தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும். அ, […]
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று. முதலெழுத்துகள் தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் […]
முத்தமிழ் என்று அழைக்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கின்றது. அகத்திய மாமுனிவரால் இயற்றப்பட்ட அகத்தியம் என்னும் நூலே முதலாவது தமிழ் இலக்கண நூல் என்று கருதப்படுகிறது, அதன் பின்னர் தொல்காப்பியமும் பின்னர் 13ம் நூற்றாண்டளவில் நன்னூலும் மூன்று பிரசித்திபெற்ற இலக்கண நூல்கள் ஆகும். அகத்தியம் மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய […]