வலைப்பதிவு

Posted by

நுண்நோக்கியியல்

நுண்நோக்கி (இலங்கை வழக்கு – நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். உயிரணுக்கள் (கலங்கள்) சிக்கலான தன்மைகளையுடையவை, மிக நுண்ணிய அமைப்புக்களைக் கொண்டுள்ளவை, இத்தகைய சிறிய அமைப்பும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதன் நுண்ணுறுப்புகளும் உயிரணு வல்லுநர்களுக்கு அதன் அமைப்பையும், செயற்பாடுகளையும் […]

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி
Posted by

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி

ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.

தமிழச்சியின் கத்தி
Posted by

தமிழச்சியின் கத்தி

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் […]

பறக்கும் விலங்குகள்
Posted by

பறக்கும் விலங்குகள்

பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு […]

குடும்ப விளக்கு
Posted by

குடும்ப விளக்கு

‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார்.   மேலும் படிக்க http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114602.htm http://library.senthamil.org/075.htm

ஆத்திசூடி
Posted by

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.   கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல் கொடுக்க முடிந்த பொருளை […]

கடைச்சங்கம்
Posted by

கடைச்சங்கம்

இடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என […]

இடைச்சங்கம்
Posted by

இடைச்சங்கம்

முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். […]

தலைச்சங்கம் (முதற்சங்கம்)
Posted by

தலைச்சங்கம் (முதற்சங்கம்)

ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற […]

தமிழ்ச்சங்கம்
Posted by

தமிழ்ச்சங்கம்

தமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின்  காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் […]

Map of All Published Posts