முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]
வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் […]
தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]
இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]
உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]
உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]
வலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]
இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]