வலைப்பதிவு

குறிஞ்சி நிலம்
Posted by

குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை  குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் […]

பருவகாலங்கள்
Posted by

பருவகாலங்கள்

பூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் தான் நம் கால நிலைகளை (கோடை, மழை, குளிர், வசந்தம்) நிர்ணயிக்கின்றன என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நீள் வட்டப்பாதையில் வரும் பூமி வருடத்தில் இரு முறை சூரியனுக்கு அருகாமையும், இரு முறை சூரியனுக்குத் தொலைவாகவும் இருப்பதால் இரண்டு கோடையும் இரண்டு குளிர் காலமும் மட்டும் தானே இருக்க வேண்டும்? மாறாக […]

ஒளி ஆண்டு (ஒளியாண்டு)
Posted by

ஒளி ஆண்டு (ஒளியாண்டு)

ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது? கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு. ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். 1 நொடிக்கு = […]

எளிய தமிழில் MySQL
Posted by

எளிய தமிழில் MySQL

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள்  ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. “கணியம்” மின் மாத இதழில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன்,மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும்editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள். து.நித்யா nithyadurai87@gmail.com மின்னூலாக்கம்  : து.நித்யா மின்னூல் வெளியீடு : […]

தமிழில் உருசிய மொழி: அறிமுகம் (பகுதி 1)
Posted by

தமிழில் உருசிய மொழி: அறிமுகம் (பகுதி 1)

  ரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. ஐரோப்பக்கண்டத்தில் சொந்த மொழி பேசுவோரின் மொழிகளுள் முதலாம் இடத்தை வகிப்பதும் இதுவே. உருசிய மொழியில் மெல்லின, வல்லின ஒலியும் உண்டு. ஒரு சொல்லில் உயிரெழுத்து நெடிலாக உச்சரிக்கப்படும் போது அந்த நெடில் உயிரெழுத்து “ ‘ ” குறி மூலம் […]

விமானம் வானில் பறப்பது எப்படி?
Posted by

விமானம் வானில் பறப்பது எப்படி?

வானவூர்தி (விமானம்) வானில் பறப்பது எப்படி, எதனடிப்படையில் தெரியுமா? பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்… என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, மனிதனுக்கு பறவைகளைப்போல் வானில் பறக்க வெகுநாட்களாகவே ஆசை. தமிழனும் மரக்கலங்கள் மூலம் பெருங்கடல்களை வசப்படுத்தியபின், காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் எனத் தன் ஆசையை உறுதிபடக் கூறினான். ஒரு காலத்தில் வானில் விமானம் பறந்தால், வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம், இன்றோ, விமானப் பயணம் என்பது வெகு சாதரணமாகிவிட்டது. வெளிநாடுகள் என்றில்லாமல் உள்நாட்டுக்குள்ளாகவே பயணிக்கவும் விமானத்தைப் பயன்படுத்துதல் என்பதும் இலகுவாகிவிட்டது. முதற்பயணத்தில், […]

மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்
Posted by

மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்

மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ? அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]

ஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)
Posted by

ஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் […]

Map of All Published Posts