பூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் தான் நம் கால நிலைகளை (கோடை, மழை, குளிர், வசந்தம்) நிர்ணயிக்கின்றன என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நீள் வட்டப்பாதையில் வரும் பூமி வருடத்தில் இரு முறை சூரியனுக்கு அருகாமையும், இரு முறை சூரியனுக்குத் தொலைவாகவும் இருப்பதால் இரண்டு கோடையும் இரண்டு குளிர் காலமும் மட்டும் தானே இருக்க வேண்டும்? மாறாக […]
ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது? கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு. ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். 1 நொடிக்கு = […]
வானவூர்தி (விமானம்) வானில் பறப்பது எப்படி, எதனடிப்படையில் தெரியுமா? பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்… என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, மனிதனுக்கு பறவைகளைப்போல் வானில் பறக்க வெகுநாட்களாகவே ஆசை. தமிழனும் மரக்கலங்கள் மூலம் பெருங்கடல்களை வசப்படுத்தியபின், காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் எனத் தன் ஆசையை உறுதிபடக் கூறினான். ஒரு காலத்தில் வானில் விமானம் பறந்தால், வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம், இன்றோ, விமானப் பயணம் என்பது வெகு சாதரணமாகிவிட்டது. வெளிநாடுகள் என்றில்லாமல் உள்நாட்டுக்குள்ளாகவே பயணிக்கவும் விமானத்தைப் பயன்படுத்துதல் என்பதும் இலகுவாகிவிட்டது. முதற்பயணத்தில், […]
மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ? அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]
அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]
விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]
செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில் அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான […]
பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது. அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, […]
ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளில் 1808ஆம் ஆண்டு ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கை, வேதியியல் சிந்தனைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்கொள்கையின்படி, எல்லா பொருட்களும் […]
ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற […]