ஜூம்லா ஒரு பிரசித்திபெற்ற இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். PHP நிரல் மொழியில் ஆக்கப்பெற்றிருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோருக்கு PHP நிரல் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. Open Source Matters (OSM) எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். இதன் நிரல் மொழியாக பி.எச்.பியும் (PHP) தரவுத்தள மொழியாக மைசீக்குவெலும் (MySQL) தொழிற்படுகின்றது, எனினும் இவற்றைப் பற்றிய அறிவு ஜூம்லா […]
கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் […]
எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, […]
இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]
இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம். திரளப் பெயர் (domain name) இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது. […]
இதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம். இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று […]
ஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது. எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. […]
ஜூம்லா வார்ப்புருக்கள் (joomla templates) பற்றி இங்கே விளக்கபாடுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு அதன் வெளிப்பார்வை மிக முக்கியம். நாம் விதம் விதமாய் சட்டை உடுத்துவது போலவே இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி உள்ள சட்டையைப் பலர் பயன்படுத்துவது குறைவு அல்லவா? அதே போல இங்கும் ஒரு இணையத்துக்கு என்று தனித்துவமான வார்ப்புரு ஒன்று தேவையானது. இணைய உலகில் இலவசமாகவும் காசுக்கும் ஏராளமான ஜூம்லாச் சட்டைகள் வாங்கலாம். அவை ஒவ்வொன்றும் உங்கள் தேவையைப் […]
பகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5. பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5. பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம். தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம் நிர்வாக மையம் அணுக […]