பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு […]
முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா (Phylum Echinodermata) கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குகளின் ஒரு தொகுதியாகும். அலையிடை மண்டலம் தொடக்கம் ஆழ்கடல் மண்டலம் வரையிலானபெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. இத்தொகுதியில் ஏறத்தாழ 7000 இனங்கள் உயிர்வாழ்கின்றன. எண்ணிக்கையில் இரண்டாவதாக, முதுகுநாணிகளை அடுத்து இருவாயுளிகள் (டியூட்டெரோஸ்டோமியா; Deuterostomia) பெருந்தொகுதிக்குள் அடங்கும் உயிரினத் தொகுதி ஆகும். இவை நன்னீரிலோ நிலப்பகுதிகளிலோ வசிப்பது இல்லை. கிரேக்க ἐχινοδέρματα (ἐχινός– முட்கள் , δέρμα– தோல்; முள்ளை உடைய தோல்) எனும் சொல்லில் […]
துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹலோமொனஸ் டைட்டானிசே (Halomonas titanicae) என்ற உயிரியல் பெயர் கொண்ட புதுவித பாக்டீரியா இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்துகிறது. கூரான பனிக்கட்டிகள் தொங்குவது போன்று,நுண் துளைகளைக் கொண்ட,எளிதில் உருக்குலைந்துவிடும் அமைப்பானது இரும்பில் உருவாகுகின்றது; கூர்த்துருத்துகள்கள் (rusticles) என்றழைக்கப்படும் இந்த அமைப்பிலேயே 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப் பாக்டீரிய இனங்கள் அங்குள்ள இரும்பை உணவாகக் கொண்டு வசிக்கின்றன. இதன் காரணமாக இறுதியில் டைட்டானிக் கப்பலின் மீதிகள் முற்றிலும் மறைந்துவிடும். […]