இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]
இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]
இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர்) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.இதயத்தில் காணப்படும் நான்கு வகையான […]
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் […]