறுப்புக்களின் தொகுப்பு தொகுதியாகவும் (system) இறுதியில் பல […]

ஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்
Posted by
Posted in

ஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்

ஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது. எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. […]

ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்
Posted by
Posted in

ஜூம்லா பகுதி 3: வார்ப்புருக்கள்

ஜூம்லா வார்ப்புருக்கள் (joomla templates) பற்றி இங்கே விளக்கபாடுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு அதன் வெளிப்பார்வை மிக முக்கியம். நாம் விதம் விதமாய் சட்டை உடுத்துவது போலவே இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி உள்ள சட்டையைப் பலர் பயன்படுத்துவது குறைவு அல்லவா? அதே போல இங்கும் ஒரு இணையத்துக்கு என்று தனித்துவமான வார்ப்புரு ஒன்று தேவையானது.   இணைய உலகில் இலவசமாகவும் காசுக்கும் ஏராளமான ஜூம்லாச் சட்டைகள் வாங்கலாம். அவை ஒவ்வொன்றும் உங்கள் தேவையைப் […]

ஜூம்லா (2)
Posted by
Posted in

ஜூம்லா (2)

பகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு  அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5.  பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம். தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil”  எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம் நிர்வாக மையம் அணுக […]

நுண் உறுப்புகள்
Posted by

நுண் உறுப்புகள்

”’நுண் உறுப்புகள்”’ அல்லது ”’உயிரணுவின் உள்ளுறுப்புகள்”’ (”organelle”) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு [[உயிரணு]]வின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன. [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. [[நிலைக்கருவிலி]]களிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.1 நுண்ணுறுப்புகள் அனைத்தும் [[நுண்நோக்கி]] கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான […]

உயிரணு உயிரியல்
Posted by

உயிரணு உயிரியல்

”உயிரணு உயிரியல்”’ அல்லது ”’கலவுயிரியல்”’ (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு,  (நுண் உறுப்பு) புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல […]

Map of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்