Category Archives: தமிழ் இலக்கியம்

சிலப்பதிகாரம்
Posted by

சிலப்பதிகாரம்

தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாகத் திகழ்கின்றது. இக்காப்பியத்தின் தலைவி கண்ணகியின் காலில் அணிகலனாக விளங்கிய சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் (சிலம்பு + அதிகாரம்)  அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்ற்றியவர்  இளங்கோவடிகள் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு […]

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்
Posted by

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற்பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.

குறுந்தொகை
Posted by

குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகையில் அக நூல்கள் பிரிவில் அடங்குகின்றது. அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பிகாமஞ் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே.”

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி
Posted by

ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி

ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை நல்வழி, மூதுரை இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை. மூதுரை நூலை ‘வாக்குண்டாம்’ எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்.

தமிழச்சியின் கத்தி
Posted by

தமிழச்சியின் கத்தி

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் […]

குடும்ப விளக்கு
Posted by

குடும்ப விளக்கு

‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார்.   மேலும் படிக்க http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114602.htm http://library.senthamil.org/075.htm

All Posts from This Category