Category Archives: மருத்துவம்

எள்
Posted by

எள்

எள் (Sesamum Indicum)  அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை.  இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது.  செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் […]

புளோரைடு : குறைபாடும் நச்சுமையும்
Posted by

புளோரைடு : குறைபாடும் நச்சுமையும்

புளோரின் (F) எனும் தனிமத்தின் அயன் வடிவமே புளோரைடு (F-) ஆகும், இது இயற்கையில் பல்வேறுபட்ட மூலங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள், தேநீர், கனிப்பொருள் நீர் (mineral water), கல்லீரல், மீன், முட்டை, கடல் உணவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே கிடைக்கின்றது. புளோரின் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து அல்ல, எனினும் இது பற்சொத்தையைக் கட்டுப்படுத்துவது மற்றுமன்றி, கல்சியம், உயிர்ச்சத்து ‘டி’யுடன் சேர்ந்து என்புக்கோறை நோய் (osteoporosis) வராமல் தடுக்கவும் உதவுகின்றது.  பல் மருத்துவர்களால் பற்களைச் சுத்தம் செய்த பிற்பாடு பயன்படுத்தப்படுகின்றது. இதய […]

முகமாற்று அறுவைச்சிகிச்சை
Posted by

முகமாற்று அறுவைச்சிகிச்சை

முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார். [1] முகமாற்றுப் […]

அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): அறிமுகம்
Posted by

அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): அறிமுகம்

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது. எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம்.  நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் […]

வாழை மருத்துவம்
Posted by

வாழை மருத்துவம்

வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் […]

அசைவுப் பார்வையின்மை
Posted by

அசைவுப் பார்வையின்மை

அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் […]

உணவுக்குழாய் நோய்கள்
Posted by

உணவுக்குழாய் நோய்கள்

உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த […]

உயிர்வேதியியல்
Posted by

உயிர்வேதியியல்

உயிர்வேதியியல் (Biochemistry) அல்லது உயிரிய வேதியியல் என்பது வாழும் உயிரினங்களுள் நிகழும் வேதியியற் செயல் முறைகள் பற்றிய கல்வி ஆகும்.உயிர் அறிவியலின் கிளையான உயிர் வேதியியல், உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் நடைபெறும் வேதிவினைகள் பற்றிய நுண் ஆய்வாகும். உயிர்வேதியியல்,  உயிரணுவின் கூறுகளான புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்றவற்றின் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்கிடையே நிகழும் வினைகள் போன்றவற்றை விளக்குகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், […]

கறிவேப்பிலை
Posted by

கறிவேப்பிலை

சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும்  கறிவேப்பிலை பல  மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்; நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை,  கருவேப்பிலை. கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் […]

சுவரெலும்பு
Posted by

சுவரெலும்பு

மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal […]

All Posts from This Category