பூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் தான் நம் கால நிலைகளை (கோடை, மழை, குளிர், வசந்தம்) நிர்ணயிக்கின்றன என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நீள் வட்டப்பாதையில் வரும் பூமி வருடத்தில் இரு முறை சூரியனுக்கு அருகாமையும், இரு முறை சூரியனுக்குத் தொலைவாகவும் இருப்பதால் இரண்டு கோடையும் இரண்டு குளிர் காலமும் மட்டும் தானே இருக்க வேண்டும்? மாறாக […]
மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ? அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]