உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]
பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு […]
உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]
வலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]
இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]
புளோரின் (F) எனும் தனிமத்தின் அயன் வடிவமே புளோரைடு (F-) ஆகும், இது இயற்கையில் பல்வேறுபட்ட மூலங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள், தேநீர், கனிப்பொருள் நீர் (mineral water), கல்லீரல், மீன், முட்டை, கடல் உணவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே கிடைக்கின்றது. புளோரின் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து அல்ல, எனினும் இது பற்சொத்தையைக் கட்டுப்படுத்துவது மற்றுமன்றி, கல்சியம், உயிர்ச்சத்து ‘டி’யுடன் சேர்ந்து என்புக்கோறை நோய் (osteoporosis) வராமல் தடுக்கவும் உதவுகின்றது. பல் மருத்துவர்களால் பற்களைச் சுத்தம் செய்த பிற்பாடு பயன்படுத்தப்படுகின்றது. இதய […]
அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது. எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் […]
பகுப்புடல்கள் அல்லது இலைசோசோம்கள் (Lysosome) விலங்கு உயிரணுக்களில் (மெயக்கருவுயிரிக் கலங்களில்) உள்ள நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை என்று கருதப்படுகின்றது. எல்லா விலங்குக் கலங்களிலும் லைசோசோம் காணப்பட்டாலும் பாலூட்டிகளில் சிவப்பணுக்களில் இவை காணப்படுவதில்லை. தசைக் கலங்களிலும் இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. மேலணி மற்றும் சுரப்பிக் கலங்களில் இதன் எண்ணிக்கை அதிகம். இவை உயிரணுக்களின் கழிவுப் பொருட்கள், தேவையிலாத முதிர்ச்சியடைந்த நுண்ணுறுப்புகள், மேலதிகமான எண்ணிக்கையைக் கொண்ட நுண்ணுறுப்புகள், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் போன்றவற்றைச் செரிக்கும் (அழிக்கும்) […]
அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் […]