சி செந்தி

ஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)
Posted by

ஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் […]

விவிலியம் – புதிய ஏற்பாடு
Posted by

விவிலியம் – புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.

பகவத் கீதையின் சாரம்
Posted by

பகவத் கீதையின் சாரம்

பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த நாராயண மகாராஜா. பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.   பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த […]

ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை
Posted by

ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிளாண்டர் புலத்தில்
Posted by

பிளாண்டர் புலத்தில்

பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே […]

முதலுதவி
Posted by

முதலுதவி

முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]

இசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள்
Posted by

இசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள்

வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான  அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும்  இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் […]

தூக்கத்தில் நடத்தல்
Posted by

தூக்கத்தில் நடத்தல்

தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]

இதய நிறுத்தம் (Cardiac arrest)
Posted by

இதய நிறுத்தம் (Cardiac arrest)

இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]

Map of All Posts by சி செந்தி