அயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச்சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும். ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: […]
ஓர் அணுவில் காணப்படும் இலத்திரன்களின் நிலையை விபரிக்கத் தேவைப்படும் குறிப்புகளே குவாண்டம் எண்களாகும் (இலங்கை வழக்கு: சக்திச்சொட்டெண்). ஓர் அணுவில் பல எண்ணிக்கை உடைய இலத்திரன் சுற்றுப்பாதைகள் காணப்படும். ஒரு சுற்றுப்பாதையின் அளவு சிறியதாயின், இலத்திரன், உட்கருவின் அண்மையில் அமைய வாய்ப்புண்டு. இவ்வகை சுற்றுப்பாதைகள் குறிப்பிட்ட எண் தொகுதிகளாக ‘குவாண்டம் எண்களாக’ குறிப்பிடப்படுகின்றன. ஆற்றல், அளவு, வடிவம், மற்றும் இலத்திரன் திசை நோக்கும் பண்பு ஆகியவைகளை குறிப்பதற்கு நான்கு குவாண்டம் எண்கள் (n, ℓ, m, s) தேவைப்படுகின்றன. முதன்மைக் […]
ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம் பாடத்தில் இலத்திரன்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டது. இலத்திரன் நிரப்பப்படுதல் ls, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s …………. எனும் வரிசையில் அமைந்துள்ளன, எனினும் சில தனிமங்களில் உறுதி நிலையைப் பெறுவதற்காக இலத்திரன்கள் கடைசி வரிசையில் மாறி அமையும்.செப்பு (Cu) தனிமத்தின் இலத்திரன்கள் எண்ணிக்கை = 29 (2, 8, 18, 1)எதிர்பார்க்கப்படும் இலத்திரன் நிலையமைப்பு =1s2, […]
பௌலியின் தவிர்ப்புத் தத்துவம்: குறிப்பிட்ட அணுவில், இலத்திரன்களின் குவாண்டம் எண்களின் பங்கீடு பௌலியின் தவிர்ப்பு தத்துவத்தைப் பின்பற்றி அமைகின்றன. ஓர் அணுவின் சுற்றுப்பாதைத் துணை ஓட்டில் உள்ள இரு இலத்திரன்களின்* குவாண்டம் பெறுமானம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட ஓட்டில், n, l, m ஆகிய மூன்று குவாண்டம் எண்களின் ஒரே அளவு பெறுமானத்தை இரு வெவ்வேறு இலத்திரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் நான்காம் குவாண்டம் எண்ணின் பெறுமானம் (s) மாறுபடும். எனவே, s = +1/2 […]
தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் அவசியமாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையான வேதியியல் வல்லுனர்கள் தனிமங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆராய்ந்தனர். மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்பு போன்ற தனிமங்களை தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க முடிந்தது.செருமானிய நாட்டைச் சேர்ந்த […]
ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது. இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி […]
ஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக […]
வேதியியல் மற்றும் இயற்பியலில், அணுக் கொள்கை என்பது ஒரு பொருளின் இயல்பைப் பற்றிய கோட்பாடு, இதில் ஒரு பொருளானது அணு எனும் சிறிய அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது; அதனை மேலும் பிரிக்கமுடியுமா இல்லையா என்பது பற்றிய பலரது கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. ரொபர்ட் போய்ல் (Robert Boyle) ரொபர்ட் போய்ல் (25 சனவரி 1627 – 31 திசம்பர் 1691) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இரசவாதியாக இருந்தார், போயிலின் விதி எனும் வேதியியல் விதி இவரால் ஆக்கப்பட்டது. இவரே […]
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு வேதியியல் விதிகள் சொல்லப்பட்டன. 1789 இல் அன்ரனி லாவோசியர் (Antoine Lavoisier) திணிவுக் காப்பு விதியை (law of conservation of mass) வழிமொழிந்தார், இதன்படி வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும். ஜோசெப் லூயிஸ் புரௌஸ்ட் (Joseph Louis Proust ) என்பவரால் திட்டவிகிதசமவிதி அல்லது மாறாவிகிதசமவிதி (Law of definite proportions / law of […]