அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]
விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]
செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில் அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான […]
ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற […]
விண்மீன்கள் அதனது நிறமாலையைக் (ஒரு விண்மீனின் புறப்பரப்பின் வெப்பத் தன்மையைப் பொறுத்து, அவை பல்வேறுபட்ட நிறங்களாகக் காட்சியளிப்பது. ) கொண்டு வகைப்பாடு செய்யப்படுகின்றது. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமுள்ளவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. மேக்நாத் சாகா (Megh Nad Saha) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு […]
விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது அண்டவெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். எமது பூமிக்கு அண்மையில் உள்ள விண்மீன் சூரியனாகும், இதுவே பூமிக்கு சக்தி வழங்கியாகத் திகழ்கின்றது. விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள்ளன. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் […]
புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று செய்திகள் படிக்கின்றோம், அவை எங்கே அமைந்துள்ளன? அங்கு உயிரினம் உண்டா? எங்கள் பூமி போன்றே அவற்றின் அமைப்பு உள்ளதா என்பது பற்றிப் பார்க்கத் தொடங்கினால் மிகவும் சுவையான விடயமாக இருக்கும். நாம் வாழும் பூமி, பூமிக்கு சக்தி வழங்கும் கதிரவன், சகோதரக் குடும்பங்கள் இவை யாவும் சேர்த்து சூரியக் குடும்பம் என்கின்றோம். நமது சூரியன் ஒரு வகை நட்சத்திரம் எனக் கருதுகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ கிரகங்களும் விண் கற்களும் […]