குறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் […]
சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் […]
இடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என […]
முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். […]
ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற […]
தமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் […]